மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று 05.09.2026 மற்றும் 07.09.2026 ஆகிய தேதிகளில் குடிமைப்பொருட்கள் வழங்கப்படவுள்ளன.
தமிழ்நாட்டில் அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் குறைந்த விலையிலும் நியாய விலைக்கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நியாயவிலைக்கடைகளுக்கு குடும்ப அட்டையில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் சென்று விற்பனை முனைய இயந்திரத்தில் தங்களின் கைரேகையை பதிவு செய்து பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
மேலும், கடைகளுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே அத்தியாவசியப் பொருட்களை நேரடியாக சென்று வழங்கும் வகையில் இல்லம் சென்று பொதுவிநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்திவருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் இல்லம் சென்று பொதுவிநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் திட்டத்தின் கீழ் வருகின்ற செப்டம்பர் 2026 மாதத்தில் 05.09.2026 (சனிக்கிழமை) மற்றும் 07.09.2026 (திங்கள்கிழமை) ஆகிய தேதிகளில் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று குடிமைப்பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply