ராஜபாளையம் மேற்குதொடர்ச்சி மலை அய்யனார் கோவில் விருதுநகர் மாவட்டம் ஆற்று பகுதியில்,உள்ள நீராவி முள்ளிக்கடவு, மாவரசி அம்மன் கோவில், பிராவடியார், மற்றும் கோட்டை மலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து மலையடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் தற்போது தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவ தால் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பியது. அதேபோல 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் மூலம் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் தேக்கங்களும் நிரம்பின. ஆதலால் மருங்கூர் கண்மாய், ஆதியூர் கண்மாய், பிரண்டை கண்மாய், புளியங்குளம் கண்மாய் உள்ளிட்ட கண்மாய் குளம்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று காலை பழைய பாளையம், சக்கராஜா கோட்டை, சிங்கராஜா கோட்டை, திருவனந்தபு ரம் ஆகிய நான்கு கோட்டை சாவடிகளில் இருந்து சாமை கதிர் கட்டுகளை ஊர்வலமாக வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். வீட்டில் பூஜை செய்து உற வினர்கள் வீடுகளுக்கு சென்று ஒருவருக்கொருவர் சாமை கதிர்களை வழங்கி மகிழ்ந்தனர் ராஜபாளையத்தில் ராஜூக்கள் சமூகம் சார்பில் விவசாயம் செழிக்கவும், உறவுகளுக்குள் எழுந் துள்ள பூசல்களை சரி செய்யவும், சொந்த பந்தங்களை நேரில் கண்டு மகிழ்ச்சியை பரிமாறவும் ''கொத்தலு' என்ற புதியல் விழா பாரம்பரியமாக கொண்டாடப்படுவது வழக்கம். விழாவில் ஊர் நிர்வாகம் சார்பில் சாமை கதிர்கள் அறுவடை செய்து பொது இடத்தில் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும்.கதிர்களை வீட்டில் வைத்து பூஜித்த பின் மாவிளக்கு, கொழுக்கட்டை, பானகரம் வைத்து வழிபட்டு வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு வழங்குவர். அதேபோல் ஒவ்வொருவரும் பூஜித்த கதிர்களை எடுத்துக் கொண்டு உற வினர் வீடுகளுக்கு சென்று வழங்கி உறவுகளை புதுப்பிப்பர்.
கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு ,ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகா தேவ அஷ்டமி, சிறப்பு வழிபாடு அங்க பிரதட்சணம் நடந்தது.காலையிலிருந்து, தொடர் பஜனை, யாக பூஜைகள் ,தொடர்ந்து சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது.புத்திர பாக்கியம், திருமணதடை விலக வேண்டி நேர்த்திக்கடன் செலுத்தியவர்கள் பலர் அங்க பிரதட்சணம் செய்தனர். அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்ட உணவு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஹரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்த விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்வை எனேபிள் இந்தியா அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. சுப்புராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்.துவக்க நிகழ்வில் வத்திராயிருப்பு புதுப்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் திரு. பெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் வசதி, மானியம், தொழில் தொடங்கும் வாய்ப்பு போன்றவற்றை குறித்து விரிவாக விளக்கினார்.இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் - ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் - ஆர்சிட்" அமைப்பின் மேலாளர் திருமதி. பாத்திமா மற்றும் திரு. கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பத்து நாட்கள் நடைபெறும் பயிற்சியின் நோக்கம், தொடரும் பயிற்சி அம்சங்கள் மற்றும் அதன் பயன்கள் பற்றி எடுத்துரைத்தனர். பயிற்சியாளர் திருமதி சுவேதா அவர்கள் பயிற்சியில் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு அம்சங்களை குறித்து விளக்கினார்.இந்தப் பயிற்சியில் வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆண், பெண் மாற்றுத்திறனாளிகள் பெருமளவில் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.சிறப்பு அழைப்பாளர்களையும், கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளையும் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த சைமா அறக்கட்டளை இயக்குநர் திரு. இராஜகோபால் அவர்கள் வரவேற்று உரையாற்றினார்.பின்னர் அவர் பேசும்போது, “இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பயிற்சியாளர்களுக்கு அரசு தரப்பில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் அவர்கள் தொழில் தொடங்க சிறு உதவி தொகை அல்லது பெரிய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வசதி ஏற்பாடு செய்து தரப்படும்,” என்றார். மேலும், “மாவட்டம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியங்களில் இதுபோன்ற பயிற்சிகள் மாற்றுத்திறனாளிகளுக்காக தொடர்ந்து நடத்தப்படும்,” என்றும் தெரிவித்தார்.
ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் நடந்த திருக்கல்யாண விழா டிச.7ல் தொடங்கி காலை, மாலை லட்சார்ச்சனையை தொடர்ந்து, அபிஷேகம், அலங்காரம் நடந்தது. நேற்று காலை திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்து பூஜைகளில் கலந்து கொண்டனர். வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. வேட்டை வெங்கடேச பெருமாள், பத்மாவதி தாயார், திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அன்னதானம் நடந்தது.
கார்த்திகை இரண்டாவது தினத்தை முன்னிட்டு வழிபாட்டிற்காக பக்தர்கள் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் உள்ள அய்யனார் கோயில் ஆற்றில் குவிந்தனர். இங்குள்ள ஆசிரமத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்றபின் ஆற்றில் நீர்வரத்து குறைந்த நேரத்தில் மறுபுறம் உள்ள அய்யனார் கோயிலுக்கு சென்றனர். நீர்வரத்து அதிகரித்ததால், பாதுகாப்பு கருதி பக்தர்களுக்கு, மதியத்துக்கு மேல் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர்.
இராஜபாளையத்தில் பீமா ஜூவல்லரி உங்களுடன் இணைந்து ஓராண்டை நிறைவு செய்கிறது. இந்த ஒரு வருடத்திற்குள் உங்கள் அன்பு எங்களை இராஜபாளையத்தின் விருப்பமான ஜூவல்லரியாக மாற்றியுள்ளது. இந்த மைல்கல்லை நன்றியுடன் கொண்டாடும் விதமாக பிரத்யேக சலுகைகள் மற்றும் கலெக்ஷன்கள் அனுபவிக்க எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.பீமா ஜூவல்லர்ஸ், 875-876, தென்காசி ரோடு. இராஜபாளையம் Ph: 90923 40401 / 40402. கார் பார்க்கிங் வசதி உள்ளது.
தொடர் மழை காரணமாக ராஜபாளையம் சுற்று பகுதியில் ,நிரம்பிய குளங்கள், கண்மாய்களில் குளிப்பதற்கு ,பள்ளி கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு இன்றி மூழ்கி பலியாகும் நிலை உள்ளது.குடி மராமத்து என்ற பெயரில் ஆங்காங்கு தோண்டப்பட்டும், சட்ட விரோதமாக மணல் திருடப்பட்டும் பள்ளங்கள் பாசனத்திற்கு உள்ள கண்மாய்களில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதுஆர்வம் உள்ள சிறுவர்கள். மாணவர்கள்விடுமுறை நாட்களில் பெற்றோர் துணையின்றி குளிப்பதற்கு சென்று நீர் நிலைகளில் ஆழம் தெரியாமல் மூழ்குவதால், உயிர் பலி விபத்துக்கள் ஏற்படுகிறது.நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை, நீர் நிலைகளை சுற்றி தடுப்பு வேலி அமைத்தும், கண் காணிப்புகேமரா பொருத்தியும் தடுப்பதன் மூலம் தேவையற்ற இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க,மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
ராஜபாளையம் வடகிழக்கு பருவமழை ,இந்தாண்டு கூடுதல் மழை பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறி வருகிறது. நேற்று ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, விருதுநகர், காரியாபட்டி என அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது.மாவரிசி அம்மன், முள்ளிக்கடவு, அய்யனார் கோயில் போன்ற பகுதிகளில், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழையால், நீர் வரத்து அதிகரித்து அய்யனார் கோயில்ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
“அல்ட்ராடெக் சுப ஆரம்பம்” ஒவ்வொரு அடியிலும் நாங்கள் இருக்கிறோம்உங்கள் நல்ல தொடக்கத்தை நாங்கள் கொண்டாடுகிறோம். சுப ஆரம்ப விழாவிற்கு உங்களைஅன்புடன் அழைக்கிறோம்சிறப்பு விருந்தினர் - திரு. B. முத்துக்குமாரசுவாமி B.E., (Civil), M.E. (Struct), AMIE, FIV, MISTE, Absara Consultancy, Chairman, Builders Association of India, Rajapalayam Centre.தேதி : 13-11-2025 வியாழக்கிழமைநேரம் : காலை 11.00 மணிஇடம் : காமராஜர் கல்யாண மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் அருகில், ராஜபாளையம்.