செம்பருத்திப் பூ இதழ்களை ரோஸ் வாட்டரில் ஊறவைத்து கற்றாழை ஜெல் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வர முகத்திற்கு இயற்கையான இளஞ்சிவப்பு நிறம் (Pinkish glow) .கொடுக்கும்.
1). உடனே முடியை வலுவாக சீவாதீர்கள் இதனால் முடியின் ரூட்ஸ் (வேர்) பலவீனமாகலாம். 2. ஈரமான முடியுடன் வெளியே போகாதீர்கள்: ஈரமான முடியுடன் வெளியே சென்றால் சளி மற்றும் தலைவலி வர வாய்ப்பு அதிகம். 3. இறுக்கமாக கட்டாதீர்கள். ஈரமான முடியை உடனே இறுக்கமாக கட்டினால் ஹேர் ஃபால் (முடி உதிர்வு)' அதிகரிக்கலாம். ' 4. ட்ரையர் அதிக வெப்பம். ட்ரையரை அதிக வெப்பத்துடன் பயன்படுத்தினால் முடி உலர்ந்து சேதமடையும். 5.இயற்கையாக உலர விடுங்கள்: தலையில் குளித்த பிறகு கொஞ்ச நேரம் இயற்கை காற்றில் (Natural air) முடியை உலர விடுவது சிறந்தது.
அம்மான் பச்சரிசிச் செடியை உடைத்து அதில் இருந்து வரும் பாலைத் தடவப் பரு நீங்கும். ஆவாரம்பூ பொடி, தயிர் இரண்டு தேக்கரண்டி, எலுமிச்சை 2 சொட்டு, கஸ்தூரி மஞ்சள் சிறிதளவு கலந்து தடவி, 15 நிமிடங்கள் ஊறவைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ முகப்பரு நீங்கி, முகம் பொலிவு பெறும்.அரிசித் திப்பிலியைப் பொடி செய்து. தேனில் கலந்து ஐந்து நாட்கள் தடவி வரமரு மறைந்து விடும். தோல் நீக்கிய பப்பாளிப் பழம்,அன்னாசிப் பழம் இரண்டையும் கலந்து மருஉள்ள இடத்தில் பூசலாம்.
15 நாட்களுக்கு தினமும் முகத்தை ஐஸ் தண்ணீரில் நனைப்பதன் மூலம் சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவு பெரும் இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள துளைகள் சுருங்கி தேவையற்ற எண்ணெய் மற்றும் வீக்கத்தை குறைத்து இளமையான தோற்றத்தை பெறலாம் முகப்பரு மற்றும் கருவளையங்களை கட்டுப்படுத்தவும் இது உதவும் இருப்பினும் நேரடியாக ஐஸை சருமத்தில் பயன்படுத்தாமல் டவல் உள்ளே ஐஸ் கட்டியை வைத்து பயன்படுத்தவும்.
தக்காளிச் சாறுடன் தேன் கலந்து பூசுவது, கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் கலந்த பேக் போடுவது போன்ற இயற்கை வழிகள் சிறந்தவை. பீட்ரூட், கேரட் போன்ற சத்தான உணவுகளை உட்கொள்வதும், பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதும் சருமத்தை பளிச்சென்று மாற்றும். தினமும் பசும்பால் தடவி கழுவுவது முகம் பொலிவு பெற உதவும். காய்ச்சாத பச்சைப் பாலை முகத்தில் தடவி 30 நிமிடம் ஊறவைத்து, குளிர்ந்தநீரில் கழுவினால் முகம் மென்மையாகவும் பொலிவாகவும் மாறும்.தக்காளிச் சாறுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ, முகம் பிரகாசமாகும்.கடலை மாவு, மஞ்சள் தூள் மற்றும் தயிர் கலந்து பேக் போட்டு காய்ந்த பின் கழுவவும்.வெதுவெதுப்பான பாதாம் எண்ணெயை முகத்தில் மசாஜ் செய்து வந்தால், ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவுறும்.நன்கு பழுத்த வாழைப்பழத்தை முகத்தில் தடவி வந்தால், முகச் சுருக்கங்கள் நீங்கி இளமையான தோற்றம் கிடைக்கும்.வெயிலால் முகம் கருமையடைந்தால், முட்டை வெள்ளைக் கருவை முகத்தில் தடவி வர கருமை மறையும்.
சோற்றுக் கற்றாழைச் சாற்றை இரவு நேரத்தில் தேய்த்து பூசி ,காலையில் வெந்நீரில் கழுவ முகத்தில் உள்ள மங்கு மறைந்து, முகம் பொலிவு பெரும்.நாட்டு வாழைப்பழத்தை ஆலிவ் எண்ணெயுடன் பிசைந்து, முகத்தில் பூசவும். ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவ, மங்கு மறைந்து முகம் பொலிவு பெறும்.
சர்க்கரை 15 நாட்கள் முழுமையாக தவிர்க்கவும். காலை வெந்நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கவும். உணவை சற்றுக் குறைத்து எடுத்துக்கொள்ளவும். தினமும் 20-30 நிமிடம் வேகமாக நடக்கவும். அதிக புரதம் உள்ள காலை உணவு தேர்வு செய்யவும். ஒரு நாளில் 2 முதல் 2.5 லிட்டர் தண்ணீர் குடிக்கவும். வறுத்த உணவுகளை முழுமையாக தவிர்க்கவும். 7-8 மணி நேரம் உறங்கவும். இரவு 8 மணிக்குள் உணவு முடிக்கவும்.
குப்பைமேனிச் சாற்றுடன் மஞ்சள் பொடியை கலந்து முகத்தில் பூசி வர முகத்தில் முடி வளர்வது குறையும்.
கறிவேப்பிலை இலைகளை சிறந்த முடி டானிக்காக பயன்படுத்தலாம்.கறிவேப்பிலை இலைகளை கொதிக்கவைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, உச்சந்தலையில் தடவவும்.குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். முடி நன்றாக வளர்வதற்கு வாரத்திற்கு இரண்டு முறை இதனை கடைபிடிக்கவும்.
கருவேப்பிலை ஒரு கப்பிடி, கசகசா ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் ஒரு துண்டு வற்றைத் தண்ணீர் விட்டு அரைத்து முகத்தில் பூசவும். 30 நிமிடங்கள் இத்து முகம் கழுவ, தழும்பு குறையும். வடு மறையும் வரை தொடரவும்.