தேவையான பொருட்கள்-1/4 கப் வாழைப்பழம்1/4 கப் மாம்பழம்1/2கப் மாதுளம் பழம்,2 டேபிள்ஸ்பூன்தேன்செய்முறை- வாழைப்பழம், மாம்பழத்தை நறுக்கிக் கொள்ளவும்.மாதுளை முத்துக்களை எடுத்துக்கொள்ளவும்.பௌலில், மாதுளம் பழத்தை போடவும்.அடுத்து மாம்பழத்தை போடவும்.பிறகு வாழைப்பழத்தை போடவும்.கடைசியாக தேனை விட்டு நன்கு கலந்துக் கொள்ளவும்.இப்போது மிகவும் ஹெல்தியான,* ஃப்ரூட் சாலட்* தயார்.பழங்கள் என்றாலே உடலுக்கு மிகவும் நல்லது.இதை செய்வது மிக சுலபம்.குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது.
தேவையான பொருட்கள்-1. ஒரு கப் பால்2. அரை கப் தண்ணீர்3. 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை4. ஒன்றரை டேபிள்ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர்5. கால் கப் ஆப்பிள்6. கால் கப் திராட்சை7. கால் கப் மாதுளை8. கால் கப் மாம்பழம்9. கால் கப் வாழைப்பழம்10. முந்திரி பாதாம் பொடித்ததுசெய்முறை -தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறிதளவு பால் விட்டு கஸ்டர்ட்பவுடரை கரைத்து வைத்துக் கொள்ளவும்.ஒரு கப் பாலில் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் .பிறகு கரைத்து வைத்துள்ளகஸ்டர்ட் பவுடரை சேர்த்து நன்கு கிளறவும்.கஸ்டர்ட் பவுடர் கலவை ஆறியதும், ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும்.பின்னர் கஸ்டர்ட் கலவை, நறுக்கிய பழங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கவும்.பழங்கள் கலந்த கலவையை பவுலில் சேர்க்கவும். அதன்மீது வெண்ணிலா ஐஸ் கிரீம் சேர்க்கவும். பின் அலங்கரிக்க பொடித்து வைத்த நட்ஸ்களை தூவவும்.சுவை அதிகம் கூட்ட மாம்பழத்தை மிக்சியில் நைசாக அரைத்து கஸ்டர்ட் கலவையைசேர்க்கலாம். பைனாப்பிள், டூட்டி ஃப்ரூட்டி, பாதாம் சேர்த்து சுவை கூட்டலாம்.
தேவையான பொருட்கள்-1. வாழைப்பழம்2. கிரீன் ஆப்பிள்3. பன்னீர் திராட்சை4. மாம்பழம்5. மாதுளை6.நன்னாரி சர்பத்7.குளிர்ந்த தண்ணீர்8.பழங்கள் விருப்பபடி எடுக்கவும்.செய்முறை -வாழைப்பழம், ஆப்பிள், மாம்பழம் ,மூன்றையும் தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும்.திராட்சையை கழுவி எடுத்துக்கொள்ளவும்.நன்னாரி சர்பத்தை எடுத்து தயாராக வைக்கவும்.எல்லா பழங்களையும் சேர்த்து ,பிலென்டரில் ஒரு சுற்று விட்டு எடுத்து ,அதில் தேவையானஅளவு தண்ணீர்,நன்னாரி சர்பத் சேர்த்து, கலந்து ஒரு டம்ளரில் ஊற்றினால் சுவையானபழக்கலவை சர்பத் சுவைக்கத்தயார்.இந்த சர்பத் ஃபிரிட்ஜில் வைத்து உபயோகித்தால் சுவை அபாரமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:உரித்து விதை நீக்கிய ஆரஞ்சு -1அன்னாசி, கொய்யா, மாதுளை,திராட்சை - தலா 1 கப் சேமியா - 100கிராம் சர்க்கரை - தேவையான அளவு.பால் - அரை லிட்டர் முந்திரி, திராட்சை, ஏலக்காய் துாள் - சிறிதளவு.செய்முறை:பழங்களை கழுவி, மிக்ஸியில் அரைத்து வடி கட்டவும். பாலை காய்ச்சி ஆறவைத்து, சர்க்கரைசேர்த்து, வடிகட்டிய பழச்சாறை சேர்க்கவும்.தண்ணீரில் சேமியாவை வேக வைத்து, ஏலக்காய் துாள், வறுத்த முந்திரி, திராட்சை மற்றும்பழச்சாறு கலவையை சேர்த்தால், பழப்பாயாசம் தயார். சுவையாக இருக்கும். விளையாடி களைத்து வரும் குழந்தைகளுக்கு, புத்துணர்ச்சி தரும்.
தேவையான பொருட்கள்:துருவிய மாங்காய் 1 கப்பச்சை மிளகாய் -2உளுந்தம் பருப்பு -100 கிராம் கடலைப் பருப்பு - 100 கிராம் சோம்பு - 1 தேக்கரண்டி இஞ்சி,உப்பு, கொத்த மல்லித்தழை, கறிவேப்பிலை,எண்ணெய், தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:உளுந்தம் பருப்பு, கடலை பருப்பை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்து, இஞ்சி சேர்த்து,மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைக்கவும். இந்த விழுதுடன், துருவிய மாங்காய், நறுக்கியபச்சை மிளகாய், சோம்பு, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பிசைந்த மாவை வடையாக தட்டிப் போட்டு பொன்னிறமாக பொறிக்கவும். புதுவிதமான, சுவையான மாங்காய் வடை தயார்.
தேவையான பொருட்கள்-1.அவகேடோ அல்லது வெண்ணெய் பழம் - 22.குளிர்ந்த பால் -1 கிளாஸ்3.தண்ணீர் -1 கிளாஸ்4.சர்க்கரை - தேவையான அளவு5.நட்ஸ் தேவையான அளவு6.தேன் அல்லது சாக்லேட் சிரப் தேவையான அளவுசெய்முறை -அவகேடோ நன்றாக கனிந்தது எடுத்து கொள்ளவும்.மிக்ஸியில் அவகேடோ, பால், நட்ஸ் மற்றும் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து நன்குமென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.இப்போது சுவையான அவகேடோ மில்க் ஷேக் ரெடி!!!... குழந்தைகளுக்கு சாக்லேட் சேர்த்துமற்றும் பெரியவர்களுக்கு தேன் சேர்த்து கொடுக்கவும்.
தேவையான பொருட்கள்:மணத்தக்காளிகீரை- அரை கட்டுதேங்காய் பால்- 1 கப்சின்ன வெங்காயம் - 5பூண்டு - 3 பல்எண்ணெய்,மிளகுத்தூள் - சிறிதளவு உப்பு- தேவையான அளவு செய்முறை:சுத்தம் செய்த கீரை, சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு,கீரையை சேர்த்து வதக்கி, 2 கப் தண்ணீர், உப்புசேர்த்து, ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.பின், இந்த சாறில், மிளகுத்துாள், தேங்காய் பால் சேர்த்து பரிமாறவும்.மணத்தக்காளி சூப், வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை,அனைவரின் உடல் நலத்துக்கும் உகந்தது.
தேவையான பொருட்கள்:1 கப் வாழைத்தண்டு பொடியாக நறுக்கியது,1டேபிள்ஸ்பூன் வெங்காயம் பொடியாக நறுக்கியது,1 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது,1/4 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,1டீஸ்பூன்மிளகு தூள்,சிட்டிகை மஞ்சள் தூள்,1டேபிள்ஸ்பூன் வெண்ணெய்,1டீஸ்பூன் சீரகம், 2 டேபிள்ஸ்பூன்சோள மாவு.உப்பு,தண்ணீர் - தேவையானஅளவுசெய்முறை: வாழைத்தண்டை முதலில் சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.கடாயில் வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது கறிவேப்பிலைசேர்த்து வதக்கவும்.பிறகு வாழைத்தண்டு பொட்டு வதக்கவும். இதில் சிறிது மஞ்சள் தூள் மிளகு தூள் உப்பு சேர்த்துவதக்கவும். பின் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி வாழைத்தண்டு வேகும் வரை கொதிக்க விடவும்.வாழைத்தண்டு வெந்து வரும் போது அடுப்பை சிம்மில் வைத்து சோள மாவை 1/4 கப்தண்ணீரில் கலந்து ஊற்றி கிளறி விடவும்.5 நிமிடம் கழித்து கொத்தமல்லி இலை தூவிஇறக்கவும். கார்ன் ஃபிளேக்ஸ் உடன் வாழைத்தண்டு சூப் சூடாக பரிமாறவும்.
தேவையான பொருட்கள்:1கேரட் ,5 பீன்ஸ்,2 தட்டை மக்காசோளம்,2இலை முட்டைக்கோஸ்,100 கிராம் காலிஃப்ளவர்,20 பச்சை பட்டாணி,2டீஸ்பூன் மிளகுத்தூள்,4பல் பூண்டு,தேவையான அளவு உப்பு,செய்முறை :கேரட் ,பீன்ஸ், முட்டைக்கோஸ் ,காலிஃப்ளவர் இவற்றை நீளவாக்கில் அல்லது பொடிப்பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இதனுடன் பச்சை பட்டாணி ஒரு தட்டைமக்காச்சோளத்தையும்சேர்த்துக்கொள்ளவும்.ஒரு தட்டை மக்காச்சோளத்தை பொடியாகஉதிர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு பொடியாகநறுக்கிய நான்கு பல் பூண்டு போட்டு நன்றாக வதக்கவும்.பூண்டின் பச்சை வாசனைபோனபின் வெஜிடபிள் அனைத்தையும் ஒன்றாகப் போட்டு நன்றாக வதக்கவும்.நன்றாக வதங்கியவுடன் உப்பு சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர்ஊற்றி மிதமான தீயில் 10நிமிடங்கள் வேக விடவும். வெஜிடபிள் வெந்தவுடன் மேலும் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றிஅதனுடன் அரைத்து வைத்த மக்காச் சோளத்தையும் ஊற்றி உப்பு சரிபார்த்து கொதிக்கவிடவும்..சூப் நன்றாக கொதித்தவுடன் உப்பு சரிபார்த்து இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து இறக்கிவிடவும். சூப் தயார்..
தேவையான பொருட்கள்:3 ஆப்பிள் தக்காளி,5பல் பூண்டு,1டீஸ்பூன் மிளகு பொடி1டேபிள்ஸ்பூன் சோள மாவு,1/2 டீஸ்பூன் உப்பு,1டேபிள்ஸ்பூன்(வெண்ணெய்,1/2 கப் பிரட் துண்டுகள்,1டேபிள்ஸ்பூன் பார்ஸ்லி,வெங்காயத்தாள்.செய்முறை :ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் தக்காளியை சேர்த்து வேக வைக்கவும்.மிக்ஸ்சி ஜாரில் வெந்த தக்காளியை சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து பட்டர் சேர்த்து பொடியாக நறுக்கி வைத்துள்ள பூண்டுசேர்த்து நன்கு வதக்கவும். அதில் அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.ஒரு தவாவை ஸ்டவ்வில் வைத்து பட்டர் சேர்த்து,ரொட்டி துண்டுகளை சேர்த்து வறுத்துவைத்துக்கொள்ளவும்.பின்னர் மைதா மாவில் தண்ணீர் கலந்து, தக்காளி கலவையில் சேர்த்து கொதித்ததும்,நறுக்கிய பார்சலி இலைகள்,மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.எல்லாம் சேர்த்து நன்கு கொதித்ததும், கொஞ்சம் கெட்டியாகி விடும். அப்போது இறக்கினால்தக்காளி சூப் தயார்.தயாரான சூப்பை எடுத்து ஒரு பௌலில் சேர்த்து மேலே நறுக்கிய வெங்காயத்தாள்,பார்சலி,வறுத்து வைத்துள்ள ரொட்டித் துண்டுகள் சேர்த்து சுவைக்கவும்.இப்போது மிளகு காரத்துடன் மிகவும் சுவையான தக்காளி சூப்.