25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


சமையல்

Sep 27, 2025

முட்டைக்கோஸ் சட்னி

தேவையானவை - முட்டைக் கோஸ் கால் கிலோ, பெரிய வெங்காயம் 2, தக்காளி 2,பச்சை மிளகாய் 3, இஞ்சி 1 துண்டு, தேங்காய்த் துருவல் 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் வற்றல்3, புளி சிறிதளவு, கடுகு அரை டீஸ்பூன், உளுந்து2 டீஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், உப்பு தேவைக்கு, எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்.செய்முறை:-கோஸ், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைக் கழுவி பொடியாக நறுக்குங்கள். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்துப் பிறகு வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். வெங்காயம் சிறிது வதங்கியதும் பச்சை மிளகாய், இஞ்சி, கோஸ் சேர்த்து வதக்குங்கள். கோஸ் பச்சை வாடை போக வதங்கியதும் தேங்காய், தக்காளி, புளி, உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி இறக்குங்கள். ஆறியதும் நைஸாக அரைத்தெடுங்கள்.  கோஸ் சட்னி இட்லி, தோசைக்கு நல்ல காம்பினேஷன்

Sep 27, 2025

சௌசௌ சட்னி.

தேவையானவை -சௌசௌ - 1,உளுந்து - 2 ஸ்பூன்,கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்,பெரிய வெங்காயம் - 1தக்காளி - 2,காய்ந்த மிளகாய் - 5,பூண்டு - 6 பல்,புளி - சிறிதளவு (ஒரு கொட்டை அளவு),எண்ணெய் - 3 ஸ்பூன்கடுகு - சிறிதளவு,பெருங்காயம் - சிறிது,உப்பு - தேவையான அளவு,கறிவேப்பிலை - சிறிது,செய்முறைமுதலில் சௌசௌ காயை,தோல்சீவிவிட்டு, நன்கு கழுவி சுத்தம்செய்துகொள்ளுங்கள்.அதிலுள்ளவிதைகளைநீக்கிவிட்டு பொடிப் பொடியாக நறுக்கிவைத்துக்கொள்ளுங்கள்.ஒருகடாயில்இரண்டுஸ்பூன்எண்ணெய்ஊற்றிகாய்ந்ததும் உளுந்தம் பருப்பை சேர்த்துவறுக்கவும். அடுத்ததாக அதில்5 காய்ந்தமிளகாய்சேர்த்துவறுத்தபின், பொடியாகநறுக்கியவெங்காயத்தையும் சேர்த்து வதக்கவேண்டும்.வெங்காயம் ஓரளவு வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கிஎடுத்துவைத்துக்கொள்ளவேண்டும்.அடுத்ததாக மீண்டும் கடாயில் சிறிதுஎண்ணெய்சேர்த்துஅதில்சௌசௌவைசேர்த்துநன்குவதக்கிஎடுக்கவேண்டும்.இவைஎல்லாம்நன்குஆறியதும்அதோடுபுளிமற்றும்உப்புசேர்த்துநன்குநைசாகஅரைத்துஎடுத்துக் கொள்ளுங்கள்.பின் கடாயில் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து கொட்டினால் சுவையானசௌசௌசட்னிதயார். இதுஇட்லி, தோசைக்குமிகவும்சுவையாகஇருக்கும்.

Sep 27, 2025

பூசணிக்காய் சட்னி (பரங்கிக்காய் ).

 தேவையான பொருட்கள்:-பூசணிக்காய் (பரங்கிக்காய்) - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)தேங்காய் துருவல் - 1/4 கப்,புளி – சிறிதளவு,கொத்தமல்லி தழை – சிறிதளவு,பச்சை மிளகாய் - 2-3,உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்,கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்,காய்ந்த மிளகாய் - 2-3,சீரகம் - 1/2 டீஸ்பூன்,மிளகு - 1/2 டீஸ்பூன்,உப்பு - தேவையான அளவு,எண்ணெய் - வதக்குவதற்கு தேவையான அளவு .செய்முறை:-ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, கொத்தமல்லி ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.அதனுடன் பொடியாக நறுக்கிய பரங்கிக்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.பரங்கிக்காய் நன்கு வெந்ததும், அதில் புளி, தேங்காய் துருவல், மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது நேரம் வதக்கவும்.வதக்கிய கலவையை ஆறவிட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும்.சுவையான மற்றும் ஆரோக்கியமான பரங்கிக்காய் சட்னி தயார். இதை இட்லி, தோசை, பொங்கல் போன்றவற்றுடன் சேர்த்து பரிமாறலாம். 

Sep 20, 2025

பச்சை பயறு சுண்டல்.

தேவையான பொருட்கள்-பச்சைபயறு- 2 கப்,தேங்காய்துருவல் -அரைகப்,கடுகு- கால்ஸ்பூன்,உளுந்தம்பருப்பு- அரைஸ்பூன்,பெரியவெங்காயம்-1,வரமிளகாய் -2,கருவேப்பிலை - 1கொத்து,உப்புத்தூள் தேவைக்கு,சமையல் எண்ணெய்- தாளிக்க.செய்முறை -முதலில்பச்சை பயறை சுத்தம் பண்ணி வேகவைத்துக்கொள்ளவும். வடிகட்டி உப்புத்தூள் சேர்த்துக் கொள்ளவும். வெங்காயத்தை கட் பண்ணிக் கொள்ளவும்.ஒரு வாணலியில் தாளிக்கிற அளவுக்கு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, வரமிளகாய், கருவேப்பிலை, கட்பண்ணிய வெங்காயம், சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.அதிலேயே தேங்காய் துருவல் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். உப்பு சேர்த்த பச்சைப்பயறையும் சேர்த்து நன்குஎல்லாம் கலக்கும்படி கலந்துவிடவும்.பச்சை பயறு சுண்டல் ரெடி.தாளிக்கும் போது தேங்காய் துருவலையும் நன்கு வதக்கிச் சேர்த்தால் மாலைவரை கெட்டு போகாது.

Sep 20, 2025

பட்டாணி சுண்டல்

தேவையான பொருட்கள்-ஒரு கப் காய்ந்த பச்சை பட்டாணி, 1/2 ஸ்பூன் கடுகு, 1ஸ்பூன் கடலை பருப்பு,1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 3 பச்சை மிளகாய்,2 வெங்காயம்,2 ஸ்பூன் தேங்காய் துருவல்,தேவையானஅளவு உப்பு, சமையல் எண்ணெய்- தாளிக்க.செய்முறை-பச்சை பட்டாணியை நைட்டு ஊறவைத்து குக்கரில் வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் .எண்ணெய் ஊற்றி கடுகு கடலை பருப்பு உளுத்தம் பருப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். சிவந்த பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு ,தூள் உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.வெந்த பட்டாணியை போட்டு கிளறவும். நன்றாக தாளித்த பிறகு மேலே தேங்காய் துருவல் சேர்க்கவும். பச்சை பட்டாணி சுண்டல் ரெடி.

Sep 20, 2025

வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்.

தேவையான பொருட்கள்-100 கிராம் வெள்ளை கொண்டைக்கடலை,1 வெங்காயம், 1/4 தேக்கரண்டி கடுகு, 4 காய்ந்த மிளகாய்,1/4 தேக்கரண்டி மிளகாய், 1/4 இன்ச் இஞ்சி, தேவையானஅளவு உப்பு, 2 மேஜை கரண்டி துருவிய தேங்காய்,செய்முறை -இரவு முழுக்க ஊற வைத்த சுண்டலை குக்கரில் வேகவைத்து எடுத்து தண்ணீர் வடித்து வைக்கவும்.வடசெட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு பொடியாக நறுக்கிய இஞ்சி ,கருவேப்பிலை, காய்ந்த மிளகாய் ,சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.வேகவைத்து எடுத்த சுண்டலை சேர்க்கவும். ஒரு நிமிடம் வதக்கிய பின் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும்.

Sep 20, 2025

வேர்க்கடலை சுண்டல்.

தேவையான பொருட்கள்-2 கப் தோலுரிக்காத வேர்க்கடலை,2மேஜை கரண்டி நல்லெண்ணை,1 தேக்கரண்டி கடுகு, சிட்டிகை பெருங்காயம்,1 மேஜை கரண்டி உளுந்து, 4வர மிளகாய்,1தேக்கரண்டி இஞ்சி, பொடியாக நறுக்கியது, 1தேக்கரண்டி பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது, ½கப் கறிவேப்பிலை,1 கப் பிரஷ் தேங்காய் துருவல்,தேவையான உப்பு.செய்முறை-  கொதிக்கும் நீரில் வேர்க்கடலையை30 நிமிடம் ஊற வைக்கவும். பிரஷர் குக்கரில் வேகவைக்கவும்,. ஒரு விசில் போதும். குழைய வைக்காதீர்கள். வெந்த பின் வெளியே எடுத்து நீரை வடிக்கவும்.மிதமான நெருப்பின் மேல் வாணலியில் சூடான எண்ணையில் கடுகு சேர்த்து, உளுந்து, வர மிளகாய் சேர்க்கவும். உளுந்து, பொன் நிறமானதும் ,இஞ்சி,கறிவேப்பிலை சேர்த்து கிளற. தேங்காய் துருவல் சேர்க்கவும். நிறம் மாறும் வரை வதக்கவும்.வேகவைத்து வடித்த வேர்க்கடலை சேர்த்து,4 நிமிடங்கள் கிளற,உப்பு சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைக்க வேர்க்கடலைசுண்டல் தயார்.

Sep 20, 2025

சீரக சம்பா வெண் பொங்கல்.

தேவையான பொருட்கள்- 1கப் சீரக சம்பா அரிசி, அரைகப் பயத்தம்பருப்பு, 1மேஜைகரண்டி நெய்,தேவையான உப்புதாளிக்க:கால்  கப் நெய்,1 மேஜைகரண்டி இஞ்சி, பொடியாக நறுக்கியது.1 மேஜைகரண்டி மிளகு,1 மேஜைகரண்டி சீரகம், 20 முந்திரி, 1 பச்சை மிளகாய், துண்டாக்கியது,சிறுநெல்லிக்காய் அளவு கட்டி பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதுசெய்முறை:-அரிசி மற்றும் பருப்பை கழுவி குறைந்தது30 நிமிடங்கள் முதல்1 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.பிரஷர் குக்கரில் வெண்ணெய் மற்றும் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய்(துண்டுகளாக நறுக்கியது), சீரகம், நொறுக்கப்பட்ட மிளகு, முந்திரி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்கவும்.4 முதல்5 கப் தண்ணீர், பெருங்காயம் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பைச் சேர்த்து நன்கு கலந்து4 முதல்5 விசில் வரை அல்லது வேகும் வரை பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலக்கவும், சீரக சம்பா வெண் பொங்கல் தயார்.

Sep 20, 2025

ரவா கேசரி.

தேவையான பொருட்கள்-1 கப் ரவை,1 கப் சர்க்கரை,1/4 கப் முந்திரி,1/4 கப் உலர் திராட்சை,சன் பிளவர் ஆயில் தேவையான அளவு,2 சிட்டிகை ஆரஞ்சு ஃபுட் கலர்,1/4 மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்,துருவிய பிஸ்தா தேவையான அளவு,நெய் தேவையான அளவுசெய்முறை:-முதலில் ஒரு pan ஜ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து உருக்கிக் கொள்ளவும்.நெய் உருகியதும் அதில் முந்திரியைப் போட்டு முந்திரி சிறிது நிறம் மாறும் வரை வறுக்கவும்.பின்பு அதில் உலர் திராட்சையை சேர்த்து திராட்சை நன்கு ஊதும் வரை வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.அடுத்து அதே pan ல் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து ,நெய் உருகிய பின் அதில் ரவையை போட்டு ,சுமார் 6 இலிருந்து 7 நிமிடம் வரை வறுக்கவும். (ரவை கலர் மாறாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.)ரவை வறுபட்டதும் அதை எடுத்து வேறு ஒரு தட்டில் போட்டு பரப்பி ஆற விடவும்.இப்பொழுது அதே pan ல் 3 கப் தண்ணீர் சேர்த்து அதில் 5 மேஜைக்கரண்டி சன் பிளவர் ஆயில், 3 மேஜைக்கரண்டி நெய், மற்றும் 2 சிட்டிகை ஆரஞ்சு ஃபுட் கலர் சேர்த்து தண்ணீரை கொதிக்க விடவும். (கேசரி திகட்டாமல் இருப்பதற்காகவே நெய் பாதி அளவு மற்றும் எண்ணெய் பாதி அளவு சேர்த்துக் கொள்கிறோம்.)தண்ணீர் கொதித்ததும் வறுத்து எடுத்து வைத்துள்ள ரவையை அதில் போட்டு கட்டி தட்டாமல் கிளறி ஒரு மூடி போட்டு சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும்.2 நிமிடத்திற்கு பிறகு மூடியைத் திறந்து ஒரு கப் அளவு சர்க்கரை அதில் சிறிது சிறிதாக தூவி நன்கு கிளறி விடவும். பின்பு அதில் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து கிளறிய பின் மீண்டும் ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கிளறிவிடவும்.அடுத்து அதில் கால் மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள் போட்டு ,கிளறி வறுத்து எடுத்து வைத்திருக்கும் முந்திரி மற்றும் உலர் திராட்சையை அதில் சேர்த்து கிளறவும்.பின்பு இதை ஒரு தட்டிலோ அல்லது கிண்ணத்தில்லோ எடுத்து வைத்து அதன் மேலே துருவிய பிஸ்தா தூவி பரிமாறவும்.சூடான, சுவையான மற்றும் இனிப்பான ரவா கேசரி தயார்.

Sep 20, 2025

தேங்காய் சாதம் .

 தேவையான பொருட்கள்: -சாதம் - 1 கப் , துருவிய தேங்காய் - 1/4 கப்,உப்பு - சுவைக்கேற்ப ,தாளிப்பதற்கு.- தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,கடுகு - 1/2 டீஸ்பூன் , உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் , சீரகம் - 1/2 டீஸ்பூன் , பச்சை மிளகாய் - 1 , வரமிளகாய் - 1 , கறிவேப்பிலை - சிறிது , முந்திரி - 1 டேபிள் ஸ்பூன். செய்முறை:  -முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வரமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.  பின்பு அதில் முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, துருவிய தேங்காயை சேர்த்து2 நிமிடம் குறைவான தீயில் வறுக்க வேண்டும்.பிறகு அதில் சாதத்தை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, நன்கு கிளறி இறக்கினால், சுவையான தேங்காய் சாதம் தயார்.

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 50 51

AD's



More News