25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சமையல் குறிப்பு

Aug 21, 2026

கோதுமை அல்லது ரவை உப்புமா செய்யும்போது தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்தால்...

மாவு அரைக்கும் போது சிறிதளவு வடித்த சாதம் சேர்த்து அரைத்தால், இட்லியும் தோசையும் பஞ்சு போல மென்மையாக வரும். பூரி மாவு பிசையும் போது 1 டீஸ்பூன் கடலை மாவு சேர்த்தால், பூரி நல்ல நிறத்துடன் நீண்ட நேரம் உப்பி இருக்கும். மீல்மேக்கர் கிரேவியில் உருளைக்கிழங்கு சேர்த்துச் செய்தால், சுவை இன்னும் அருமையாக இருக்கும். கோதுமை அல்லது ரவை உப்புமா செய்யும்போது தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்தால், உப்புமா மிகவும் சுவையாக இருக்கும். பாசிப்பருப்பு, துவரம் பருப்பை லேசாக வறுத்து வேகவைத்து சாம்பார் செய்தால், சாம்பார் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்க உதவும்.

Aug 18, 2026

அடைக்கு அரைக்கும் போது ஊறவைத்த பட்டாணியையும் ஒரு கைப்பிடி சேர்த்து அரைத்தால், அடை மிகவும் ருசியாக இருக்கும்.

பிரியாணி செய்ய இஞ்சி பூண்டு விழுது அரைக்கும் போது, அதில் 4 முந்திரி பருப்பு, 1/2 கைப்பிடி புதினா, 1 பச்சை மிளகாயை சேர்த்து அரைத்து போட்டு பிரியாணி செய்து பாருங்கள். சுவை கூடுதலாக கிடைக்கும். பிரியாணி செய்யும் போது தண்ணீர் பாதியும், மீதி தேங்காய் பால் மற்றும் தயிர் ஒரு கப் சேர்த்து செய்தால் பிரியாணி சுவையாக இருக்கும்.அடைக்கு அரைக்கும் போது ஊறவைத்த பட்டாணியையும் ஒரு கைப்பிடி சேர்த்து அரைத்தால், அடை மிகவும் ருசியாக இருக்கும்.கல் உப்பை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்தால் நைசாக தூள் உப்பு கிடைக்கும்தாளிப்பு வடகம் தயார் செய்யும் போது அளவாக விளக்கெண்ணெய் சேர்த்தால் போதுமானது அதிகம் சேர்த்தால் தாளிக்கும் போது எண்ணெய் வாசனை அதிகமாக இருக்கும் (அனைத்து சமையலுக்கும் நன்றாக இருக்காது.)

Aug 04, 2026

இரும்பு தோசைக்கல் டிப்ஸ் .

புதிய தோசைக்கல்லில் முதல் சில நாட்கள் முட்டை, ஆம்லெட் அல்லது அடை சுட்டால் சீசனிங் விரைவாக வரும். தோசை ஊற்றுவதற்கு முன் அரை வெங்காயத்தில் சிறிது எண்ணெய் தொட்டு கல்லில் தேய்த்தால் தோசை ஒட்டாது. தோசைக்கல் மிகவும் சூடாக இருந்தால் தோசை சரியாக வராது. சிறிது தண்ணீர் தெளித்து வெப்பத்தை சமநிலைப்படுத்தி தோசை ஊற்றுங்கள். பயன்படுத்தி முடித்ததும் கல்லை நன்றாக துடைத்து, மெல்லியதாக எண்ணெய் தடவி வைத்தால் துருப்பிடிக்காது. நீண்ட நாட்கள் பயன்படுத்தாமல் வைத்திருந்தால், மீண்டும் பயன்படுத்தும் முன் எண்ணெய் தடவி சூடாக்கி எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். உப்பு மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து கல்லை தேய்த்து சுத்தம் செய்தால் கல்லில் இருக்கும் துர்நாற்றம் மற்றும் அழுக்குகள் நீங்கும்.

Jul 28, 2026

குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

குலோப்ஜாமுன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.காய்கறிகளை நறுக்குவதற்கு முன், தண்ணீரில் நன்கு கழுவிய பிறகு நறுக்கவும். நறுக்குவதற்கு முன் ஊற வைப்பதோ காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் கழுவுவதோ கூடாது.வெண்டைக்காயைப் பொரியல் செய்யும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைத்தால் அதில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும்.

Jul 17, 2026

சமையலில் செய்யக்கூடாதவை.

சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

Jul 08, 2026

சுவையான பொரியலுக்கான எளிய குறிப்புகள்.

வாழைக்காய் பொரியல் செய்யும்போது ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்தால் நிறமும் சுவையும் அருமையாக இருக்கும்.nana சேனைக்கிழங்கு பொரியலை வறுக்கும் முன் சிறிது எலுமிச்சைச் சாறு தெளித்தால் அரிப்பு குறையும். காலிஃப்ளவர் பொரியலுக்கு சிறிதளவு சோள மாவு தூவி வறுத்தால் மொறுமொறு மொறுமொறுப்பாக வரும். முருங்கைக்கீரை பொரியலில் பூண்டு சேர்த்து வதக்கினால் ஆரோக்கியமும் அதிகரிக்கும். சுரைக்காய் பொரியலுக்கு சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்தால் தனித்துவமான சுவை கிடைக்கும்.

Jun 30, 2026

மீன் வறுக்கும்போது அடிக்கடி திருப்பிப் போடாதீர்கள்; 

காய்கறிகளை  வெட்டுவதற்கு  முன் கழுவுங்கள்; வெட்டிய பிறகு கழுவினால் சத்துக்கள் குறையலாம். கொதிக்கும் பாலில் சர்க்கரையை ஆரம்பத்திலேயே சேர்க்காதீர்கள்; பால் பொங்கும் வாய்ப்பு அதிகரிக்கும். & முட்டையை நேரடியாக ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து உடனே வேக வைக்காதீர்கள்; வெடிக்கலாம். வெங்காயத்தை அதிக தீயில் தொடர்ந்து வதக்காதீர்கள்; எளிதில் கருகி கசப்பாகிவிடும். மீன் வறுக்கும்போது அடிக்கடி திருப்பிப் போடாதீர்கள்; துண்டுகள் உடையலாம். பிரஷர் குக்கரை அதிகமாக நிரப்பாதீர்கள்; உணவு சரியாக வேகாமல் போகலாம்.

Jun 22, 2026

சமையலை சுவையாகவும், சுத்தமாகவும் மாற்ற…

காய்கறிகளை நறுக்கி நீண்ட நேரம் திறந்தவெளியில்  வைக்காதீர்கள் சத்துக்கள் குறைந்து விடும். சாதம் வெந்தவுடன் உடனே மூடி வைக்காதீர்கள்,ஆவி தங்கி சாதம் ஒட்டிக் கொள்ளும். பொரியல் செய்யும்போது அடிக்கடி கிளறாதீர்கள் காய்கள் உடைந்து விடும். உப்பை ஒரே நேரத்தில் அதிகமாக சேர்க்காதீர்கள் சுவை கெட்டுப் போகும். மாவுகளை திறந்தபடியே வைக்காதீர்கள் ஈரப்பதம் சேர்ந்து கெட்டுப்போகும். சூடான உணவை உடனே ஃபிரிட்ஜில் வைக்காதீர்கள் சீக்கிரம் கெடலாம். ஒரே கரண்டியை எல்லா உணவுக்கும் பயன்படுத்தாதீர்கள் சுவை மாறும்.

Jun 02, 2026

பன்னீர் மென்மையாக இருக்க,....

1. ரசம் கொதிக்கும் போது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால் ருசி கூடும். 2. சாம்பாரில் பூண்டு சேர்த்தால் வாசனை அதிகரிக்கும். 3. தோசை மாவு புளிக்காமல் இருந்தால், சிறிது புளி கலந்த தயிர் சேருங்கள். 4. உப்புமாவில் சிறிது இஞ்சி துருவி சேர்த்தால் செரிமானத்திற்கு உதவும். 5. பன்னீர் மென்மையாக இருக்க, கொதிக்கும் நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும்.

May 29, 2026

வடாம் டிப்ஸ் !

 வடாம் மாவுடன் ஒரு கைப்பிடி உளுந்தை சேர்த்து அரைத்தால், வடாம் அதிக மொறுமொறுப்பாக இருக்கும் * மிளகாய்க்கு பதில், மிளகைப் பொடித்து சேர்த்து வடாம் பிழிந்தால், மாறுதலான சுவையோடு வடாம் மணக்கும். * வடாம் மாவில் ஓமத்தை பொடி செய்து சேர்த்து, 'புட் கலர்' ஏதாவது சேர்த்து, ஓமப்பொடி அச்சில் பிழிய வேண்டும். இதை மாலை நேர ஸ்நாக்ஸாக பொரித்து சாப்பிடலாம். * வடாம் மாவை முதல் நாள் இரவே கிளறி வைத்துக் கொண்டால், காலையில் உப்பு, காரம் சேர்த்துக் கிளறி, வெயிலுக்கு முன் வடாம் போட்டு முடித்து விடலாம் *இளம் நாரத்தை இலைகளைக் கழுவி, பொடியாக நறுக்கி வடாம் மாவில் சேர்த்துப் பிழிந்தால் மணமும், சுவையும் கூடும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 13 14

AD's



More News