25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


தெரிந்து கொள்ளுங்கள்

Sep 14, 2026

லிப்ட் வரலாறு: கயிற்றில் தொடங்கி விண்ணைத் தொடும் பயணம்!

இன்று உயரமான கட்டடங்களில் சில நொடிகளில் பல தளங்களைக் கடந்து செல்ல லிப்ட் நமக்கு உதவுகிறது. ஆனால், இதன் வரலாறு பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்தது என்பது தெரியுமா?கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே கிரேக்க கணிதவியலாளர் ஆர்க்கிமிடிஸ், கயிறுகள் மற்றும் இயந்திர அமைப்புகளைப் பயன்படுத்தி பொருட்களை மேலே தூக்கும் சாதனத்தை உருவாக்கியதாக வரலாற்றுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பின்னர் ஐரோப்பாவில் உள்ள அரண்மனைகளில், குறிப்பாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளில், மனிதர்களையும் பொருட்களையும் மேலே மற்றும் கீழே கொண்டு செல்லும் உயர்த்தி அமைப்புகள் பயன்படுத்தப்பட்டன.பிரான்சில் உள்ள வெர்செய்ல்ஸ் அரண்மனையில், 1743ஆம் ஆண்டு‘பறக்கும் நாற்காலி’ என அழைக்கப்பட்ட ஒரு வகை லிப்ட் அமைக்கப்பட்டது. அதன்பிறகு ரஷ்யாவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர் இவான் குலிபின், 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் புதிய தொழில்நுட்ப அடிப்படையிலான லிப்ட் வடிவமைப்பை உருவாக்கினார்.19ஆம் நூற்றாண்டில் நீராவிச் சக்தியில் இயங்கும் லிப்ட்கள் பயன்பாட்டுக்கு வந்தன. லண்டனில் 1823ஆம் ஆண்டு ‘Rising Room’ என அழைக்கப்பட்ட உயர்த்தி அமைப்பு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்தது.ஆனால், லிப்ட் வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது அமெரிக்க கண்டுபிடிப்பாளர்எலிஷா ஓடிஸ் உருவாக்கிய பாதுகாப்பு அமைப்பு.1853ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற கண்காட்சியில், கயிறு அறுந்தாலும் லிப்ட் கீழே விழாமல் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பை ஓடிஸ் அறிமுகப்படுத்தினார். இந்த கண்டுபிடிப்பே நவீன பயணிகள் லிப்ட் வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக அமைந்தது. பின்னர் அவரது பெயரில் Otis நிறுவனம் உருவானது.20ஆம் நூற்றாண்டில் மின்சார லிப்ட்கள் வேகமாக வளர்ச்சி பெற்றன. தானியங்கி கதவுகள், அவசர நிறுத்து அமைப்புகள், தொலைபேசி தொடர்பு மற்றும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் படிப்படியாக சேர்க்கப்பட்டன.இன்று அதிவேக மின்சார லிப்ட்கள், உயரமான கட்டடங்களின் அத்தியாவசிய தொழில்நுட்பமாக மாறிவிட்டன.கயிறு மற்றும் எளிய இயந்திரத்தில் தொடங்கிய லிப்ட்... இன்று வானளாவிய கட்டடங்களை சில நொடிகளில் இணைக்கும் அற்புதத் தொழில்நுட்பமாக வளர்ந்துள்ளது!

Sep 14, 2026

கடலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்ட ‘ஜெல்லி’ மீன்!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் நீருக்கடியில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான ஜெல்லி மீன் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.வீடியோகிராபர் ஜான் ரோனி பதிவு செய்ததாகக் கூறப்படும் இந்தக் காட்சிகளில், மிகப்பெரிய அளவில் காணப்படும் ஆரஞ்சு மற்றும் நீல நிற ஜெல்லி மீன் இடம்பெற்றுள்ளது.இதன் உண்மையான எடை மற்றும் நீளம் குறித்த தகவல்கள் உறுதியாகத் தெரியாத நிலையில், சில நிபுணர்கள் இது மிகப்பெரிய அளவைக் கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.உலகின் மிகப்பெரிய ஜெல்லி மீன்களில் ஒன்றாகக் கருதப்படும் Lion’s Mane Jellyfishசுமார் 120 அடி நீளம் வரை வளரக்கூடியதாகக் கூறப்படுகிறது.ஜெல்லி மீன்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், சில வகைகள் மனிதர்களுக்கு வலியை ஏற்படுத்தும் அளவுக்கு விஷத்தன்மை கொண்ட கொடுக்குகளை உடையவை.கடலுக்குள் இன்னும் நமக்குத் தெரியாத எத்தனை பிரம்மாண்ட உயிரினங்கள் இருக்கின்றன?

Sep 14, 2026

அழிவின் விளிம்பில் இருந்து மீண்ட அரிய கிளி!

ஒருகாலத்தில் அழிவின் விளிம்பில் இருந்த அரிய காகாபோ (Kākāpō) கிளியை பாதுகாக்க நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.பறக்க முடியாத இந்த அரிய கிளி, உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக எடை கொண்ட கிளி இனங்களில் ஒன்றாகும்.வேட்டையாடும் விலங்குகளின் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல காரணங்களால் காகாபோ இனத்தின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்த நிலையில், தீவிரமான பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்கத் திட்டங்கள் மூலம் அதன் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.இயற்கை பாதுகாப்பு முயற்சிகள் வெற்றியடையும்போது அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களையும் மீட்டெடுக்க முடியும் என்பதற்கு காகாபோ ஒரு சிறந்த உதாரணமாக திகழ்கிறது.

Sep 14, 2026

தனியாக ராக்கெட் ஏவிய தமிழர்! சாதித்த ஆனந்த் மேகலிங்கம்.

வறுமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த தமிழரான ஆனந்த் மேகலிங்கம், தனது சொந்த நிறுவனத்தின் மூலம் RHUMI-1 ராக்கெட்டை விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளார்.பல சவால்களை கடந்து விண்வெளித் துறையில் தனது முயற்சியை தொடங்கிய அவர், தனியார் நிறுவனத்தின் வாயிலாக ராக்கெட்டை விண்ணில் செலுத்தியிருப்பது கவனம் பெற்றுள்ளது.வசதிகள் குறைந்த பின்னணியில் இருந்து வந்து, தனது விடாமுயற்சியால் விண்வெளித் துறையில் தடம் பதித்துள்ள ஆனந்த் மேகலிங்கத்தின் பயணம் பலருக்கும் ஊக்கமளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Sep 13, 2026

இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தேபெறும்வசதியை அரசுஅறிமுகப்படுத்தியுள்ளது.எங்கேயும்அலையாமல், வீட்டில்இருந்தே7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம்.

Sep 13, 2026

அனுமதி கேட்காமல் அதகளம் செய்து Databaseஐ அழித்த AI

அமெரிக்காவைச் சேர்ந்த PocketOS என்ற நிறுவனத்தின் ஒட்டுமொத்த Databases, Claude Opus 4.6 மூலம் இயங்கிய Cursor AI என்ற கோடிங் ஏஜென்ட்டினால் வெறும் 9 வினாடிகளில் முற்றிலும் அழிக்கப்பட்டது. மென்பொருள் சோதனையின் போது ஏற்பட்ட பிழையைத் தானாகவே சரிசெய்ய முயன்று நிறுவனத்தின் ரகசிய ஏபிஐ டோக்கனை கண்டுபிடித்து பேக்கப்ஸையும் சேர்த்து அழித்துவிட்டது. மனித உதவியை நாடாமல் ஏஐ தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவால், அந்த நிறுவனம் சுமார் மூன்று மாத கால உழைப்பை இழந்துள்ளது.

Sep 13, 2026

பூமியின் சமநிலையை காக்கும் கரப்பான் பூச்சிகள் .

பலருக்கும் விருப்பமில்லாத உயிரினமாகத் தோன்றும் கரப்பான் பூச்சிகள், இயற்கைச் சூழலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பூச்சி இனத்தைச் சேர்ந்த இவற்றில் சுமார் 4,600 வகைகள் உள்ளன.கரப்பான் பூச்சிகளின் ரத்தத்தில் ஹீமோகுளோபின் இல்லாததால் அவற்றின் உடல் திரவம் வெண்மை நிறத்தில் காணப்படுகிறது. இவை மனிதர்கள் வசிக்கும் வீடுகளில் மட்டுமின்றி, காடுகள் உள்ளிட்ட பல்வேறு இயற்கைச் சூழல்களிலும் வாழ்கின்றன.சில வகை கரப்பான் பூச்சிகள் 8 சென்டிமீட்டர் வரை நீளமும், சுமார் 35 கிராம் வரை எடையும் கொண்டிருக்கலாம். இவை அழுகிய பொருட்களைச் சிதைத்து மண்ணின் வளத்தை அதிகரிப்பதிலும், இயற்கைச் சுழற்சியில் பங்களிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.கரப்பான் பூச்சிகள் முற்றிலும் அழிந்துவிட்டால், காடுகளின் இயற்கைச் சமநிலை பாதிக்கப்படும். மேலும், அவற்றை உணவாகக் கொண்டுள்ள பறவைகள், பல்லிகள், தவளைகள் போன்ற உயிரினங்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படக்கூடும். இதனால் மண்ணின் தரமும் பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.எனவே, இயற்கையின் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு முக்கிய பங்கு உள்ளது என்பதை கரப்பான் பூச்சிகளின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

Sep 12, 2026

மதுரையில் ஹெலிகாப்டர் சேவை.

மதுரையை மையமாகக் கொண்டு ராமேசுவரம், கொடைக்கானல், திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு தனியார் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது.ஒரு மணி நேரப் பயணத்துக்கு ரூ.1.60 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பயணத்தில் அதிகபட்சம் 5 பேர் வரை செல்லலாம்.சுற்றுலா மட்டுமின்றி, வணிகப் பயணங்கள் மற்றும் மருத்துவ அவசரத் தேவைகளுக்கும் இந்தச் சேவை பயன்படுத்தப்பட உள்ளது.

Sep 12, 2026

இந்திய அளவில் 2-வது இடம் பிடித்த காஞ்சிபுரம்!

வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதியில் இந்திய அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் 2-வது இடத்தை பிடித்துள்ளது.இந்தியாவின் மொத்த வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதியில் காஞ்சிபுரம் மாவட்டம் 5.98 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளது.முதலிடம்: குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் மாவட்டம் – 8.29 சதவீதம்காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஏற்றுமதி ஊக்குவிப்புக் குழுக் கூட்டத்தில், வெளிநாட்டு வர்த்தகத் துறையின் உதவி இயக்குநர் ஜெனரல் இந்த தகவலை தெரிவித்தார்.காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஏற்றுமதி வளர்ச்சியை மேலும் அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Sep 12, 2026

லிப்ஸ்டிக் போட்ட மீனா? இயற்கையின் வினோதத்தை பாருங்கள்!

இயற்கையில் நம்மை ஆச்சரியப்படுத்தும் பல வினோத உயிரினங்கள் உள்ளன. அதில், நீரில் நீந்துவதைக் காட்டிலும் தரையில் நடப்பதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ள சில விசித்திர மீன்களும் குறிப்பிடத்தக்கவை.நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்துக்குப் பிறகு வெளிப்பட்டதாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் இந்த வினோத மீன் தொடர்பான காட்சிகள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.இந்த மீனின் துடுப்புகள் கால்களைப் போன்ற அமைப்புடன் காணப்படுவதால், கடல் மணல் அல்லது நீருக்கு வெளியேயுள்ள ஈரமான பகுதிகளில் ஊர்ந்து செல்லவும், நடப்பது போன்ற அசைவுகளை மேற்கொள்ளவும் உதவுகின்றன.இயற்கையின் விசித்திரத்தை வெளிப்படுத்தும் இந்த மீன் குறித்த காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 136 137

AD's



More News