25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


தெரிந்து கொள்ளுங்கள்

Nov 22, 2025

சைக்கிள் ஓட்டுதலின் போது மனித உடலில் ,தேவை இல்லாமல் ஆற்றல் வீணாவது தடுக்கப்பட்டு ஆற்றல் சேமிக்கப்படுகிறது.

நடைப்பயிற்சி மற்றும் மெது ஓட்ட பயிற்சிகளை விட சைக்கிள் ஓட்டுவது உடலுக்கு 4 மடங்கு அதிக ஆற்றலையும், ஓடுவதை விட 8 மடங்கு அதிக பலன்களையும் தருவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது குறைந்த ஆற்றலை பயன்படுத்தி மனிதர்கள் அதிக தூரம் பயணிக்க உதவுவது சைக்கிள் மட்டுமே என ஆய்வுகள் தெரிவிக்கின்றன..உடலின் தசைகளுக்கு தேவையற்ற அழுத்தம் தராமல், உடலின் ஒரு குறிப்பிட்ட தசை சக்தியை இயக்கமாக மாற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த உடலும் நன்கு இயங்க சைக்கிள் உதவுகிறது என இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அந்த ஆய்வில், நாம் நடக்கும் போது அல்லது ஓடும் போது, அடிப்படையில் உடல் முன்னோக்கி நகரும் போது, தரையில் விழுந்து விடாதபடி உடலை கட்டுப்படுத்தும் செயல்பாடு நடைபெறுகிறது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஈர்ப்பு விசைக்கு எதிராக கால் மூட்டுகளை தூக்கி கவனமாக வைக்கும் செயல்முறையின் போது உடலில் இருந்து அதிகமான சக்தி இழப்பு ஏற்படுகிறது.ஆனால், சைக்கிள் என்ற மிதிவண்டியில்,கால்கள் மட்டுமே ஆற்றலை வெளிப்படுத்தி அதனை அழுத்த விசையாக மாற்றுகின்றன. நடைப்பயிற்சியில் ஒட்டுமொத்த உடலும் அழுத்தத்தை உணர்கிறது. இதற்கு பதிலாக, சைக்கிள் பெடல்களை மிதிக்கும் போது கால்களில் இருந்து மட்டும் தரப்படும் அழுத்தம்,சைக்கி ளின் சுழற்சி ஆற்றலாக மாறி விடுகிறது. இதன் மூலம், மனித உடலில் தேவை இல்லாமல் ஆற்றல் வீணாவது தடுக்கப்பட்டு ஆற்றல் சேமிக்கப்படுகிறது.சைக்கிள் ஓட்டுதலின் போது, குறைந்த ஆற்றல் செலவழிப்பு மூலம் உடலில் அதிக ஆற்றல் சேமிக்கப்ப டுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  

Nov 21, 2025

அலாஸ்கா பகுதி காடுகளில் வாழும் தனித்துவ பறவையினம் கறுப்பு மரங்கொத்தி.

 உடல் கறுப்பு நிறமாக இருக்கும் மரங்கொத்தி வடஅமெரிக்கா மற்றும் அலாஸ்கா பகுதி காடுகளில் வாழும் தனித்துவமானது. ஆண் பறவை தலை மஞ்சள் வண்ணப் பட்டையுடன் ஜொலிக்கும். மரங்களில் வாழும் புழு, பூச்சிகளை உணவாகக்கொள்ளும். கறுப்பு மரங்கொத்தி, எரிந்த நிலையில் இருக்கும் காட்டுப்பகுதியில் அதிகமாக பறந்து திரியும். தீயில் கருகும் மரங்களில்இருந்து தப்ப முயலும், பூச்சிகளை பிடித்து உண்ணும். மற்ற மரங்களில் கூர்ந்த அலகால் பட்டையை உரித்து, நீண்ட நாக்கால் பூச்சிகளை வெளியே இழுத்து உண்ணும். இந்த பறவை மரத்தில் துளையிடும் ஒலி, வெகு தொலைவு வரை கேட்கும்.இதன் இனப்பெருக்கம் மே முதல்ஜூலை வரை நடக்கிறது. ஆண், பெண் பறவைகள் இணைந்து மரக்கிளையில் கூடு கட்ட குழி தோண்டும். பெண் பறவை, இரண்டு முதல் ஆறு முட்டைகள் வரை இடும். இரு பாலினமும்  மாறி மாறி அடைகாக்கும். முட்டைகள் பொரிந்து, நான்கு வாரங்களில்குஞ்சுகள் பறக்க துவங்கும்.இயற்கையை சமநிலையில் பேணுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த பறவை. புழு, பூச்சிகளை கட்டுப்படுத்துவதால், காடு ஆரோக்கியமாக வளர உதவுகிறது. இந்த பறவையின எண்ணிக்கை குறைந்துள்ளதால், பாதுகாக்கப்பட வேண்டிய உயிரின பட்டியலில் வைத்துள்ளது சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கம். இதன் தனித்துவ வாழ்க்கை முறையும், எரியும் காடுகளுடனான தொடர்பும், இயற்கை ஆர்வலர்களை கவர்ந்துள்ளது.

Nov 21, 2025

ஸ்மிர்தி மந்தனா, இசையமைப்பாளர்பலாஷ் முச்சால்  திருமணம் .பிரதமர் மோடி  இரு வீட்டாருக்கும் வாழ்த்து கடிதம்அனுப்பியுள்ளார்.

 மராட்டியத்தை சேர்ந்த 29 வயதான நட்சத்திர வீராங்கனை இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ,ஸ்மிர்தி மந்தனா,சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்து, 9 ஆட்டத்தில் ஆடிய மந்தனா ஒரு சதம், 2 அரைசதம் உள்பட 434 ரன்கள் குவித்தார். மந்தனா தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 2-வது இன்னிங்சை, விரைவில் தொடங்குகிறார்.அவரும் பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளரான பலாஷ் முச்சாலும் நீண்டகாலமாக காதலித்து வருகிறார்கள். அவருடன் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்திருப்பதை உறுதிப்படுத்திய மந்தனா ,வருகிற 23-ந்தேதி அவரை கரம் பிடிக்கிறார். இவர்களது திருமணத்துக்குபிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் 

Nov 19, 2025

உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ள 256 மீ.க்கு வளையாமல் நேராக செல்லமான வளையாத ரோடு .

 சவுதியில் உலகில் நேராக செல்லும் நீளமான ரோடு நெடுஞ்சாலை 10' ) மொத்த தூரம் 1480 கி.மீ. இது அல் டார்ப் இடத்தில் இருந்து சவுதி - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எல்லை வரை செல்கிறது. இது அந்நாட்டின் ஜாஜன், அசிர், ரியாத், கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாணங்களை கடந்து செல்கிறது. இதில் ஹராத் - அல் பாதா வரை 256 மீ.க்கு வளையாமல் நேராக செல்கிறது. இது உலக கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் இரண்டாவது140 கி.மீ.,  நீளமானநேர் ரோடு உள்ளது. 

Nov 19, 2025

இறகுகள்,பறவைகளின் உடலில் முக்கிய அங்கம்.

இறகுகள்,பறவைகளின் உடலில் தோன்றும் புரதப்பொருட்களால் உருவாகுபவை .நூற்றுக்கணக்கான இறகுகளால் உருவானவை தான் இறக்கைகள்.ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை இறகுகளைக் கொண்ட பறவைகள் இருக்கின்றன.இறகின் நடுவில் உறுதியான தண்டு போன்ற அமைப்பு இருக்கும். அந்தத் தண்டின் இரண்டு பக்கங்களிலும் சிறிய நுண் எலும்புகள் காணப்படும்.நுண் எலும்புகளுக்கு இடையில் சிறிய ஓட்டை உடைய அமைப்புகள் உள்ளன. இவை பறவையை பல வகைகளில் பாதுகாக்கின்றன.நடுப்பகுதியில் இரண்டு பக்கமும் சமமாக இருப்பவை வால் இறகுகள் என்று அழைக்கப்படுகின்றன.பறவைகளை வெப்பத்திலிருந்து காப்பாற்ற, பறவையின் உடலைச் சுற்றி கீழ் இறகு என்ற அமைப்பு உள்ளது.ஆந்தை போன்ற பறவைகளுக்கு இரையின் ஒலியை ,சத்தமாக கேட்பதற்கு இறகுகள் உதவுகின்றன.பென்குயின் போன்ற பறவைகளுக்கு பனிச்சறுக்கு ,செய்வதற்கு இறகுகள் உதவுகின்றன.நீரில் மூழ்கி வேட்டையாடும் பறவைகளுக்கு, இறகுகள் தேவைப்படுகின்றன.வளர்ந்த பறவைகள் தங்கள் இறகுகளை கோடைக் காலத்தில் உதிர்த்து, புதிய இறகுகளை வளர்க்க ஆரம்பிக்கும்.குளிர்காலம் வரும் போது பறவைகளை பாதுகாக்க இறகுகள் அவசியம் என்பதால், குளிர்காலத்துக்குள் புதிய இறகு உருவாகிவிடும்.

Nov 18, 2025

. உமிழ்நீர் என்பது உடலுக்கு முக்கியமான ஒன்று.

செரிமானம் உள்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு  உமிழ்நீர் உடலில் சுரக்கும் அரிய திரவம் உதவுகிறது. போதிய அளவு உமிழ்நீர் உடலில் இல்லாத நிலையில் பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்படும்.உமிழ்நீர்  சிலர் அடிக்கடி காரி உமிழ்வதால் ,உடல் கடுமையாக பாதிப்படைகிறது. வாய் மற்றும் தொண்டையை ஈரப்ப தத்துடன் வைத்திருக்கிறது. இதனால், வாயில் உள்ள சளி சவ்வுகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் பாதுகாக்கப்படுகிறது.உணவின் மூலம் உடலுக்கு வேண்டிய உயிர்ச்சத்துக்கள் ,எளிதாக கிடைக்கஉமிழ்நீர் மிகவும் அவசியம். உடலின் நல்ல செரிமானம் உமிழ்நீர் மூலம்தொடங்குகிறது. உமிழ்நீரில், அமிலேஸ் எனப்படும் நொதி உள்ளது, இது வயிற்றில்உணவில் உள்ள மாவுச்சத்தை உடைக்க உதவுகிறது.பாக்டீரியாக்களை சிதைக்கும்உமிழ்நீரில் 'லைசோசைம்' என்ற நொதி ஆகும். உடலுக்குள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வாயின் வழியாக நுழையும் போது அவற்றை உமிழ்நீர் தடுத்து நிறுத்தி விடுகிறது. பல்வேறு பாக்டீரியா மற்றும் நச்சு கிருமிகளை அழிக்கும் திறன் உமிழ்நீருக்கு உண்டு. மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட எந்த கிருமி நாசினிகளையும் விட, உமிழ்நீர் காயங்களை வேகமாக எளிதாக குணப்படுத்தும்.உடலின் திசுக்களை சரி செய்தல் மற்றும் காயங்களை மூடி புண்களை ஆற்றுதல் போன்ற செயல்பாடுகளை ,மனித உமிழ்நீரில் ஹிஸ்டாடின்கள் என்ற புரதங்கள் ஊக்குவிக்கின்றன. உடலில் மற்ற இடங்களில் ஏற்படும் புண்களை விட வாயில் ஏற்படும் புண்கள் விரைவில் குணம் அடைய உமிழ்நீரில் உள்ள இந்த ஹிஸ்டாடின் போன்ற சேர்மங் கள்தான் காரணமாக உள்ளன. உடலில் ஏற்படும் பல்வேறு நோய் பாதிப்புகளை அடையாளம் காண உமிழ்நீர் பயன்படுகிறது. சாதாரண காய்ச்சல் முதல் எய்ட்ஸ் நோய் வரை கண்ட றிய உமிழ்நீர் பரிசோதனை உதவுகிறது.

Nov 17, 2025

ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு ,திருமலையில் ஒரு நாளைக்கு 2 லட்சம் உணவுகளை வழங்கக்கூடிய நவீன சமையலறையை அம்பானி கட்டவுள்ளார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் திருமலையில் ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் உணவுகளை வழங்கக்கூடிய நவீன சமையலறை கட்டப்படும் என்று ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, தனது நிறுவனம் திருமலையில் ஒரு அதிநவீன சமையலறையைக் கட்டும் என்றும், இது ஸ்ரீ வெங்கடேஸ்வர அன்ன பிரசாதம் அறக்கட்டளைக்கு அர்ப்பணிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.இந்த முயற்சி திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) உடன் இணைந்து ஆந்திரப் பிரதேச அரசின் ஆதரவுடன் மேற்கொள்ளப்படும். புதிய சமையலறை மேம்பட்ட ஆட்டோமேஷன் மற்றும் ஒவ்வொரு பக்தருக்கும் சத்தான அன்ன பிரசாதம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு நாளும்2,00,000 க்கும் மேற்பட்ட உணவுகளைத் தயாரித்து பரிமாறும் திறனைக் கொண்டிருக்கும்.முகேஷ் அம்பானி திருமலைக்கு வருகை தந்த பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.திருமலை நம்பிக்கை, இரக்கம் மற்றும் தன்னலமற்ற சேவையின் நித்திய அடையாளமாக நிற்கிறது. "இந்த முயற்சியின் மூலம், அன்ன சேவை பாரம்பரியத்தை அனைத்து டிடிடி கோயில்களுக்கும் விரிவுபடுத்தும் என சந்திரபாபு நாயுடுவின் உன்னதமான பார்வைக்கு பங்களிப்பதில் நாங்கள் தாழ்மையுடன் இருக்கிறோம்" என்று நிறுவனத்தின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.கேரளாவின் திருச்சூரில் உள்ள குருவாயூர் நகரில் அமைந்துள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்கும் அம்பானி சென்றார். அவர் கோயிலுக்கு ரூ.15 கோடி நன்கொடை அளித்தார்.

Nov 15, 2025

HCL டெக்னாலஜிஸின் நிறுவனர் மற்றும் தலைவர் ஷிவ் நாடார் இந்திய கொடையாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் .....

முகேஷ் அம்பானி, நீதா அம்பானி தினமும் ரூ.17 லட்சம் நன்கொடை அளித்தாலும், இந்திய கொடையாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இல்லை, முகேஷ் அம்பானி மற்றும் அம்பானி குடும்பத்தினர் நிதியாண்டு2025ல் ஒரு நாளைக்கு ரூ.1.7 கோடி நன்கொடை அளித்தனர்.இந்தியாவின் மிகப்பெரிய கொடையாளர்,முகேஷ் அம்பானி இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் உலகின் பணக்காரர்களில் ஒருவர். அம்பானி குடும்பம் எப்போதும் அவர்களின் ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் ஆடம்பர விருந்துகளுக்காக செய்திகளில் இடம்பெறும். ஆனால் அம்பானி குடும்பம் இந்தியாவின் முக்கிய கொடையாளர்களில் ஒருவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?எடெல்கிவ் ஹுருன் இந்தியா கொடையாளர் பட்டியல் 2025 இன் படி, முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் 2025 நிதியாண்டில் ரூ.626 கோடி நன்கொடை அளித்தனர். இந்த நிதியாண்டில் அம்பானிகள் ஒரு நாளைக்கு ரூ.1.7 கோடி நன்கொடை அளித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் இந்த ஆண்டு தனது நன்கொடையை ரூ.219 கோடி அதிகரித்துள்ளார், இது நிதியாண்டு24 உடன் ஒப்பிடும்போது நன்கொடையில் இரண்டாவது பெரிய அதிகரிப்பு ஆகும். இந்த மிகப்பெரிய தொகையை நன்கொடையாக வழங்கிய பிறகும், அம்பானி குடும்பம்2025 ஆம் ஆண்டின் முதல்10 இந்திய கொடையாளர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. எடெல்கிவ் ஹுருன் இந்தியா கொடையாளர் பட்டியல்2025 இல்.இந்தியாவின் மிகப்பெரிய கொடையாளர் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் யார்?.HCL டெக்னாலஜிஸின் நிறுவனர் மற்றும் தலைவர் ஷிவ் நாடார் மற்றும் அவரது குடும்பத்தினர்2025 நிதியாண்டில் ரூ.2,708 கோடி நன்கொடை அளித்தனர். இந்த ஆண்டு கூடுதலாக ரூ.555 கோடி பங்களித்தனர். மூன்றாவது இடத்தை ஹிந்துஜா குடும்பம் பிடித்துள்ளது, அவர்கள் நிதியாண்டு24 முதல் ரூ.179 கோடி நன்கொடை அளித்துள்ளனர்.தி லிஸ்ட் படி, அம்பானி குடும்பம் முதன்மையாக கல்வி, சுகாதாரம், கலை மற்றும் கலாச்சாரம், பேரிடர் மேலாண்மை, பாரம்பரிய பாதுகாப்பு, கிராமப்புற மாற்றம், விளையாட்டு மேம்பாடு, நகர்ப்புற புதுப்பித்தல் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது, தேவையான செலவை விட ரூ.261 கோடி அதிகமாகும்.கட்டாயCSR அளவையும் தாண்டிய பிற நிறுவனங்கள்தேவையானCSR செலவினத்தை மீறிய நிறுவனங்களில் Rungta Sons அடங்கும், இது தேவையான தொகையை விட ரூ.114 கோடியை விட ரூ.181 கோடியை பங்களித்தது, மேலும் Jindal Steel and Power நிறுவனம் பரிந்துரைக்கப்பட்ட செலவினத்தை விட ரூ.100 கோடியை விட ரூ.267 கோடியை CSR க்கு ஒதுக்கியது.முகேஷ் அம்பானி, ஷிவ் நாடார் நன்கொடைகளில் முதன்மையான கவனம் செலுத்தியது .ஷிவ் நாடார் மற்றும் குடும்பத்தினர் நிதியாண்டு2025 இல் மொத்தம் ரூ.2,708 கோடியை நன்கொடையாக வழங்கினர். அவர்களின் நன்கொடை பெரும்பாலும் கல்வியில் கவனம் செலுத்தியது. மறுபுறம், முகேஷ் அம்பானி மற்றும் குடும்பத்தினர் மற்றும் இந்துஜா குடும்பத்தினர் முதன்மையாக சுகாதாரப் பராமரிப்பில் கவனம் செலுத்துகின்றனர்.

Nov 15, 2025

அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் டோங்கில் இந்தியாவின் முதல் சூரிய உதயத்தை பார்க்கிறது? .

 இந்த கிராமம் வாலோங்கிலிருந்து சுமார்7 கி.மீ தொலைவில் உள்ளது, லோஹித் நதியைக் கடந்து கடினமான மலையேற்றம் மூலம் மட்டுமே அடைய முடியும். பயணம் சவாலானது என்றாலும் பயணிகளுக்கு ஒரு பலனளிக்கும் அனுபவத்தை வழங்குகிறது.அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் டோங். இந்த கிராமம் தனித்துவமான வானியல் சிறப்பைக் கொண்டுள்ளது, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்தைக் காணும் முதல் குடியிருப்பு இதுவாகும். டோங் கிராமம் சாகச விரும்பிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு அசாதாரண அனுபவத்தை வழங்குகிறது, அழகான இயற்கை காட்சிகள் மற்றும் பசுமையைப் பெருமைப்படுத்துகிறது. கூடுதலாக, கோடையில் சூரியன்4:30 அல்லது5:30 மணிக்கு உதயமாகும்.டோங் கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார்1,240 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அதன் புவியியல் இருப்பிடம் இதற்கு இந்த சிறப்பு அம்சத்தை அளிக்கிறது, ஏனெனில் இது இந்தியா, சீனா மற்றும் மியான்மர் எல்லைகள் சந்திக்கும் முக்கோண சந்திக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இதன் விளைவாக, நாட்டின் பிற பகுதிகளை விட இங்கு சூரியன் ஒரு மணி நேரம் முன்னதாகவே உதிக்கிறது.இருப்பினும், டோங் கிராமத்தை அடைவது நேரடியானதல்ல. டோங்கிலிருந்து சுமார்7 கிலோமீட்டர் தொலைவில் வாலோங் நகரம் உள்ளது. வாலோங்கிலிருந்து, பயணிகள் டோங்கை அடைய கடினமான பாதையில் நடந்து சென்று லோஹித் நதியைக் கடக்க வேண்டும். மலையேற்றம் சவாலானது என்றாலும், சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு பலனளிக்கும் அனுபவமாகும். பரந்த மலைகள், மூங்கில் காடுகள் மற்றும் லோஹித் நதியின் அழகு ஆகியவை முக்கிய ஈர்ப்புகளாகும்.டோங்கில் உள்ள மேயர் பழங்குடியினர் தங்கள் மரபுகளைப் பாதுகாத்து சுற்றுலாப் பயணிகளுக்கு விருந்தோம்பலை வழங்குகிறார்கள். பார்வையாளர்கள் தங்கள் வீடுகளிலேயே தங்கி அவர்களின் வாழ்க்கை முறையைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.டோங் கிராமத்தைப் பார்வையிட சிறந்த நேரம் அக்டோபர் முதல் ஏப்ரல் வரை, அப்போது வானம் தெளிவாகவும், காலை வேளை இனிமையாகவும் இருக்கும். இந்திய குடிமக்கள் பார்வையிட உள் வரி அனுமதி (ILP) பெற வேண்டும். அதேபோல், வெளிநாட்டினருக்கும் பாதுகாக்கப்பட்ட பகுதி அனுமதி (PAP) தேவை.

Nov 14, 2025

'பகீரா கிப்லிங்கி" ஜம்பிங் ஸ்பைடர் .

உலக அளவில் ஏறத்தாழ 40 ஆயிரம் வகை சிலந்திகள் உள்ளது. சிலந்திகள் எல்லாம் உணவுக்காக பூச்சிகள், வண்டுகளை வேட் டையாடுகின்றன.  அசைவம் உண்ணாத, தாவரங்களை உண்டு வாழும் ஒருசிலந்தி இருக்கிறது. அதன் பெயர் 'பகீரா கிப்லிங்கி. இந்த சிலந்தி தான் உலகத் தில் மாமிச உண்ணியாக இல்லாத சிலந்தி என அறியப்படுகிறது, இதற்கு ஜம்பிங் ஸ்பைடர் என்ற பெயரும் உள்ளது.மத்திய அமெரிக்காவின் காடுகளில் காணப்படும் இந்த சிலந்தியின் உணவு என்பது அகாசியா என்ற தாவரங்கள் தான். இந்த தாவரங்கள் அவற்றின் இலைகளின் நுனியில் சிறிய, புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த ஒரு உணவை உருவாக்குகிறது. இதற்கு, பெல்டியன் உடல்கள் என்று பெயர். இதனை எறும்புகள் விரும்பி உண்ணும். இந்த எறும்புகள் எப்போதும் அகாசியா தாவர இலைகளில் உலா வருவதால் தாவரங்களை உண்ணும் விலங்குகள் இந்த தாவரத்தை நெருங்குவதில்லை., சின்னஞ் சிறிய இந்த பகீரா கிப்லிங்கி சிலந்தி எறும்புகளுக்கு பலியாகாமல் தந்திரமான முறையில், அகாசியா தாவரத்தின் இலை நுனியில் இருக்கும் பெல்டியன் உணவை தந்திரமாக உண்கின்றன. தாவரத்தில் ரோந்து செல்லும் எறும்புகள், பெல்டியன் உடல்களை உண்ண செல்லும் பாதைக்கு மாற்றாக, எறும்புகள் செல்லாத மரங்களின் பழமையான அகாசியா இலைகளின் முனைகளில், அதன் வீட்டை உருவாக்குகிறது. அங்கு பாதுகாப்பாக இருந்து கொண்டு எறும்புகளின் உணவை ருசி பார்த்து பசியை தீர்த்துக் கொள்கிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 57 58

AD's



More News