25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


தெரிந்து கொள்ளுங்கள்

Nov 28, 2025

ஒரே காலாண்டில் ரூ. 644 கோடி நிகர லாபம், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட்.

மின்சார விநியோகத்தின் மூலம் கிடைத்த வருவாயும் கணிசமாக உயர்ந்துள்ளது. அக்டோபர்30,2025 அன்று வெளியான தகவலின்படி, பங்குச் சந்தையில் அதானி கிரீன் எனர்ஜி(AGEL) பங்குகள்10.80% உயர்ந்து ஒரு பங்கு ரூ.1,113.05 ஆக வர்த்தகமானது.அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம், செப்டம்பர் காலாண்டில் ரூ.644 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 28% அதிகமாகும். இந்தச் சாதனை, நிறுவனத்தின் பங்குகளை கிட்டத்தட்ட 11% உயரச் செய்துள்ளது.நாள் முழுவதும், இந்த பங்குகள் அதிகபட்சமாக 13.98% உயர்ந்து ரூ. 1,145-ஐ தொட்டன. தேசிய பங்குச் சந்தையில் (NSE) ஒரு பங்கு ரூ. 1,112.60 ஆக உயர்ந்து,10.79% வளர்ச்சி கண்டது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வணிகத்தின் வளர்ச்சி இந்த லாப உயர்விற்கு முக்கிய காரணமாகும்.கடந்த2024-25 நிதியாண்டின் ஜூலை,செப்டம்பர் காலகட்டத்தில்நிறுவனம் ரூ.515 கோடி நிகரலாபம் ஈட்டியிருந்ததுகுறிப்பிடத்தக்கது. மின்சாரவிநியோக வருவாய்கடந்த ஆண்டின்இரண்டாம் காலாண்டில்ரூ.2,308 கோடியாகஇருந்த நிலையில், நடப்பு காலாண்டில்ரூ. 2,776 கோடியாகஉயர்ந்துள்ளது.மொத்த வருவாய்கடந்த ஆண்டின்ரூ. 3,396 கோடியிலிருந்துரூ. 3,249 கோடியாககுறைந்துள்ளது. மொத்தசெலவுகள் ரூ. 2,857 கோடியிலிருந்து ரூ.2,874 கோடியாக சற்றுஅதிகரித்துள்ளனஅதானி கிரீன்எனர்ஜியின் தலைமைச்செயல் அதிகாரிஆஷிஷ் கண்ணாஒரு அறிக்கையில்,"குஜராத்தில் காவ்டாவில்30 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்கஎரிசக்தி உற்பத்திஆலையை அமைக்கும்பணி வேகமாகநடைபெற்று வருகிறது. செயல்பாட்டுத் திறன், திட்ட அமலாக்கம்மற்றும் பாதுகாப்பைமேம்படுத்த புதுமையானதொழில்நுட்பங்களை தொடர்ந்துபயன்படுத்தி வருகிறோம்," என்று குறிப்பிட்டார்.இதற்கிடையில், அதானிகுழுமத்தின் பெரும்பாலானமற்ற நிறுவனப்பங்குகளும் உயர்வுடன்முடிவடைந்தன. அதானிஎனர்ஜி சொல்யூஷன்ஸ் 5.05%, என்டிடிவி 3.26%, அம்புஜா சிமெண்ட்ஸ் 2.95%, அதானி போர்ட்ஸ் 2.68% மற்றும் அதானிடோட்டல் கேஸ் 2.15% என குறிப்பிடத்தக்கவளர்ச்சியை பதிவுசெய்துள்ளன.

Nov 26, 2025

வியக்க வைக்கும் நம் பிரதமர் மோடியின் சுறுசுறுப்பு .

10 நாட்கள்,18 விமானம்,16 நகரங்கள்,04 நாடுகள்,03 விருதுகள்,05 இரவுகள் விமானத்தில்36 நிகழ்ச்சிகள்,1 தலைவர்"நம் பிரதமரின் சுறுசுறுப்பு எனக்கு ஆச்சர்யமாக உள்ளது" - பவன் கல்யாண்"நம் பிரதமரை கண்டு நான் வியக்கிறேன். கடந்த 10 நாட்களில் மட்டும் 36 நிகழ்ச்சிகள், பல மணிநேர பயணம், பல சந்திப்புகள். இந்த வயதில் இப்படி ஒருசுறுசுறுப்பான மனிதரை பார்ப்பது மிக அரிது" என்றார் பவன் கல்யாண்.

Nov 26, 2025

பல கோடி ஆண்டு களுக்கு முன்னர் கடல்கள் அனைத்துமே இன்று போல் நீல நிறத்தில் அல்லாமல் பச்சை நிறத்தில் இருந்தது.

பல கோடி ஆண்டு களுக்கு முன்னர் கடல்கள் அனைத்துமே இன்று போல் நீல நிறத்தில் அல்லாமல் பச்சை நிறத்தில் இருந் ததாக ஜப்பான் விஞ் ஞானிகள் அனுமானித் துள்ளனர். அப்படியான பச்சை நிறக்கடலில் தான் உயிர்களும் தோன்றின என்று கூறியுள்ளனர்.ஏர்பஸ் விமான நிறுவனம், பறவை  இறக்கை போல் மடிக்கக்கூடிய, இலகுவான இறக்கைகளை வடிவமைத்துள்ளது. இந்த இறக்கைகளில் ஹைட்ரஜனை எரி பொருளாக கொண்டு இயங்கும் இயந்திரங்கள் உள்ளன. இந்த இரண்டு புது மைகளாலும் வழக்கமான எரிபொருளைவிட 20 சதவீதம் குறைவாக செலவாகும் என்கின்றனர் பொறியாளர்கள்.

Nov 26, 2025

சக் இந்தியாவின் நம்பர்1 கரும்பு சார்ந்த மேஜைப் பாத்திர பிராண்ட்.

சக் இந்தியாவின் நம்பர்1 கரும்பு சார்ந்த மேஜைப் பாத்திர பிராண்ட் ஆகும், இது பூமிக்கு நச்சு மற்றும் குளோரின் இல்லாத பாகாஸ் தட்டுகள், கிண்ணங்கள், உணவுத் தட்டுகள் மற்றும் விநியோக கொள்கலன்கள் மூலம், உங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் உணவைப் பாதுகாப்பாக அனுபவிக்க முடியும். சக் என்பது உங்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவு அனுபவத்தை மேம்படுத்துவதாகும். மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் அதற்கு தகுதியானவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு முடித்ததும், இந்த பாகாஸ் தூக்கி எறியும் பொருட்களை உரத் தொட்டியில் எறிந்துவிட்டு, குப்பைகளைக் குறைக்கவும், பிளாஸ்டிக்குகளை நச்சுத்தன்மையற்ற மாற்றுகளால் மாற்றவும், சக்நம்பர் 1 கரும்பு சார்ந்த மேஜைப் பாத்திர பிராண்ட்.CHUK தயாரிப்புகள் உங்கள் வழியில் செல்ல தயாராக இருக்கும் .

Nov 25, 2025

'சாகஸ்' நோய் உண்டாக்கும்முத்தமிடும் பூச்சி.

 முத்தமிடும் பூச்சி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய  நாடுகளை நடுங்க வைத்திருக்கிறது. டிரைப்நோசோமா என்ற கிருமி வகையை சேர்ந்த 'சாகஸ்' என்ற ஒரு நோயை  இந்த பூச்சி மனிதனுக்கு உண்டாக்குகிறது.மனித உடலில் இருக்கும் காயங்களில் இந்த பூச்சி அதன் கழிவுகளை வெளியிடுகிறது.இந்த கழிவுகளால் ஏற்படும் அரிப்பை நீக்க காயங்களை ஒட்டிய பகுதியில் விரல்களை வைத்து தேய்க்கும் போது, இந்த கிருமி கைகள் வழியாக வாய், கண்கள் மூலம் மனித உடலின் உள்ளே புகுந்து விடுகிறது.சாகஸ் நோய் பாதித்த ஆரம்ப கட்ட த்தில் சில வாரங்கள் அல்லது மாதங்கள், காய்ச்சல், தலைவலி, வீக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும், சில நேரங்களில் அறிகுறிகள் இல்லாமலும் இருக்கலாம். நாள்பட்ட கட்டத்தில் இந்த நோய் இதய செயலிழப்பு, இதய வீக்கம், செரிமான  குழாய்பாதிப்பு உள்ளிட்ட நீண்டகால  சிக்கல்களை ஏற்படுத்தும்.இந்த நோய் அர்ஜென்டினா, பிரேசில்,மெக்சிகோ, கொலம்பியா ஆகிய  நாடுகளில் பரவி ,அமெரிக்காவின் சில மாநிலங்கள், ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து  ஆகிய பகுதிகளிலும் பரவி வருகிறது.அமெரிக்காவில் சுமார் 3 லட்சம் பேர் இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த  நோய், சத்தமின்றி பல்வேறு நாடு களில் பரவி வருகிறது. காடு அழிப்பு, நகரமயமாக்கல்  போன்ற நோய்களுக்கு முக்கி காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலக நாடுகள் பலவும் இதனை  தடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

Nov 25, 2025

ஏன் தண்ணீருக்குள் கைகளை வைத்திருக்கும் போது தோல் சுருங்குகிறது.?

கடினமான வேலைகளை செய்வதற்காக கைகளும் கால்களும் பயன்படுகின்றன. எனவே அவற்றை பாதுகாப்பு டன் வைப்பதற்காக தோலில் சீபம் என்கிற எண்ணெய் சுரக்கிறது. தண்ணீரில் கைகளை வைத்து வேலை செய்து கொண்டிருக்கும் போது சீபம் சுரந்து தோலுக்குள் தண்ணீர் செல்லாமல் பாதுகாத்து விடுகிறது. அதிக நேரம் தண்ணீரில் கைகள் இருக்கும் போது சீபம் அதிக மாக சுரக்காது. அதனால் தண்ணீர் தோலுக்குள் நுழைந்து விடுகிறது. கை கால்களில் மேடு, பள்ளம் தோன்றி விடு கிறது. இதனால் தோல் சுருங்கி விடு கின்றன. தண்ணீரை விட்டு விரல்களை எடுத்த சிறிது நேரத்தில் தண்ணீர் வெளியேறி மீண்டும் சீபம் சுரக்கிறது.அதனால் விரல்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். 

Nov 24, 2025

கடுமையான குளிர்காலத்தில் இருந்து மக்களை பாதுகாக்க அவசரகால தங்குமிடம் .

கடுமையான குளிர்காலத்தில் இருந்து மக்களை பாதுகாக்க அவசரகால தங்குமிடமாக செயல்படும்.  நீர் மற்றும் காற்று புகா தன்மையுடன் 2 நபர்கள் வரை இதில் தங்க ,மரம் மற்றும் இரும்பு கலவையால் ஆன இது, உறைபனி காலத்தில் மக்களை பாதுகாக்கும்.. இவை நிரந்தர வீடுகளுக்கு மாற்றாக இல்லாவிட்டாலும், அவசரகாலங்களில் தங்குமிடங்களாக செயல்படு கின்றன. 2020-ம் ஆண்டில் ஒரு முன்னோடித் திட்டமாக தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது ஜெர்மனியின் பல பகுதிகளுக்கு விரிவடைந்துள்ளது. உணவு, உடை, இருப்பிடம் மனிதனின் அடிப்படை தேவைகளாகும். வீடு இல்லாதவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் ,குளிர்காலம் மற்றும் மழைக் காலத்தில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மிக அதிகம். இதை கருத்தில் கொண்ட ஜெர்மனி அரசாங்கம் பாதுகாப்பு மற்றும் தனி உரிமையை வழங்க சிறிய, சூரிய சக்தியில் இயங்கும்கூடு வடிவிலான தங்குமிடங்களை மக்களுக்கு ஏற்படுத்தி உள்ளது.

Nov 24, 2025

இயற்கையை காப்பாற்ற குழந்தைகளுக்குவிழிப்புணர்வு அளிக்க குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா பாடல்.

தாத்தா வைத்த தென்னையுமே, தலையால் இளநீர் தருகிறது.  பாட்டி வைத்த கொய்யாவும் ,பழங்கள் நிறையக் கொடுக்கிறது.  அப்பா வைத்த மாஞ்செடியோ, அல்வா போலப் பழம் தருது.  அம்மா வைத்த முருங்கையுமே, அளவில்லாமல் காய்க்கிறது.  அண்ணன் வைத்த மாதுளையோ, கிண்ணம் போல பழுக்கிறது.  சின்னஞ் சிறுவன் நானும் ஒரு செடியை நட்டு வளர்ப்பேனே! 

Nov 22, 2025

சுதந்திர இந்தியா வரலாற்றில் இந்திய நாணயத்தில் பாரதமாதா படம் .

ஆர்.எஸ்.எஸ்.நூற்றாண்டுவிழாவைமுன்னிட்டு பிரதமர் மோடி நாணயம் வெளியிடப்பட்ட, இந்திய நாணயத்தில் பாரதமாதா படம் இடம் பெற்றது. ”இது ஒவ்வொரு பாரததேச குடிமகனுக்கும் பெருமை" என்றார் பிரதமர் மோடி

Nov 22, 2025

ஆசிய கோப்பை நட்சத்திரம் அபிஷேக் சர்மாவுக்கு HAVAL H9 SUV விருது வழங்கப்பட்டது.

.2025 ஆசிய கோப்பையில் தனது அபாரமான ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்த அபிஷேக் சர்மா, போட்டியின் வீரருக்கான விருதை சரியாகப் பெற்றார். இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக, அவருக்கு ஒரு பிரீமியம் மற்றும் சக்திவாய்ந்த ஹவல் H9 SUV பரிசாக வழங்கப்பட்டது. ஹவல்H9 அதன் கரடுமுரடான நல்ல தோற்றத்திற்கும், மேம்பட்ட அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் கலவைக்கும் பெயர் பெற்றது, இது ஒரு ஆடம்பர ஆஃப்ரோடிங்SUV ஆக நிலைநிறுத்தப்படுகிறது.4,950 மிமீ நீளம் கொண்ட இந்த பெரியSUV, ஒரு சிறந்த ஆஃப்ரோடு ஓட்டுநர் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுகடினமான நிலப்பரப்பில் பயணித்தாலும் சரி அல்லது நகர்ப்புற சாலைகளில் பயணித்தாலும் சரி, அற்புதமான செயல்திறனை உறுதி செய்யும் வகையில், ஆஃப்ரோடு திறன் மற்றும் ஆடம்பர வசதியின் சரியான கலவையாகH9 வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த கணிசமானSUV4950 மிமீ நீளமும்1976 மிமீ அகலமும் கொண்டது.ஹவல்H9 வாகனம் ஓட்டுவதை எளிதாக்கவும் பாதுகாப்பாகவும் மாற்ற வடிவமைக்கப்பட்ட சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது:ஆறு ஏர்பேக்குகள்.வாகனத்தைச் சுற்றி மறைந்திருக்கும் ஆபத்துகளைக் கண்டறிவதன் மூலம் பாதுகாப்பை மேம்படுத்துகிறது.போக்குவரத்து நிலைமைகளின் அடிப்படையில் வாகனத்தின் வேகத்தை தானாகவே சரிசெய்து, நீண்ட பயணங்களைக் குறைவான கடினமானதாக மாற்றுகிறது.நிறுத்தும் மற்றும் செல்லும் போக்குவரத்தின் போது கூட மன அழுத்தமில்லாத அனுபவத்தை உறுதி செய்கிறது.360,,டிகிரி வியூ கேமரா: பார்க்கிங் மற்றும் சுற்றுப்புறங்களின் பொதுவான கண்காணிப்பை எளிதாக்குகிறது.HAVAL சவுதி அரேபியா வலைத்தளத்தின்படி, ஹவல் H9 SUVயின் தற்போதைய விலை 142,199.8 சவுதி ரியால்களாகும், இது இந்திய ரூபாயில் தோராயமாக ₹33,60,658 ஆகும்.நிறுவனத்தின் தோற்றம்ஹவல் என்பது உலகளாவிய கிராஸ்ஓவர் மற்றும்SUV சந்தையில் ஒரு முக்கிய வீரரான சீன ஆட்டோமொபைல் நிறுவனமான கிரேட் வால் மோட்டார் (GWM)-க்கு சொந்தமான ஒரு ஆட்டோமொடிவ் பிராண்ட் ஆகும்.2 ஹவல் GWM-இன் தயாரிப்பு வரிசையிலிருந்து மார்ச் 2013 இல் ஒரு தனி பிராண்டாக மாறியது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 57 58

AD's



More News