ஐந்து முறை உலக சாம்பியன் ஆன, இந்தியாவின் ஆனந்த்.குளோபல் செஸ் தொடரில் உலக சாம்பியன் குகேஷை வென்றார்.
குளோபல் செஸ் லீக் தொடரின் 3வது சீசன்இந்தியாவின் மும்பையில் நடக்கிறது. மொத்தம் ஆறு அணிகள், தலா இரு முறை மோதுகின்றன. முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் இருஇடம் பெறும் அணிகள் பைனலில் மோதும்.
ஐந்து முறை உலக சாம்பியன் ஆன, இந்தியாவின் ஆனந்த், இதன்3வது சுற்றில், உலக கோப்பை வென்ற உஸ் பெகிஸ்தானின் சிந்த ரோவ், ஜெர்மனியின் வின்சென்ட் உள்ளிட்டோர் இடம் பெற்ற கேங்கஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ் அணி, உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் உள்ளிட்டோர் இடம் பெற்ற அலாஸ்கன் நைட்ஸ் அணியை எதிர்கொண்டது.
கேங்கஸ் வீரர் ஆனந்த் 56, அலாஸ்கன் வீரர் குகேஷ் 19, மோதினர். ஆனந்த் 45 வது நகர்த் தலில் வெற்றி பெற்றார்.முடிவில் ஆனந்த் அணி 12.0-3.0 என குகேஷ் அணியை வென்றது.மும்பை மாஸ்டர்ஸ் அணி (9 புள்ளி) இதுவரை முடிந்த போட்டி முடிவில் முதலிடத்தில் உள்ளது. 6 புள்ளியுடன் 4வது இடத்தில் ஆனந்த் அணி, உள்ளது.
0
Leave a Reply