தென்னிந்தியாவில் சிறப்பாகக் கொண்டாடப்படும் வரலட்சுமி விரதம், மகாலட்சுமியின் அருளைப் பெறுவதற்காக கடைப்பிடிக்கப்படும் முக்கியமான விரதமாகும்.செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை விரதம் இருந்து வழிபடுவதற்கு உகந்த நாளாக வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது. பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும் இந்த விரதம், ‘வரலட்சுமி விரதம்’ அல்லது ‘வரலட்சுமி நோன்பு’ என்றும் அழைக்கப்படுகிறது.ஆடி அல்லது ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 21-ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.‘வரலட்சுமி’ என்றால் ‘வரங்களை அருளும் லட்சுமி’ என்று பொருள். இந்த நாளில் மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் வேண்டிய வரங்களைபெறலாம்என்பதுநம்பிக்கை.மேலும்அஷ்டலட்சுமிகளானஆதிலட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி, சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி ஆகியோரின் அருளையும் பெறலாம் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.சுமங்கலி பெண்கள் தங்கள் கணவர் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழவும், குடும்பத்தில் செல்வ வளம் பெருகவும், மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெறவும் இந்த விரதத்தை மேற்கொள்கின்றனர்.வரலட்சுமி விரத நாளில் மகாலட்சுமி தாயார் இல்லம் தேடி வருவதாக ஐதீகம். இதனால் அன்றைய தினம் வீட்டை சுத்தம் செய்து, விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட்டால் குடும்பத்தில் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.வரலட்சுமி விரதம் உருவானது குறித்து பல கதைகள் உள்ளன. அவற்றில் ஷியாமாவின் கதை முக்கியமானது. சௌராஷ்டிர மன்னன் பத்ரஷர்வாவின் மனைவி சந்திரிகா, துவாதசி நாளில் மகாலட்சுமியை அவமதித்ததால் தனது செல்வத்தையும் நாட்டையும் இழந்தாள். ஆனால் அவர்களின் மகள் ஷியாமா, மகாலட்சுமியிடம் இருந்து வரலட்சுமி விரத முறையை அறிந்து அதைத் தொடர்ந்து கடைப்பிடித்தாள். பின்னர் தனது பெற்றோருக்கும் விரதத்தின் மகிமையை எடுத்துரைத்தாள். சந்திரிகாவும் விரதத்தை முறையாகக் கடைப்பிடித்ததால் இழந்த செல்வங்கள் அனைத்தும் மீண்டும் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.மற்றொரு கதையில், மகத நாட்டைச் சேர்ந்த சாருமதி என்ற பக்தையான பெண்ணின் கனவில் மகாலட்சுமி தோன்றி வரலட்சுமி விரதத்தைப் பற்றி கூறினார். மகாலட்சுமியின் அறிவுரைப்படி சாருமதி விரதம் இருந்து வழிபட்டதால், அவளுக்கு செல்வ வளமும் குடும்ப நலமும் கிடைத்ததாகக் கூறப்படுகிறது.இதனால் வரலட்சுமி விரதம் செல்வம், நலம், குடும்ப மகிழ்ச்சி ஆகியவற்றை வழங்கும் சிறப்புமிக்க விரதமாகப் போற்றப்படுகிறது.
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘Surya Path Tiranga’ என்ற புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள இந்தியத் தூதரகங்களில், சூரிய உதயத்தை அடிப்படையாகக் கொண்டு வரிசையாக தேசியக் கொடி ஏற்றப்பட உள்ளது.பிஜி தீவுகளில் தொடங்கி, வெவ்வேறு நாடுகளின் நேர மண்டலங்களுக்கு ஏற்ப இந்தக் கொடியேற்ற நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று அமெரிக்கா வரை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டத்தை உலகம் முழுவதும் ஒரே தொடர்ச்சியான நிகழ்வாகக் கொண்டுசெல்லும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.இன்று ஆகஸ்ட் 15நாட்டின் 80 வது சுதந்திர தினத்தைக்கொண்டாடுகிறோம்.இந்தியா 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரம் அடைந்தது.பால கங்காதர திலகர், மகாத்மா காந்தி நேதாஜி, பகத்சிங் போன்ற பல தலைவர்கள் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டார்கள்.தென்னகத்தில் வேலு நாச்சியார். பாரதியார் வ.உ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற பல தலைவர்களும் மிக முக்கியப் பங்காற்றி உள்ளார்கள்.சுதந்திரதினம் அன்று. செங்கோட்டையில் மாண்புமிகு பிரதமர் கொடியேற்றுவார்முப்படைகளின் அணிவகுப்பும் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறும்.சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றி வணங்குவோம்.போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.
.அம்மன் மற்றும் ஆண்டாள் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும்.ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ஸ்ரீரங்கம் கோயில்களில் இத்திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.பெண்கள் கண்ணாடி வளையல்களை அம்மனுக்குச் சாத்தி, நல்ல கணவன் மற்றும் குழந்தைப்பேறு வேண்டி விரதமிருந்து வழிபடுவர்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்,தேரோட்டம்.
தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும் ஆடி அமாவாசை, முன்னோர்களை நினைவுகூர்ந்து தர்ப்பணம் செய்வதற்கு சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து முன்னோர்களுக்கு எள் மற்றும் தண்ணீரால் தர்ப்பணம் செய்வது வழக்கம்.முன்னோர்களுக்கு பிடித்த உணவை காகத்திற்கு வைப்பது, கோயிலுக்குச் சென்று வழிபடுவது, பசுவுக்கு பழங்கள் மற்றும் அகத்திக்கீரை வழங்குவது, ஏழைகளுக்கு உணவு அளிப்பது போன்றவற்றையும் செய்யலாம். விரதம் இருப்பவர்கள் வெங்காயம், பூண்டு சேர்க்காத உணவை உட்கொள்வதும், வாழை இலையில் சாப்பிடுவதும் வழக்கமாகக் கூறப்படுகிறது.பெற்றோர் அல்லது முன்னோர்களின் இறந்த தேதி, திதி தெரியாதவர்கள் அல்லது உரிய நாளில் திதி கொடுக்கத் தவறியவர்களும் இந்த நாளில் தர்ப்பணம் செய்வது சிறப்பு என நம்பப்படுகிறது.ஆடி அமாவாசை நேரம் துவக்கம் : ஆகஸ்ட் 12, 2026 (புதன்கிழமை) அதிகாலை 02:11 AM.ஆடி அமாவாசை நேரம் துவக்கம் : ஆகஸ்ட் 12, 2026 (புதன்கிழமை) அதிகாலை 02:11 AM.நிறைவு: ஆகஸ்ட் 13, 2026 ~ 12:16 AM.
முன்னாள் குடியரசுத் தலைவர், 'ஏவுகணை நாயகன்' டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாள் இன்று (ஜூலை 27). 2015-ஆம் ஆண்டு மேகாலயாவில் மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அவர் காலமானார். எளிமை, அறிவியல் சாதனைகள் மற்றும் இளைஞர்களுக்கு அளித்த ஊக்கத்தால், என்றும் மக்கள் மனதில் வாழ்ந்து வருகிறார்.
முக்கனிகளில் ஒன்றான மாம்பழம், இனிப்பு சுவை மற்றும் ஊட்டச்சத்துகளால் உலகம் முழுவதும் விரும்பப்படும் பழமாகும். சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் மாம்பழம் பயிரிடப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிழக்கு ஆசியாவில் தோன்றிய மாம்பழம், பின்னர் உலகின் பல நாடுகளுக்கு பரவியது.இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் மாம்பழம் ஒரு பழம் மட்டுமல்ல; கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. இதில் வைட்டமின் A, C மற்றும் பிற சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடல்நலத்திற்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.மாம்பழத்தின் சிறப்பையும், அதன் ஊட்டச்சத்து நன்மைகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் ஜூலை 22-ம் தேதி தேசிய மாம்பழம் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. மாம்பழம் ஜூஸ், ஐஸ்கிரீம், கேக், ஜாம், ஊறுகாய் உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.
2026-ம் ஆண்டுக்கான ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் ஜூலை 17, ஜூலை 24, ஜூலை 31 மற்றும் ஆகஸ்ட் 7, ஆகஸ்ட் 14 ஆகிய தேதிகளில் அமைகின்றன. ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாட்களாகக் கருதப்படுவதால், இந்த நாட்களில் பக்தர்கள் கோயில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் விரதங்களை மேற்கொள்வது வழக்கமாக உள்ளது.
இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமைய அல்லாஹ் உங்களை ஆசீர்வதிப்பார்..அல்லாஹ்வில் நம்பிக்கை வைத்தால் கவலை வேண்டாம்.இனிய மொஹரம் பண்டிகை வாழ்த்துக்கள்..
பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் வேலைக்குச் செல்லும் குழந்தைகளின் நிலையை மாற்றி, அனைவருக்கும் கல்வி மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய 2002 முதல் சர்வதேச தொழிலாளர் அமைப்பால் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. வறுமை, குடும்ப சூழ்நிலை மற்றும் பெற்றோர்களின் விழிப்புணர்வின்மையே குழந்தைகள் வேலைக்குச் செல்ல முக்கிய காரணங்களாகும். கடைகள் அல்லது தொழிற்சாலைகளில் குழந்தைகள் வேலை செய்வதைக் கண்டால் 1098 என்ற இலவச எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம். ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்யலாம்.குழந்தைகளின் கைகளில் இருக்க வேண்டியது புத்தகமே தவிர வேலைக்கருவிகள் அல்ல. குழந்தைத் தொழிலாளர் இல்லாத உலகைப் படைப்போம்!
'விளையாட்டைப் பாதுகாப்போம், குழந்தைப் பருவத்தைப் பாதுகாப்போம்' என்ற மையக்கருத்துடன் இன்று உலக விளையாட்டு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. விளையாட்டின் மூலம் கற்பனைத் திறன், தலைமைப் பண்பு மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் வளர்வதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. உலகின் 71% குழந்தைகள் விளையாட்டு தங்களுக்கு மகிழ்ச்சி தருவதாகக் கூறியுள்ளனர்.