25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இன்றைய தினம்

Mar 03, 2026

மார்ச் 3, 2026 முழு சந்திர கிரகணம்.

முழு சந்திர கிரகணம் மார்ச் 3,2026 இன்று நடைபெற உள்ளது.2026ஆம் ஆண்டின் முதல் மற்றும் முக்கியமான முழுச் சந்திர கிரகணம் மார்ச் 3, 2026 அன்று நிகழ உள்ளது. இந்த 'பிளட் மூன்' (Blood Moon) நிகழ்வு, இந்தியா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் தெரியும். இது சந்திரன் 82 நிமிடங்கள் ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் அபூர்வ நிகழ்வாக கணிக்கப்பட்டுள்ளது.கிரகண நேரம் தொடக்கம், மதியம் 3.20. முழு கிரகணம்: மாலை 4:45 முதல், உச்ச நேரம்: மாலை 5.15, நிறைவு: மாலை 6:46 செய்ய வேண்டியவை:தர்ப்பை புல்: கதிர்வீச்சைத் தடுக்க உணவு, நீர், பாலில் கிரகணத்துக்கு முன்பே போடவும்.வழிபாடு: அமைதியாக அமர்ந்து மந்திரம் ஜபிக்கவும் (வாக்கு பலிக்கும்).குளியல் & தானம். கிரகணம் முடிந்ததும் தலைக்குக் குளித்துவிட்டு ஏழைகளுக்கு தானம் செய்யவும். செய்யக் கூடாதவை:உணவு & உறக்கம்: சாப்பிடவோ, தூங்கவோ கூடாது (முதியோர், நோயாளிகள், குழந்தைகளுக்கு விதிவிலக்கு).கர்ப்பிணிகள் கவனம்; வெளியே வர வேண்டாம்; கத்தி போன்ற கூர்மையான பொருட்களைத் தவிர்க்கவும்.சுப காரியங்கள்: புதிய தொழில், முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தள்ளி வைக்கவும்.

Feb 27, 2026

உலக தொண்டு நிறுவன தினம்.

 உலகளவில் 1.20 கோடி தொண்டு நிறுவனங்களும், இந்தியாவில் 33 லட்சம் தொண்டு நிறுவனங்களும் செயல்படுகின்றன.அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் (என்.ஜி.ஓ.,) பணிகளை பாராட்டும் வகையில், அவை நேர்மையாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தியும் பிப். 27ல் உலக தொண்டு நிறுவன தினம் 89 நாடுகளில் கடைபிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல், மனித உரிமை. கல்வி, குழந்தைகள் நலன், சமூக சேவை உட்பட பல்வேறு துறைகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபடுகிறது. இது தவிர போர் பாதிப்பு. தொற்றுநோய் காலங்களில் இவற்றின் பணி மகத்தானது. 

Feb 15, 2026

மகாசிவராத்திரி வழிபாடு .

 பிரம்மா மற்றும் விஷ்ணு இடையே 'யார்  பெரியவர்'  என்ற போட்டி வந்தபோது சிவன்.  ஜோதி பிழம்பாக அவர்கள் முன் தோன்றினார். அந்த நெருப்புத் தூணின் அடிமற்றும் முடியைக் காண முடியாத நாளே மகாசிவராத்திரி.இது ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி (அமாவாசைக்கு முந்தைய நாள்) அன்று கொண்டாடப்படுகிறது.இந்த நான்கு காலமும் விழித்திருக்க முடியாதவர் மூன்றாம் காலம் பார்வதிதேவி சிவனை வழிபாடும் நேரம் (15.2.26 இரவு 12 மணி முதல் 12.30 வரை விழித்திருக்கலாம்.)(15-02-2020) விரதம் துவங்கும் நாள் அன்று முழுவதும் உபவாசம் இருக்கலாம், (அல்லது) பால், பழம் மட்டும் உண்ணலாம்.விரதம் நிறைவு செய்யும் நாள்& நேரம் (16-02-2026) காலை 04:00 மணிக்குள்  உங்கள் வேண்டுதலை சிவனிடம் வேண்டிக் கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.சிவன் வழிபாடோடு குலதெய்வத்தை வழிபாடு செய்வது குலதெய்வத்தின் அருள் பெற வழிவகுக்கும்.சிவராத்திரி, சிவன்-பார்வதி திருமணம் நிச்சயமான நாள், தேவர்கள் தங்கம், வெள்ளி, முத்துகளை பரிசாக கொண்டு வந்தார்கள்.ஆனால்,துறவியான சிவபெருமானிடம் செல்வம் இல்லை. இருப்பினும், பார்வதிக்கு ஒரு சிறப்பு பரிசு கொடுக்க வேண்டும் என்ற ஆசை.அவர் தானே பச்சை லாக் வளையல்கள் செய்து, வேஷம் பூண்டு இமயமலையில் சென்று, அதை பார்வதியின் கைக்கு அணிவித்தார்.அந்த நிமிஷத்திலேயே பார்வதி அவரை அடையாளம் கண்டார்.அப்போது சிவன் சொன்னார். 'இந்த பச்சை வளையல்கள்  சௌபாக்கியத்துக்கும், படைப்பின் சக்திக்கும் அடையாளம்.‘ஆகவே ,சிவராத்திரியில் பச்சை வளையல் அணிவது, பார்வதிக்கு சிவன் அளித்த முதல் பரிசை நினைவுபடுத்துவது.சிவராத்திரியில்  பச்சை வளையல்கள் அணிய வேண்டும்.

Feb 14, 2026

காதலர் தினம்.

 (பிப். 14) காதலர்தினம் இன்று உருவான கதை .14ம் நூற்றாண்டில் ரோம் அரசர் 2ம் கிளாடியஸ், இளைஞர்களை ராணுவத்தில் சேர அழைத்தார். இதற்கு வரவேற்பு இல்லாததால் காதல், திருமணத்திற்கு தடை விதித்தார். இதை மீறி பாதிரியார் வேலன்டைன், காதலிக்கும் இளைஞர்களுக்கு ரகசிய திருமணம் செய்து வைத்தார். இதனால் ஆத்திரமடைந்த அரசன் அவருக்கு மரண தண்டனை விதித்தார். அவரது நினைவுநாளையே 'வேலன்டைன் தினமாக' கொண்டாடதொடங்கினர். 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வேலன்டைன் தினம் 'காதலர் தினமாக' மாறியது. 

Jan 26, 2026

குடியரசு தின வாழ்த்துக்கள்

சமத்துவம் தொடர்ந்து, சம உரிமை நீடித்து ,பாரதம் செழித்து,அடிமைத்தனம் தீர்ந்த தினம், அரசு அமைந்த தினம் ,சுதந்திரம் பெற்று வளர்ந்த தினம் ,தாய் மீதான பாசம் போன்றதே, தாய் நாட்டின் மீதான பாசமும், தாயை நேசிப்போம், தாய் நாட்டை மூச்சாய் சுவாசிப்போம்,இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.

Jan 25, 2026

ரத சப்தமி.

ரிஷி காஷ்யபர் மனைவி அதிதி பூரண கர்ப்பவதி. ஒருநாள் கணவருக்கு உணவு பரிமாறிக் கொண்டி ருந்தபோது தான் யாரோ கதவை தட்ட, அவள் யாரென்று பார்க்க, ஒரு பிராமணன் "பசிக்கிறது ஏதாவது சாப்பிட கொடு" என்று கேட்க, " இரு கொண்டுவருகிறேன்" என்று அதிதி மெதுவாக நடக்கமுடியாமல் நடந்து வந்து கணவருக்கு உணவு பரிமாறி அவர் சாப்பிட்ட பின் ஆகாரத்தை எடுத்துக்கொண்டு அந்த பிராமணனுக்கு கொடுத்தாள்."ஏன் லேட்டாக வந்து உணவைக் கொடுத்தாய். என்னை உதாசீனமா பண்ணினாய். உன் வயிற்றில் வளரும் குழந்தை இறப்பான்" என கோபித்து சாபமிட்டான்.பிராமணனிரின் சாபம் கேட்டு அதிர்ச்சியடைந்த அதிதி காஸ்யபரிடம் விஷயத்தை சொல்ல, "நீ இதற்கெல்லாம் வருந்தாதே, அமிர்த உலகில் இருந்து அழிவில்லாத ஒரு மகன் நமக்கு கிடைப்பான்” என்று வாழ்த்த ஒளி பிரகாசமான சூரியன் மகனாக பிறந்தான். ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் உலகை சுற்றி வருவதால் திதிகளில் ஏழாவது நாள் சப்தமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.ரத சப்தமி அன்று ஏழு எருக்கம் இலைகளை தலையில் ஒன்று. கண்களில் இரண்டு, தோள்பட்டைகளில் இரண்டு, கால்களில் இரண்டை வைத்து ஸ்நானம் செய்வது வழக்கம். காலை 6.00 லிருந்து 7.30 க்குள் ஸ்நானம் பண்ண வேண்டும். தலையில் வைக்கும் இலையில் பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள்' அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது ஆரோக்கியத்தையும், செல்வ வளத்தையும் தரும்.ரதசப்தமி நாளில் செய்யப்படும் தர்மத்திற்கு பலமடங்கு புண்ணியம் உண்டு. இந்த நாளில் தொடங்கும் தொழில் பெருகும். பெண்கள் உயர்நிலையை அடைவர். கணவனை இழந்தவர்கள் இந்த விரதம் அனுஷ்டித்தால் அடுத்து வரும் பிறவிகளில் இந்த நிலை ஏற்படாது என்கின்றன புராணங்கள். இந்த நாள் தியானம், யோகா செய்ய சிறந்தது. சூரிய உதயத்தின் போது குளித்து விரதம் அனுஷ்டித்தால் செல்வந்தர் ஆக உயர்வார்கள் என்கின்றது புராணம்.ரத சப்தமி அன்று தஞ்சை, சூரியனார் கோவில், திருமலை ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயங்களில் திருவிழா நடக்கும்.. ஏழு மலைகளை ஏழு குதிரைகள் என கருதி ரதசப்தமி அன்று ஏழு வாகனங்களில் மலையப்பர் சுவாமி மாட வீதிகளில் ஊர்வலம் வருவார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்திலும் ரத சப்தமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Jan 16, 2026

அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

தாய் கூட சில மாதங்கள் தான்  எனக்கு பால் ஊட்டினாள். ஆனால் நான் இருக்கும் வரை எனக்குபால்  கொடுக்கும் நீ, என் தாயினும் சிறந்தவள்.உழவனுக்கு மட்டும் அல்ல, ஜல்லிக்கட்டு நிகழ்விற்கு பிறகு உலகுக்கே நீ செல்லப்பிள்ளை தான் .மண் வாசனையோடு ஏர் கலப்பைகளை சுமந்து,நாம் இன்பமாய் உணவுண்ண விவசாயிக்கு தோள்கொடுக்கும், மனிதனுக்கு பால் கொடுக்கும்பசு மாடுகளை வணங்குவோம்,உழவனுக்கு தோள் கொடுக்கும்எருதுகளை போற்றுவோம்.மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்!

Jan 15, 2026

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

சூரியனின் ஒளியைப் போல் பொங்கும் பொங்கலை போல், மணக்கும் அறுசுவை கொண்டபொங்கலின் சுவையை போல் ,உங்கள் வாழ்க்கை எப்போதும்,இனிமையுடன் மலரட்டும்,அதிர்ஷ்டத்தின் ஒளியால் வளர்ச்சி காணவும்,அன்பின் காற்றால் வாழ்வின்அமைதியை உணரவும்,கரும்பின் இனிமை போலவே உங்கள் வாழ்க்கை,வயலின் மாறுபட்ட பசுமை போலவே உங்கள் மனம்,தை பொங்கல் திருநாளில் உங்கள் வாழ்க்கையில், அனைத்தும் வெற்றியடைய உங்களுக்கும் ,உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

Jan 03, 2026

வைத்தியநாத சுவாமி கோவிலில் இன்று திருவாதிரை திருவிழா !

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழா விமரிசையாக நடைபெறும். இன்று  காலை 10 மணிக்கு 10 அடிஉயர  ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நடராஜர் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. அதன் பிறகு சந்தன காப்பு அணிவிக்கப்படும்,  வைத்திய நாத சுவாமி கோவில் கோபுரம் ,திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பட்டர்கள் மற்றும் நிர்வாகத்தினர்  இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். 

Jan 01, 2026

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்  2026

நிறைந்த வளம். நிறைந்த ஆரோக்கியம் மிகுந்த சந்தோசம், வெற்றி இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டு வரட்டும்.வெற்றிகள், சந்தோஷங்கள் மற்றும் உன்னதமான சாதனைகள் நிரம்பிய ஆண்டாக 2026 அமையட்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 16 17

AD's



More News