25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இன்றைய தினம்

Jun 05, 2026

ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் தினம் – பூமியைக் காக்க உறுதி ஏற்போம்!

: பூமியையும் இயற்கையையும் பாதுகாக்க வேண்டும் என்ற உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்த, ஐக்கிய நாடுகள் சபையால் 1973 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.: காடுகள் அழிப்பு, பிளாஸ்டிக் பயன்பாடு ஆகியவற்றால் பூமி வெப்பமயமாகி வருகிறது. இதைத் தடுக்க, ஒவ்வொருவரும் தங்கள் பிறந்தநாளில் ஒரு மரக்கன்றையாவது நட்டு வளர்க்க வேண்டும்.நாம் செய்ய வேண்டிய எளிய மாற்றங்கள்:பிளாஸ்டிக் பைகளைத் தவிர்த்து, துணிப்பைகளைப் பயன்படுத்துவது.தேவையில்லாத போது மின்விசிறி, விளக்குகளை அணைத்து மின்சாரத்தைச் சேமிப்பது.குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் மட்டுமே போடுவது மற்றும் தண்ணீரை வீணாக்காமல் சேமிப்பது."மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், பூமியைக் காப்போம்!" என்ற உறுதியோடு, வருங்காலத் தூண்களான குழந்தைகள் நினைத்தால் பசுமையான உலகை உருவாக்க முடியும்.

May 28, 2026

பக்ரீத் தின நல் வாழ்த்துக்கள்.

பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை போதிக்கும் நாள். தியாகத்தின் உன்னதத்தை உணர்த்தும் நாளான பக்ரீத் தின நல்வாழ்த்துக்கள்..சகோதரத்துவமும் ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட அனைத்து இஸ்லாம் மக்களுக்கும் பக்ரீத் நல்வாழ்த்துக்கள்|பக்ரீத் தினத்தில் உங்களின் முகத்தில் சிரிப்பும் உள்ளத்தில் அமைதியும் நிலைத்திரட்டும்.

May 20, 2026

மே 20ல் உலக தேனீக்கள் தினம்.

ஐ.நா., சார்பில் மே 20ல் உலக தேனீக்கள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி, தேனீக்கள் இல்லையெனில் உயிரினங்களின் சூழலியல் சுழற்சி பாதிக்கப்படும். தேன் முக்கிய உணவு. மருத்துவத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. உழைப்பை தேனீக்களிடம் இருந்து சுறுசுறுப்பு, கற்றுக்கொள்ளலாம். இவை பல வழிகளில் மனிதர்களுக்கு உதவுகிறது. தேனீக்கள் வளர்ப்பு, விவசாயத்துக்கும் உதவுகிறது. 'மக்கள், பிரபஞ்சத்துக்காக தேனீக்கள் ஒன்றிணைதல்; இந்த கூட்டு நம் அனைவரையும் பாதுகாக்கிறது' என்பது இந்தாண்டு கருத்து.

May 07, 2026

மே 7ல் உலக தடகள விளையாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

விளையாட்டு போட்டிகளில் முக்கியமானது தடகளம். மே 7ல் உலக தடகளதினம் கடைபிடிக்கப்படுகிறது. சர்வதேச தடகள கூட்டமைப்பு 1996ல் இத்தினத்தைஉருவாக்கியது. இது ஓடுதல், நடைபயிற்சி, குதிப்பது, ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல்உட்படபல்வேறுபிரிவுகளை உள்ளடக்கியது.பள்ளி,கல்லுாரிகளில்தடகளவிளையாட்டுபோட்டிகளில் மாணவர்கள், இளைஞர்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்தும் விதமாக, இளைஞர்கள் உடல்நலனை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. 

May 01, 2026

உலக தொழிலாளர்" மே தின" நல்வாழ்த்துகள்

முயன்றால் முடியாதது இல்லைமுயற்சிப்போம் முடிவுக்காக அல்லநம் முன்னேற்றத்திற்காகவீட்டை உயரத்திட நாட்டை வளரத்திட நாளை உருவாக இன்று உழைத்திடும் உன்னத கரங்களேஅனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்..!  உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; நம்பிக்கையோடு உழைத்தால்வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்.  தனக்கென்று சேமிக்காமல் தன் குடும்பத்திற்காக ஓய்வின்றி உழைக்கும் ஒவ்வொரு அம்மாவிற்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள். அனைவருக்கும்  உழைப்பாளர் ,தொழிலாளர்கள்  'மே' தின வாழ்த்துக்கள்..! உலக வளர்ச்சியில் உலகின் சமூக. பொருளாதார தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு, உழைப்பை அங்கீகரிக்கும் விதமாக தொழிலாளர் அமைப்பு சார்பில் மே 1ல் உலக தொழிலாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தொழிலாளர்களுக்கு '8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர துாக்கம்' என்ற வகையில் இருக்க வேண்டும் என்பதைஇத்தினம் வலியுறுத்துகிறது 19ம் நுாற்றாண்டில் வளர்ந்த நாடுகளில் 12-18 மணி நேரம் கட்டாயம் வேலை என இருந்தது. இதை எதிர்த்து தொழிலாளர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்தியாவில் 1923ல் இத்தினம் தொடங்கப்பட்டது.

Apr 14, 2026

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

புதிய வருடம் ,புதிய கனவுகளின் தொடக்கம்,தைரியத்துடன் நகருங்கள்,வெற்றி உங்களையே தேடிவரும்.எண்ணங்களில் தெளிவு,செயல்களில் நம்பிக்கை,வாழ்க்கையில் நிறைவு தரும் ஒரு புத்தாண்டாக மலரட்டும்.

Apr 14, 2026

26 ஆம் ஆண்டில் இராஜபாளையம் டைம்ஸ் .

26 ஆம் ஆண்டில் இராஜபாளையம் டைம்ஸ் .4 ஆம் ஆண்டில் இராஜபாளையம் டைம்ஸ். E . paper.தினமும் 5000 பார்வையாளர்களை கொண்ட E. Paper

Mar 31, 2026

ராஜபாளையம் சேத்தூர் சேவுக பாண்டியன் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த உடைந்தநிலையில் சமணர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப் பட்டுள்ளது.

மகாவீரரின் 2624வதுபிறந்தநாள் கொண்டாடுவதை முன்னிட்டு,மகாவீர் ஜெயந்தி மார்ச் 31ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சமணர்களின் 24 வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரின் பிறப்பை குறிப்பதுடன் அகிம்சை,சத்தியம், கருணை ஆகிய அடிப்படை கோட்பாடுகளை  வலியுறுத்துகிறது. ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி வரலாற்று துறை பேராசிரியர் கந்தசாமி ,தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது, திருச்சுழி, அருப்புக்கோட்டையில் சமணம் செழித்திருந்ததற்கான ஆவணங்கள் கிடைத்தாலும், ராஜபாளையம் அடுத்த சேத்துாரில் சமணர் சிற்பமும், புத்தூரில் சமண முனிவர்களின் கற்படுகைகளும், மீனாட்சிபுரம் குகை களும் சமண முனிவர்கள் அதிகமாக இப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளதை பிர திபலிக்கின்றது.இத்தகைய வரலாற்று இடங்களை பாதுகாத்து ஆவணப்படுத்தி பள்ளி, கல்லுாரி மாணவர்களை  அழைத்துச் சென்று நமது  பாரம்பரியத்தின் முக்கியத்துவம் உணர்த்த வேண்டும்  என்றார்.

Mar 21, 2026

இனிய ரமலான் வாழ்த்துக்கள்.

பிறை கண்டு கொண்டாடும் பெருநாள் ஈகையும் நட்பையும் போற்றும் நாள் .இந்நன்னாளில் உங்கள் எல்லா துன்பங்களும் கரைந்து வாழ்வில் மகிழ்ச்சி பொங்க,இந்த புனித நாளானது உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்தட்டும்.ரமலானின் வாசலில் மூன்று கதவுகள் முதல் கதவை திறந்தவன் அருளை பெறுகிறான் இரண்டாம் கதவை கடந்தவன் பாவமன்னிப்பை வரமாக பெறுகிறான இறுதிக் கதவை அடைந்தவன் நரகத்தின் வாயிலை விட்டும் சுவனத்தில் வாழ்கிறான்வீட்டின் சுவர்களை வண்ணங்களால் அலங்கரித்து கூரையின் தூசுக்களை சுத்தப்படுத்தி எழிலாக்குவதை போல உள்ளத்தின் அடித்தளத்தில் நன்மையான ரமலானின் நிலையான தூண்களால் சுவர்க்கத்தில் விலைமதிப்பான அமல்களால் மாளிகை கட்டு முடித்தால் இன்னும் எதையாவது சேர்த்துக் கொள்.உங்களுடைய எல்லா தேவைகனையும் இந்நன்னாளில் அல்லாஹ் நிறைவேற்றுவாராக...இனிய ரமலான் மாதம் கடைபிடிக்க வேண்டியவைரமலான் என்பது பொறுமை, அன்பு மற்றும் தான தர்மத்தின் அடையாளம்ரமலானில் 1 ரூபாய் தர்மம் செய்தால் 70 மடங்கு முதல் 700 மடங்கு வரை நன்மை கிடைக்கும்நம்மிடம் உள்ள பழைய கிழிந்த ஆடைகளை கொடுக்கக் கூடாது. நாம் எதை விரும்பி அணிகிறோமோ அதையே கொடுக்க வேண்டும்தர்மம் செய்வதால் நமது சொத்துக்கள் குறையாது. மாறாக சொத்துக்கள் சுத்தம் செய்யப்பட்டு பெருகும் மற்றும் பாதுகாக்கப்படும்.பசியோடு இருப்பவருக்கு உணவிடும் போது கிடைக்கும் அந்த மகிழ்ச்சி மனதுக்கு பெரிய நிம்மதியை தரும்..கொடுப்பவருடைய கை எப்போதும் உயர்ந்தது.

Mar 19, 2026

தெலுங்கு புத்தாண்டு யுகாதி வாழ்த்துக்கள்.

பிரம்மன் உலகத்தை படைத்த நாளாக கருதப்படும் யுகாதி நாளில் நிறைந்த வளம். நிறைந்த ஆரோக்கியம், மிகுந்த சந்தோசம், வெற்றி, இவற்றை எல்லாம் இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்.இன்னல்கள் நீங்கி இன்பம் சேர்க்கட்டும்.இனிய தெலுங்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 16 17

AD's



More News