25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ராஜபாளையம் சேத்தூர் சேவுக பாண்டியன் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த உடைந்தநிலையில் சமணர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப் பட்டுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் சேத்தூர் சேவுக பாண்டியன் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த உடைந்தநிலையில் சமணர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப் பட்டுள்ளது.

மகாவீரரின் 2624வதுபிறந்தநாள் கொண்டாடுவதை முன்னிட்டு,மகாவீர் ஜெயந்தி மார்ச் 31ல் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் சமணர்களின் 24 வது மற்றும் கடைசி தீர்த்தங்கரரின் பிறப்பை குறிப்பதுடன் அகிம்சை,சத்தியம், கருணை ஆகிய அடிப்படை கோட்பாடுகளை  வலியுறுத்துகிறது. 

ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி வரலாற்று துறை பேராசிரியர் கந்தசாமி ,தொல்லியல் ஆய்வாளர் கூறியதாவது, திருச்சுழி, அருப்புக்கோட்டையில் சமணம் செழித்திருந்ததற்கான ஆவணங்கள் கிடைத்தாலும், ராஜபாளையம் அடுத்த சேத்துாரில் சமணர் சிற்பமும், புத்தூரில் சமண முனிவர்களின் கற்படுகைகளும், மீனாட்சிபுரம் குகை களும் சமண முனிவர்கள் அதிகமாக இப்பகுதியில் வாழ்ந்து வந்துள்ளதை பிர திபலிக்கின்றது.

இத்தகைய வரலாற்று இடங்களை பாதுகாத்து ஆவணப்படுத்தி பள்ளி, கல்லுாரி மாணவர்களை  அழைத்துச் சென்று நமது  பாரம்பரியத்தின் முக்கியத்துவம் உணர்த்த வேண்டும்  என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News