25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


விடுகதை

May 25, 2026

காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான். 

காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான். அவன் யார்? -தென்னை மரம்.சுற்றும் போது மட்டும் சுகம் தரும். அது என்ன ? - மின் விசிறி

May 18, 2026

ஆயிரம்பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது.

வாலிலே எண்ணெய், தலையிலே கொள்ளி. அது என்ன? - விளக்குத்  திரி. ஆயிரம்பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவர்கள் யார்? - எறும்புக் கூட்டம்.  

May 11, 2026

அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான்.

மேலே மேலே செல்லும், ஆனால் கீழே வராது. அது என்ன? வயது அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான். அவன் யார்? புகை

May 04, 2026

மென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன். 

வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப்படம். அது என்ன?  - கனவு மென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன். அவன் யார்? - நத்தை  

Apr 27, 2026

காது பெரியது, ஆனால் கேளாது. வாய் பெரியது, ஆனால் பேசாது. வயிறு பெரியது, ஆனால் உண்ணாது. 

காது பெரியது, ஆனால் கேளாது. வாய் பெரியது, ஆனால் பேசாது. வயிறு பெரியது, ஆனால் உண்ணாது. அது என்ன? - அண்டா ராஜா உண்டு, ராணி உண்டு, மந்திரியும் உண்டு. ஆனால் நாடு இல்லை. அது என்ன? - சீட்டு கட்டு

Apr 20, 2026

அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை. அது என்ன?

அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை. அது என்ன? - தலை வகிடு. முதுகை தொட்டால் மூச்சு விடுவான், பல்லைத் தொட்டால் பாட்டு பாடுவான். அவன் யார்? – ஆர்மோனியம்.

Apr 13, 2026

உயரத்திலிருந்து விழுவான் ,அடியே படாது தரைக்குத்தான் சேதாரமாகும்.

உயரத்திலிருந்து விழுவான் ,அடியே படாது தரைக்குத்தான் சேதாரமாகும். அது என்ன? - அருவி நீர்.  பச்சைக் கீரை சமைக்க உதவாது ,வழுக்க உதவும். அது என்ன? – பாசி.

Apr 06, 2026

.மண்ணைச் சாப்பிட்டு மண்ணிலேயே வாழ்ந்து, மண்ணோடு மண்ணாவான்.

என் குதிரை கருப்புக் குதிரை, குளிப்பாட்டினால் வெள்ளைக் குதிரை. அது என்ன?  - உளுந்து. .மண்ணைச் சாப்பிட்டு மண்ணிலேயே வாழ்ந்து, மண்ணோடு மண்ணாவான். அவன் யார்? - மண்புழு.

Mar 30, 2026

உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம். 

உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம். அது என்ன? தராசு. தாடிக்காரன், மீசைக்காரன், கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன். அவன் யார்/-?  தேங்காய்.

Mar 23, 2026

 உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். 

நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன். நான் யார்? - வெங்காயம்  உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்? - கடல் அலை

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

AD's



More News