25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


விடுகதை

Apr 07, 2024

முதுகை தொட்டால் மூச்சு விடுவான், பல்லைத் தொட்டால் பாட்டு பாடுவான்.

அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை. அது என்ன?---தலை வகிடுமுதுகை தொட்டால் மூச்சு விடுவான், பல்லைத் தொட்டால் பாட்டு பாடுவான். அவன் யார்?-----ஆர்மோனியம்   

Mar 10, 2024

உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்

.நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன். நான் யார்?வெங்காயம்உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்?கடல் அலை

Mar 03, 2024

.தேவைப்படும்போது தூக்கி எறியப்படும். தேவை இல்லாத போது பத்திரமாய் வைக்கப்படும். அது என்ன?

இந்த குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனையுண்டு. ஆனால் குற்றத்தை செய்து விட்டால் தண்டிக்க முடியாது. அது என்ன?  தற்கொலை தேவைப்படும்போது தூக்கி எறியப்படும். தேவை இல்லாத போது பத்திரமாய் வைக்கப்படும். அது என்ன?  நங்கூரம்   

Feb 25, 2024

அச்சு இல்லாத சக்கரம், அழகை கூட்டும் சக்கரம். 

அச்சு இல்லாத சக்கரம், அழகை கூட்டும் சக்கரம். அது என்ன?வளையல்   .முக்கண்ணன் சந்தைக்கு போகின்றான். அவன் யார்?தேங்காய்

Feb 18, 2024

மணி அடித்தால் மலைப்பாம்பு நகரும்.அது என்ன?

மணி அடித்தால் மலைப்பாம்பு நகரும்.அது என்ன?இரயில் என்னைத் தெரியாத போது தெரிந்து கொள்ளும்ஆவல். தெரிந்த பிறகு பகிர்ந்து கொள்ளும் ஆசை. நான் மறைக்கப்பட வேண்டியவன். நான் யார்?ரகசியம்

Feb 11, 2024

வாங்கும்போது கறுப்பு நிறமாகவும், பயன்படுத்தும்  போது சிவப்பு நிறமாகவும், தூக்கி எறியும் போது சாம்பல் நிறமாகவும் இருப்பது எது?

அஸ்திவாரம் இல்லாமல் அரண்மனை கட்டினேன். அது என்ன?   ---கப்பல்வாங்கும்போது கறுப்பு நிறமாகவும், பயன்படுத்தும்  போது சிவப்பு நிறமாகவும், தூக்கி எறியும் போது சாம்பல் நிறமாகவும் இருப்பது எது?---விறகு

Feb 04, 2024

சங்கீதம் பாடுபவனுக்கு, சாப்பாடு இரத்தம். 

தேர் ஓடுது பூ உதிருது .அது என்ன?      அரவை இயந்திரம் சங்கீதம் பாடுபவனுக்கு, சாப்பாடு இரத்தம். அது என்ன?      கொசு

Jan 28, 2024

. நான் ஒரு பாறை. ஆனால், நீரில் போட்டால் கரைந்து விடுவேன்

நான் மிகவும் முக்கியமானவன். ஆனால் ஒரு சில வினாடிக்கு மேல் என்னை உங்களிடம் வைத்திருக்க முடியாது. நான் யார்?மூச்சு காற்று. நான் ஒரு பாறை. ஆனால், நீரில் போட்டால் கரைந்து விடுவேன். நான் யார்?  ஐஸ் கட்டி 

Jan 21, 2024

 இவருடைய உடம்பெல்லாம் சிகப்பு, குடுமி பச்சை. யார் இவர்?

உயரமான இடத்தில் இருந்து தூக்கி எரிந்தாலும், அதற்கு ஒன்றும் ஆகாது. அனால், தண்ணீரில் போட்டால் மட்டும், அது செத்து விடும். அது என்ன?காகிதம்இவருடைய உடம்பெல்லாம் சிகப்பு, குடுமி பச்சை. யார் இவர்?தக்காளி

Jan 14, 2024

உடம்பு முழுவதும் முள்.அது என்ன? கள்ளிசெடி

முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது. அது என்ன?   குயில் உடம்பு முழுவதும் முள்.அது என்ன?   கள்ளிசெடிகையை வெட்டுவார்; கழுத்தை வெட்டுவார். ஆனாலும் நல்லவர். யார் அவர்?  தையல்காரர்

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

AD's



More News