தனுஷ், கிர்த்தி சனோன் நடிப்பில், ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஹிந்தியில் சமீபத்தில் வெளியான படம் 'தேரே இஷ்க் மெய்ன்'. தமிழிலும் டப்பாகி ரிலீஸானது. இப் படம் உலகளவில் ரூ.118 கோடி வசூலை கடந்துள்ளது. மீண்டும் ஹிந்தியில் ரூ.100 கோடி வசூலை கடந்து 'ராஞ்சனா' படத்திற்கு பின், வெற்றி பெற்றுள்ளார் தனுஷ்.
30 ஆண்டுகள் முன் ஷாருக்கான், கஜோல் நடிப்பில், 1995ல் ஹிந்தியில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே'. இதையொட்டி லண்டனின் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலின் வெண்கல சிலையை வைத்துள்ளனர். இதை இவர்கள் இருவருமே துவக்கி வைத்தனர். ஷாருக்கான். "இந்த சதுக்கத்தில் கவுரவிக்கப்படும் முதல் இந்திய படம் இது என்பதில் நம்ப முடியாத மகிழ்ச்சி" என்றார்.
பாலகிருஷ்ணா நடித்துள்ள போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் தெலுங்கு படமான "அகண்டா 2' தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளிலும் வெளியானது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாலகிருஷ்ணா, ''நான் பிறந்தது சென்னை, இதுவே எனக்கு ஜென்ம பூமி. ஆந்திரா ஆத்ம பூமி, தெலுங்கானா கர்மபூமி. எனக்கும் தமிழக மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இப்படம் இந்து தர்மத்தை பற்றி உலகத்திற்கும், சனாதன தர்மத்தின் உயர்வையும் வலியுறுத்தும். வரும் தலைமுறையினருக்கும் சனாதன தர்மம் தெரிய வேண்டும்" என்றார்.
பிரபாஸ் நடித்த, ராஜமவுலி இயக்கத்தில் 'பாகுபலி' படத்தின் இரு பாகங்களையும் ஒன்றிணைத்து 'பாகுபலி தி எபிக்' எனும் படத்தை சமீபத்தில் இந்தியாவில் வெளியிட்டு வரவேற்பை பெற்றது. ஜப்பானில் டிச.12ல் ரிலீசாகிறது. இதற்காக ஜப்பான் சென்ற பிரபாஸ் ரசிகர்களின் வரவேற்பை பார்த்து, கனவு இன்று நனவாகியுள்ளது .'ஜப்பானிய ரசிகர்கள் நம் மீது மிகப் பெரிய அன்பு வைத்திருப்பதாக சொல்லி,. இனி ஆண்டுதோறும்ஜப்பான் வந்து ரசிகர்களை சந்திப்பேன்" என்றார்.
ஜிதின் கே ஜோஸ் இயக்கி,மம்முட்டி நடிப்பில் ( 05/12/2025) மலையாளத்தில் வெளியான படம் களம் காவல்.. கதை நாயகனாக விநாயகனும், எதிர்மறை வேடத்தில் மம்முட்டியும் நடித்துள்ளனர். இதில் ரஜிஷா, ஸ்ருதி ராமச்சந்திரன், காயத்ரி அருண், மாளவிகா மேனன் உள்ளிட்ட 22 கதாநாயகிகள் நடித்துள்ளனர்.
ஏஆர் ஜீவா இயக்கத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதையின் நாயகியாக நடித்துள்ள 'லாக் டவுன்' படம் ஏஆர் ஜீவா இயக்கத்தில் டிச.5ல் ரிலீஸானது. ஒரு சம்பவத்தால் பாதிக்கப்படும் அனுபமா அதை வீட்டில் சொல்ல முடியாமல் தவிக்கிறார். இந்தச்சூழலில் லாக் டவுன் போடப்படுகிறது. இதன் பின்னணியில் நடக்கும் கதையாக உண்மை சம்பவத்தை தழுவி இப்படத்தை எடுத்துள்ளனர். 14 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் டிரைலருக்கு கிடைத்துள்ளன.
ஜேசன் சஞ்சய் நடிகர் விஜய் மகன் இயக்குனராக களமிறங்கி உள்ளார். இவரின் முதல் படத்தில் சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. தற்போது இந்த படத்திற்கு சிக்மா என பெயரிட்டு முதல் பார்வையை வெளியிட்டுள்ளனர். ஆக்ஷன் கதையில் உருவாகி உள்ளது.இந்த படத்தில் ஒரு சிறப்பு பாடல் உள்ளது. அதில் கேத்ரின் தெரஸா நடனம் ஆடி உள்ளார். அவருடன் ஜேசனும் நடனமாடி நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தி உள்ளார் .
அனிமேஷன் திரைப்படமான அஷ்வின் குமார் இயக்கத்தில் வெளியான 'மகா அவதார் நரசிம்மா' 98வது ஆஸ்கர் விருதுக்கான அனிமேஷன் படங்களுக்கான போட்டியில் இடம் பெற்றுள்ளது. ஆஸ்கர் விருதுக் குழு அறிவித்துள்ள 35 படங்க ளின் பட்டியலில் இந்தப் படமும் உள்ளது. இறுதியாக இதிலிருந்து 5 படங்களை தேர்வு செய்வார்கள்.
மகேஷ்பாபு, பிருத்விராஜ், பிரியங்கா சோப்ரா நடிக்கும் , ராஜமவுலி இயக்கத்தில் படம் 'வாரணாசி'. 2027ல் வெளியாகும் இதன் படப்பி டிப்பு நடக்கிறது. பிரமாண்ட படம் என்பதால் தெலுங்கு தெரியாத, பிரியங்காவிற்கு தானே டப்பிங் பேச வேண்டும் என்பதற்காக தற்போது தெலுங்கை இவர் கற்று வருகிறார்.
சினிமாவிலிருந்து ஓய்வு குறித்த கேள்வி ,கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கமலிடம் கேட்டதற்கு அவர்,” ரசிகர்களுக்கு புது கூட்டணி தேவை என்றால் பழைய கூட்டணிக்கு ஓய்வு கொடுத்துவிடுவார்கள்”. “நான் தோல்வி படம் கொடுத்தால் ரிட்டயர்டு ஆக நினைத்தது உண்டு”. “என் நண்பர்கள் தான் நல்ல படம் நடித்துவிட்டு ஓய்வு கொடு என்பார்கள்.” “அப்படி ஒரு நல்ல படத்தை பண்ணிட்டு ஓய்வு பெறுகிறேன்"என்றார்.