25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Jul 16, 2026

கங்குலி வாழ்க்கை வரலாறு திரைப்படம் 'தாதா'

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் 'தாதா' திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ராஜ்குமார் ராவ் கங்குலியாக நடிக்க, விக்ரமாதித்யா மோத்வானே இயக்குகிறார். கங்குலியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான போஸ்டரில், லார்ட்ஸ் மைதானத்தில் ஜெர்சியை கழற்றி கொண்டாடிய அவரது புகழ்பெற்ற தருணம் இடம்பெற்றுள்ளது. படம் அடுத்த ஆண்டு மே 14-ம் தேதி வெளியாகிறது.

Jul 16, 2026

37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 'கிரீடம்'.

1989-ல் மோகன்லால், பார்வதி, திலகன் நடித்த மலையாள வெற்றிப்படமான 'கிரீடம்', டிஜிட்டல் வடிவில் புதுப்பிக்கப்பட்டு 37 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படமே பின்னர் தமிழில் அஜித் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றி பெற்றது.

Jul 16, 2026

துல்கர் சல்மானின் புதிய படம் 'ஸ்ரீ ஸ்ரீ'.

துல்கர் சல்மானின் 41-வது படத்திற்கு 'ஸ்ரீ ஸ்ரீ' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரவி நெலகுடிதி இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். காதல் கதையை மையமாகக் கொண்ட இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

Jul 16, 2026

திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் ஜூலை 19.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் ஜூலை 19-ம் தேதி நடைபெறுகிறது. தலைவர் பதவிக்கு இயக்குநர் சேரன் மற்றும் வி.சி. குகநாதன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும் பலர் களமிறங்கியுள்ளனர்.

Jul 16, 2026

எஸ். ஜானகிக்கு இசை அஞ்சலி.

பின்னணி பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், கங்கை அமரன், எஸ்பிபி சரண், ஸ்வேதா மோகன், ஹரிச்சரண் உள்ளிட்டோர் இணைந்து 'காற்றில் எந்தன் கீதம்' பாடலைப் பாடி இசை மரியாதை செலுத்தினர்.

Jul 16, 2026

ரூ.100 கோடி வசூலை கடந்த சமந்தாவின் படம்.

நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடித்த 'மா இன்டி பங்காரம்' (தமிழில் 'எங்கள் தங்கம்') உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளது. சமந்தாவின் திரைப்பயணத்தில் ரூ.100 கோடி வசூலை எட்டிய முதல் படமாக இது அமைந்துள்ளது.

Jul 16, 2026

தாய் கிழவி' இயக்குநருக்கு கார் பரிசு.

ராதிகா நடிப்பில், சிவகுமார் முருகேசன் இயக்கிய 'தாய் கிழவி' திரைப்படம் ரூ.90 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி பெற்றது. படத்தின் 100-வது நாள் விழாவில், இயக்குநர் சிவகுமார் முருகேசனுக்கு தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கினார். படக்குழுவினருக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன

Jul 16, 2026

இந்தியாவில் வெற்றி... ஜப்பானில் ஏமாற்றம்

ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர்' திரைப்படம் இந்தியாவில் வசூல் சாதனை படைத்த நிலையில், ஜப்பானில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. ஆனால் அங்கு முதல் நாளில் வெறும் 900 பேர் மட்டுமே படம் பார்த்ததாகவும், எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Jul 16, 2026

ஜூலை 17-ல் 6 தமிழ் படங்கள் ரிலீஸ்?

தமிழ் திரையுலகில் ஜூலை 17-ஆம் தேதி ஒரே நாளில் 'அர்ஜுனன் பேர் பத்து', 'அருள்வான்', 'அன்பே டயானா', 'டார்க் ஹெவன்', 'கண் இமைக்கும் நேரத்தில்', 'நாடோடி கூட்டம்' உள்ளிட்ட 6 படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படம் ஜூலை 24-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால், இந்தப் பட்டியலில் உள்ள சில படங்கள் தங்களது வெளியீட்டு தேதியை மாற்றக்கூடும் என திரையுலகில் பேசப்படுகிறது.

Jul 13, 2026

இசைக்குயில் எஸ். ஜானகி மறைவு: இசை உலகின் பொற்காலம் முடிந்தது.

தென்னிந்திய திரையுலகின் புகழ்பெற்ற பின்னணிப் பாடகியும், ரசிகர்களால் 'இசைக்குயில்' என்று போற்றப்பட்டவருமான எஸ். ஜானகி (88), உடல்நலக்குறைவு காரணமாக கர்நாடக மாநிலம் மைசூருவில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.1938 ஏப்ரல் 23-ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் ராமமூர்த்தி – சத்தியவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்த ஜானகி, சிறுவயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டு நாதஸ்வர மேதை பைடிசாமியிடம் முறையாக இசை பயின்றார். 1956-ஆம் ஆண்டு வானொலி இசைப் போட்டியில் வெற்றி பெற்று, அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்திடம் பரிசு பெற்றது, அவரது இசைப் பயணத்தின் முக்கிய தொடக்கமாக அமைந்தது.திரையுலகில் அறிமுகமான முதல் ஆண்டிலேயே ஆறு மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கவனம் ஈர்த்தார். 'கொஞ்சும் சலங்கை' திரைப்படத்தில் எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையில் அவர் பாடிய 'சிங்கார வேலனே தேவா' பாடல், இன்று வரை தமிழ் இசையின் காலத்தால் அழியாத பாடல்களில் ஒன்றாக திகழ்கிறது.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 17 மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி, இந்திய இசை வரலாற்றில் தனக்கென அழியாத முத்திரை பதித்தார். குழந்தையின் மழலைக் குரல் முதல் முதியவரின் குரல் வரை பல்வேறு குரல் வடிவங்களில் பாடும் அபார திறமை அவருக்கே உரியது.நான்கு முறை தேசிய விருது பெற்ற ஜானகி, தமிழில் 'செந்தூரப்பூவே...' (பதினாறு வயதினிலே) மற்றும் 'இஞ்சி இடுப்பழகா...' (தேவர் மகன்) உள்ளிட்ட பாடல்களுக்காக தேசிய அங்கீகாரம் பெற்றார். 2013-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை ஏற்க மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.மேலும், கேரள அரசு விருது 11, ஆந்திர அரசு விருது 9, தமிழக அரசு விருது 6, ஒடிசா அரசு விருது 1, பிலிம்பேர் விருதுகள் 20 மற்றும் இலங்கையின் 'ஞான கான சரஸ்வதி' உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.2016-ஆம் ஆண்டு பாடகியாக இருந்து ஓய்வு பெற்ற எஸ். ஜானகி, தனது இனிமையான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 89 90

AD's



More News