25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Jul 30, 2026

90 வயதிலும் ஆரோக்கியம்... வெண்ணிற ஆடை மூர்த்தியின் வாழ்க்கை முறை!

90 வயதிலும் உற்சாகமாக இருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி, தனது ஆரோக்கிய ரகசியங்களை பகிர்ந்துள்ளார். "நான் எப்போதும் வீட்டில் சமைத்த சைவ உணவையே சாப்பிடுவேன். ஆடம்பர உணவுகளை விரும்புவதில்லை. உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லாவிட்டாலும், இரவில் சீக்கிரம் உணவருந்துவேன். இதுவரை உடல்நலக் குறைவால் எந்த படப்பிடிப்பும் பாதிக்கப்படவில்லை. தற்போது குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காக நடிப்பில் இருந்து விலகியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

Jul 23, 2026

ஜூலை 23-ல் திரைக்கு வரும் 'ஜனநாயகன்'.தியேட்டர்களுக்கு சிறப்பு அறிவுறுத்தல்.

முதல்வர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், சென்சார் நடைமுறைகள் மற்றும் இணைய கசிவு போன்ற சவால்களைத் தொடர்ந்து, ஜூலை 23-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. ஜூலை 19 முதல் முன்பதிவு தொடங்கும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், படத்தின் டைட்டில் கார்டில் 'முதல்வர் விஜய்' என்ற பெயர் இடம்பெற உள்ளது.'ஜனநாயகன்' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், திரையரங்குகளுக்கு சில முக்கிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிக்கெட்டுகளை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலேயே விற்பனை செய்ய வேண்டும் என்றும், 'ஏ' சான்றிதழ் பெற்ற படம் என்பதால் 18 வயதுக்குட்பட்டவர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் வெளியீட்டில் எந்தவித முறைகேடும் நடைபெறாமல் இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Jul 23, 2026

சீதா' கதாபாத்திரம் எனக்கு அரிய வாய்ப்பு - சாய் பல்லவி.

'ராமாயணா' திரைப்படத்தில் சீதா தேவியாக நடித்துள்ள சாய் பல்லவி, இந்தக் கதாபாத்திரம் தனது திரைப்பயணத்தில் மிக முக்கியமான அனுபவம் என தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், "சீதா தேவி போன்ற தெய்வீகமான கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது. அந்த வேடம் எனக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்தது. இது என் வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவம்," என்றார்.

Jul 23, 2026

திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவராக சேரன்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகத் தேர்தலில் இயக்குநர் சேரன் வெற்றி பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மொத்தம் பதிவான 432 வாக்குகளில் சேரன் 279 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரது எதிரணி வேட்பாளர் வி.சி. குகநாதன் 155 வாக்குகள் பெற்றார்.

Jul 23, 2026

திருமணத்திற்காக தற்காலிகமாக பெயரை மாற்றிய ஷாருக்கான்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரியின் காதல் திருமணம் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று தற்போது மீண்டும் பேசப்படுகிறது. முஸ்தாக் ஷேக் எழுதிய 'Shah Rukh Can' நூலின்படி, குடும்பங்களின் சம்மதத்தைப் பெறுவதற்காக ஷாருக்கான் தற்காலிகமாக 'அபிநவ்' என்றும், கவுரி 'ஆயிஷா' என்றும் பெயரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் தங்களது மதத்தை மாற்றாமல் திருமணம் செய்து கொண்டனர்

Jul 23, 2026

'பவழ மல்லி', 'முட்ட கலக்கி' பாடல்களுக்கு 250 மில்லியன் பார்வைகள்.

சாய் அபயங்கர் இசையில், ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து வெளியான தனிப்பாடல் 'பவழ மல்லி' ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் கயாடு லோஹரும் நடித்துள்ளார். அதேபோல், கென் கருணாஸ் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த 'யூத்' படத்தின் 'முட்ட கலக்கி' பாடலும் இளைஞர்களை கவர்ந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான இந்த இரண்டு பாடல்களும் தற்போது 250 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளன.

Jul 23, 2026

'தி ஒடிசி' உலக வசூல் ரூ.2,500 கோடியை கடந்தது.

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் ஜூலை 17-ம் தேதி வெளியான ஹாலிவுட் திரைப்படம் 'தி ஒடிசி', உலகம் முழுவதும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது. சுமார் ரூ.2,400 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த படம், முதல் வார இறுதிக்குள் ரூ.2,546 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் மட்டும் படம் ரூ.73 கோடி வசூல் செய்துள்ளது.

Jul 23, 2026

கட்டா குஸ்தி 2' ரூ.55 கோடி வசூல்: ரசிகர்களுக்கு விஷ்ணு விஷால் நன்றி .

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்த 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் உலகளவில் ரூ.55 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி நடைபோட்டு வருகிறது.இதையடுத்து நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட பதிவில், "ரூ.50 கோடியைத் தாண்டிய எனது முதல் படம் இது. மறக்க முடியாத தருணம். இந்த வெற்றியை கொண்டாடிய அனைத்து ரசிகர்களுக்கும் மனமார்ந்த நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு மிகப்பெரிய பலம். இனியும் சிறந்த கதைகளைத் தேர்வு செய்து உங்களை மகிழ்விக்க தொடர்ந்து உழைப்பேன்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Jul 23, 2026

26 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ருதீன் ஷா.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா நடிக்கும் 'ஓம்'படத்தில் பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா இணைந்துள்ளார். 'ஹே ராம்' படத்திற்குப் பிறகு 26 ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் தமிழில் நடிக்கிறார்.

Jul 23, 2026

வைல்டு லைப் புகைப்படக் கலைஞராக சிவராஜ்குமார்.

கன்னட நடிகர் சிவராஜ்குமார், தமிழில் 'ஜெயிலர் 2' உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக 'வெல்கம் டூ வைல்டு லைப்' படத்தில் வனவிலங்கு புகைப்படக் கலைஞராக புதிய தோற்றத்தில் நடிக்கிறார். கார்த்திக் ராஜூ இயக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர், சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டது. தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படம் உருவாகிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 89 90

AD's



More News