25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெள்ளித்திரை

Aug 13, 2026

100 கோடி பார்வைகளை கடந்த ‘ராமாயணா’ டிரைலர்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் உள்ளிட்டோர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘ராமாயணா’. இப்படம் நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர், பல்வேறு சமூக வலைதளங்களில் இணைந்து 100 கோடி பார்வைகளை கடந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Aug 13, 2026

இந்திய வசூலில் புதிய சாதனை படைத்த ‘ஸ்பைடர்மேன்’

டாம் ஹாலண்ட் நடிப்பில் ஜூலை மாத இறுதியில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’. இந்திய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம், 11 நாட்களில் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன் மூலம் இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படமாக ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ முதலிடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு வெளியான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ ரூ.490 கோடி வசூலுடன் முதலிடத்தில் இருந்தது.

Aug 13, 2026

இந்த வாரம் இரண்டு படங்கள் மட்டுமே ரிலீஸ்.

2026-ம் ஆண்டின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி சனிக்கிழமை வருகிறது. பொதுவாக சுதந்திர தினத்தை ஒட்டி முன்னணி நடிகர்களின் பல திரைப்படங்கள் வெளியாகும்.ஆனால் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14-ம் தேதி சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ மற்றும் விஷால் நடிக்கும் ‘மகுடம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியாக உள்ளன

Aug 13, 2026

‘டாக்சிக்’ டிரைலருக்கு இந்தியில் அமோக வரவேற்பு.

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘டாக்சிக்’. இப்படத்தின் டிரைலர் சனிக்கிழமை ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வெளியானது.வெளியான 24 மணி நேரத்தில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து 52.8 மில்லியன் பார்வைகளை டிரைலர் பெற்றுள்ளது. குறிப்பாக இந்தி பதிப்பு 24 மில்லியன் பார்வைகளுடன் முன்னிலையில் உள்ளது. கன்னடம் மற்றும் தமிழ் பதிப்புகள் தலா 11 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கு 10 மில்லியன் பார்வைகளையும், மலையாளம் 4 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளன.யஷ் நடிப்பில் முன்பு வெளியான ‘கே.ஜி.எஃப்’ டிரைலர் 106 மில்லியன் பார்வைகளை பெற்றிருந்த நிலையில், ‘டாக்சிக்’ டிரைலர் அதைவிட குறைவான பார்வைகளை பெற்றுள்ளது.

Aug 13, 2026

'டிஜிட்டல் விரதம்' கடைப்பிடியுங்கள்: சமுத்திரக்கனி.

மாதத்திற்கு ஒரு நாளாவது மொபைல் போன்களை பயன்படுத்தாமல் 'டிஜிட்டல் விரதம்' இருக்க வேண்டும் என்று நடிகர் சமுத்திரக்கனி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். இது மனநலத்தையும், உடல்நலத்தையும் மேம்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Aug 06, 2026

இந்த வாரம் 4 படங்கள் ரிலீஸ்

.'ஜனநாயகன்' ரிலீஸால் இரு வாரங்களாக படங்கள் வெளி யீடு 'டல்' அடித்தது. ஆகஸ்ட் துவங்கி உள்ள நிலையில் ஆக., 7ல் மாதவனின் 'ஜிடி என்', லோகேஷ் கனகராஜின் 'டிசி' ஆகிய டங்களுடன் புதுமுகங்கள் நடித்துள்ள போட்டோகிராபர், வைப் பேங்க் ஆப் இந்தியா' ஆகிய4 படங்கள் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.இந்தியாவில் ரூ.330 கோடி வசூலைக் கடந்த 'ஸ்பைடர்மேன்'டாம் ஹாலண்ட் நடிப்பில் கடந்தவாரம் வெளியான 'ஸ்பை டர்மேன் பிராண்ட் நியூ டே' படம் வசூலை வாரிக் குவிக்கிறது. இந்தியாவில் மட்டும் ஐந்து நாட்களில் ரூ.330 கோடியும், உலகளவில் ரூ.8800 கோடி வசூ லையும் குவித்துள்ளது. ரூ.2000 கோடி பட்ஜெட்டில் தயா ரான இப்படம் தற்போது வரை அதைவிட 4 மடங்கு வசூலை ஈட்டி உள்ளது.. 

Aug 06, 2026

'நடிப்பு மட்டுமே என் வேலை; அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை' – சசிகுமார்.

ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள வதந்தி 2 வெப் சீரிஸ் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியாகிறது. இதன் அறிமுக விழாவில் பேசிய சசிகுமார், "முதன்முறையாக இந்த வெப் சீரிஸில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அதே நேரத்தில் நீண்ட தாடியுடன் தோன்றுகிறேன். அதற்கான காரணம் கதையில் விளக்கப்பட்டுள்ளது. நடிப்பதே என் வேலை; அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. வெப் சீரிஸில் நடிப்பது திரைப்படங்களை விட அதிக உழைப்பை கோருகிறது. ஐந்து மணி நேரத்திற்கும் மேலான உள்ளடக்கம் என்பதால் படப்பிடிப்பும் அதற்கேற்ப நடைபெறுகிறது. இந்தக் கதாபாத்திரத்துக்குப் பிறகு மேலும் பல போலீஸ் வேடங்கள் கிடைக்கும் என நம்புகிறேன்" என்றார்.

Aug 06, 2026

மீண்டும் மலையாளப் படத்தில் யோகி பாபு.

நடிகர் யோகி பாபு ஹீரோவாகவும், நகைச்சுவை நடிகராகவும் தொடர்ந்து பிஸியாக உள்ளார். மலையாளத்தில் ஏற்கனவே குருவாயூர் அம்பலநடையில் திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்த அவர், தற்போது ஹரிவராசனம் என்ற புதிய மலையாளப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நாயகனாக நடிக்கும் சைஜு குருப், "யோகி பாபுவை எங்கள் படக்குழுவில் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

Aug 06, 2026

இந்தியாவில் ரூ.330 கோடி வசூலைக் கடந்த 'ஸ்பைடர்மேன்'.

டாம் ஹாலண்ட் நடித்த ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தியாவில் மட்டும் வெளியான முதல் ஐந்து நாட்களில் ரூ.330 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. உலகளவில் ரூ.8,800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள இப்படம், ரூ.2,000 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுவரை தனது தயாரிப்பு செலவை விட நான்கு மடங்கு அதிக வசூலை ஈட்டியுள்ளது.

Aug 06, 2026

ஆக. 16-ல் பாரதிராஜா, பாக்யராஜுக்கு நினைவு விழா.

.மறைந்த இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் பாக்யராஜுக்கு தமிழ் திரையுலகின் சார்பில் 'ராஜகோபுரங்கள் நினைவு உற்ஸவம்' என்ற பிரம்மாண்ட விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் திரைப்படத் தொழிலாளர் சங்கங்கள் இணைந்து ஆகஸ்ட் 16-ஆம் தேதி சென்னையில் இந்த விழாவை நடத்துகின்றன. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். தமிழக முதல்வர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவின் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு பாரதிராஜாவின் சொந்த ஊரான தேனியிலும், பாக்யராஜின் சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்திலும் மணிமண்டபம் அமைத்து, மார்பளவு சிலைகள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 89 90

AD's



More News