25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >>


இந்துக்களின் ஆன்மீக நம்பிக்கை

Sep 11, 2026

சாப்பிட்டு முடித்தவுடன் தட்டில் கடைசியாக எது இருக்கவேண்டும் தெரியுமா?

சாப்பிடும் தட்டிலேயே கை கழுவும் பழக்கம் வீட்டின் வறுமைக்கு முதல் காரணம் * சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு பருக்கை சாதம் கூட தட்டில் வீணாக கூடாது அவ்வாறு வீணானால் அது அன்னலக்ஷ்மியை அவமதிப்பதாக அர்த்தம் சாப்பிட்ட இடத்தில் சிந்திய உணவை அப்படியே விட்டு செல்வது கூடாது. இது தரித்திரத்தை உண்டாக்கும் * உணவை மதிக்கும் வீட்டில் தான் செல்வம் நிறைந்திருக்கும் சாப்பிட்ட தட்டை வழித்து நக்கி விரிச்சோடி விடக்கூடாது.

Sep 04, 2026

காமாட்சி விளக்கின் மகத்துவம்.

காமாடசி அம்மன் உலக மக்களின் நலனுக்காக தவம் இருந்தவர். அவர்  அப்படி தனது பிள்ளைகளின் நன்மைக்காக தவம் இருந்ததால் சகல தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது ஆகையால் காமாட்சி அம்மனை வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை.அதனால்தான் திருமணங்களில் மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு வலம்வர சொல்லுகிறார்கள். மேலும், புகுந்த வீட்டிற்குச் செல்லும் மணப்பெண்ணை, முதலில் காமாட்சி விளக்கை ஏற்ற சொல்கிறார்கள்.மேலும் காமாட்சி விளக்கினை ஏற்றுவதால் குலதெய்வத்தின் ஆசியுடன் குலம் தழைத்து வளரும் என்பதும் நம்பிக்கை.

Aug 28, 2026

கண் திருஷ்டி தீர்க்க....

உப்பு, மிளகு, காய்ந்த மிளகாயை 3 முறை உடல்முழுவதும் சுற்றி தீயில் எரிக்கவும். தண்ணீர் + உப்பு கலந்து வீட்டின் நுழைவு வாசலில் வைக்கவும். சனிக்கிழமைகளில் எள், உப்பு சேர்த்து ரொட்டி தயாரித்து காக்கைக்கும், நாய்களுக்கும் அளிக்கவும். வெள்ளி & செவ்வாய் கிழமையில் கற்பூரம் மற்றும் எலுமிச்சை தீபம் ஏற்றவும். 'ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸுகத்திம் புஷ்டிவர்த்தநம்' தினமும் 11 முறை இந்த மந்திரந்தை சொல்லி, கற்பூரம் ஏற்றவும்.

Aug 21, 2026

நவ கிரஹங்களை சாந்தப்படுத்தும் அருகம்புல் ரகசியம்.

நம்ம வாழ்க்கையை ஆட்டி வைக்கும் நவகிரகங்களை சாந்தப்படுத்த  முக்கிய தகவல்.அருகம்புல் பலன்: தினமும் ஒரு கொத்து அருகம்புல் வீட்டுக்குள் கொண்டு வந்தாலே பீடை , தரித்திரம் வெளியேற ஆரம்பிக்கும்!வீட்டில் இருப்பதின் சக்தி : வீட்டில் அருகம்புல் இருந்தாலே கஷ்டம் தங்கவே முடியாது! அருகம்புல்லை ஒரு கண்ணாடி டம்பளரில் நீருக்குள் அதன் கீழே இருக்குமாறு வைத்து உங்கள் வீட்டின் வரவேற்பறையில் நிலை வாசலுக்கு உட்புறமாக வைக்கவும்.எட்டுத்திக்கிலிருந்தும் நல்ல ஆற்றலை ஈர்க்கும். நவகிரகங்களால் ஏற்படும் தீய விளைவுகளை வீட்டிற்குள் நெருங்கவிடாது.

Aug 14, 2026

மந்திரங்களை 108 முறை சொல்ல காரணம்?

பொதுவாக, உரு ஏற திரு ஏறும்' என்பார்கள். வெறும் சொல்லாக இருக்கக் கூடிய மந்திரத்தை தெய்வ நம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் பூரணத்துவத்தை தொடும் அளவிற்கு சொல்ல சொல்ல அந்த மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்தும் தெய்வீக தன்மையை பெற துவங்கி விடும். நாம் மனதார உச்சரிக்கும் அந்த மந்திரம் நம்முடை உள்ளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். உள்ளத்தில் எதற்காக மாற்றம் வர வேண்டும் என்றால், தலையெழுத்து, விதி என நாம் சொல்லும் கர்மவினைகள் அனைத்தும் எண்ணத்தில் இருந்து தான் ஆரம்பமாகின்றன. எண்ணம், சொல்லாகி, அது செயலாகி, அதனால் ஏற்படும் விளைவுகளே கர்மவினையாக மாறி. நம்முடைய வாழ்வில் பல விதமான துன்பங்களை ஏற்படுத்துகிறது. அதனால் உள்ளத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். கர்மவினைகளை உருவாக்கும் உள்ளம் இறைவனுடன் ஒன்ற வேண்டும் என்பதற்காகதான் மந்திரங்களை 108 முறை சொல்ல  வேண்டும் என்கிறார்கள்.

Jul 31, 2026

கோவில்களில் செய்யக்கூடாதது.

கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது. கோயிலின் திருநீறு, குங்குமம்.பூ போன்றவற்றை கீழே சிந்த கூடாது. தன்னையே சுற்றி கொண்டு சாமி கும்பிடக்கூடாது. கண்ணாடி பார்த்துக்கொண்டே திருநீறு பூச கூடாது. விநாயகர் கோயிலில் ஒருமுறை வலம் வந்தால் போதுமானது. சிவன் கோயிலில் மூன்று முறை வலம் வரவேண்டும். சிவன் கோயிலுக்கு சென்று காணிக்கை போடாமல் வரக்கூடாது. திருநீற்றை வில்வ பழ ஓடில்  வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக கிடைக்கும். பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது. (ஆகம முறைக்கு உட்பட்டது ) .

Jul 24, 2026

ஸ்ரீ மகாலட்சுமிக்கு பிடித்த மருதாணி.

வீட்டில் விசேஷ நாட்களில் பண்டிகை தினங்களில், பெண்கள், ஆண்கள் மருதாணி இட்டு கொள்வதை பார்த்திருப்போம்காரணம் ஸ்ரீ மகாலட்சுமிக்கு பிடித்த பொருட்களில் ஒன்று மருதாணி.மருதாணிக்கு செல்வத்தை, ஐஸ்வர்யத்தை, லட்சுமிகரத்தை, ஈர்த்து எதிர்மறை ஆற்றலை விரட்டும் சக்தி உண்டு.அதனால் தான் மங்களகரமான நாட்களில் பெண்களையும், ஆண்களையும் மருதாணி இட்டு கொள்ள சொல்கிறது சாஸ்திரம் .

Jul 17, 2026

சாஸ்திரங்கள் கூறும் துளசியின் மகிமைகள்.

துளசியைப் பார்த்தால், செய்த பாவங்கள் அழியும். துளசியை தொட்டால், உடல் தூய்மையடையும். துளசியைப் பணிந்தால் நோய்கள் தீரும். துளசிக்கு நீர் வார்த்தால் யமனுக்கு பயம் உண்டாகும். துளசியை நட்டால் பகவான் கிருஷ்ணரை நெருங்கலாம்.துளசியை பகவான் கிருஷ்ணரின் பாதத்தில் அர்ப்பணித்தால், கிருஷ்ணப் பிரேமை கிடைக்கும் அத்தகைய துளசிக்கு நமஸ்காரம்.

Jul 17, 2026

ஆடி மாதத்தில் இந்த வழிபாடுகளை செய்தால் நன்மைகள் அதிகம்!

ஆடி ஏகாதசி நாளில் அன்னதானம் வழங்குவது, வாழ்வில் வளமும் நலனும் பெருகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.ஆடி மாதத்தில் மாரியம்மனை பக்தியுடன் வழிபட்டால், தீய சக்திகள் மற்றும் கண் திருஷ்டி விலகும் என பக்தர்கள் கருதுகின்றனர்.மதுரை மீனாட்சி அம்மனை ஆடி மாதத்தில் தரிசித்து வழிபடுவது குடும்பத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.ஆடி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காமாட்சி அம்மனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், திருமணத் தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும் என்பது ஐதீகம்.

Jul 10, 2026

பார்த்தவுடன் வெற்றி கிடைக்கும் நவகுஞ்சரம்.

தினமும் ஒரு முறை இந்த உருவத்தை நன்றாக உற்றுப் பாருங்கள். இனி உங்கள் வாழ்வில் தினம் தினம் வெற்றி தான்.அர்ஜூனன் தவமிருந்த போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுருவில் காட்சியளித்தார்.இந்த நவகுஞ்சரம் சேவல் தலையும், யானை, புலி, மான், மனிதன் ஆகியவற்றின்கால்களுடன், மயிலின் கழுத்து, பாம்பு வாலுடன் சிஙகத்தின் உடல் என்று ஒன்பது விலங்குகளின் உறுப்புகளை கொண்டுள்ளது. வெற்றி கிடைக்க...தினமும் பாருங்கள்..

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

AD's



More News