.ஃப்ரூட்ஸ் கஸ்டர்ட் ஐஸ்கிரீம்.
தேவையான பொருட்கள்-
1. ஒரு கப் பால்
2. அரை கப் தண்ணீர்
3. 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
4. ஒன்றரை டேபிள்ஸ்பூன் கஸ்டர்ட் பவுடர்
5. கால் கப் ஆப்பிள்
6. கால் கப் திராட்சை
7. கால் கப் மாதுளை
8. கால் கப் மாம்பழம்
9. கால் கப் வாழைப்பழம்
10. முந்திரி பாதாம் பொடித்தது
செய்முறை -
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறிதளவு பால் விட்டு கஸ்டர்ட்பவுடரை கரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கப் பாலில் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் .
பிறகு கரைத்து வைத்துள்ளகஸ்டர்ட் பவுடரை சேர்த்து நன்கு கிளறவும்.
கஸ்டர்ட் பவுடர் கலவை ஆறியதும், ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும்.
பின்னர் கஸ்டர்ட் கலவை, நறுக்கிய பழங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கவும்.
பழங்கள் கலந்த கலவையை பவுலில் சேர்க்கவும்.
அதன்மீது வெண்ணிலா ஐஸ் கிரீம் சேர்க்கவும்.
பின் அலங்கரிக்க பொடித்து வைத்த நட்ஸ்களை தூவவும்.
சுவை அதிகம் கூட்ட மாம்பழத்தை மிக்சியில் நைசாக அரைத்து கஸ்டர்ட் கலவையைசேர்க்கலாம்.
பைனாப்பிள், டூட்டி ஃப்ரூட்டி, பாதாம் சேர்த்து சுவை கூட்டலாம்.
0
Leave a Reply