ராகி கீரை அடை: இரும்புச்சத்து, ரத்தசோகை நீங்கும். எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும், சருமத்துக்கு நல்லது, பார்வைத்திறன் மேம்படும்.ஆப்பம்: செரிமானமாவது எளிது, வயிறு, குடலுக்கு நல்லது, வயிற்று, வாய் புண்களை குணப்படுத்தும்கோதுமை ரவை புட்டு: ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு காலை உணவாக கொடுக்க சிறந்தது.
நட்ஸ் வகைகளிலேயே வால்நட்ஸ் என்பது தனித்துவமான மருத்துவ குணங்களை உள்ளடக்கியது. இதை தமிழில் அக்ரூட் பருப்பு என்று அழைக்கின்றனர். வால்நட்ஸில் உள்ளMUFA மற்றும் ஒமேகா3 கொழுப்புக்கள் அனைத்தும் நம் உடலுக்கு மிகவும் நல்லது. தாவர அடிப்படையிலான ஒமேகா -3 ALA மற்றும் சிறந்த ஆதாரத்தை வழங்கும் பருப்பு வகை வால்நட்ஸ் ஆகும்.ஒரு அவுன்ஸ் வால்நட்ஸில்4 கிராம் புரதம்,2 கிராம் ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி, அதிக அளவில் வைட்டமின் ஈ மற்றும் நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.அதோடு வால்நட்ஸில் அதிகளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. வால்நட்ஸில் உள்ள MUFA மற்றும் ஒமேகா3 கொழுப்புக்கள் அனைத்தும் நம் உடலுக்கு மிகவும் நல்லது. தாவர அடிப்படையிலான ஒமேகா-3ALA மற்றும் சிறந்த ஆதாரத்தை வழங்கும் பருப்பு வகை வால்நட்ஸ் ஆகும். பிற சத்துள்ள பருப்புகளை விட இந்த வால்நட் 5 மடங்கு ALA-ஐக் கொண்டுள்ளது.
தினமும் இரவில் படுக்கைக்குச் செல்லும் முன், 5 பூண்டு பல், 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் சீரகம் இவை அனைத்தையும் இரண்டு டம்ளர் நீரில் போட்டு கொதிக்க வைத்து அது பாதியாக சுண்டியவுடன், மசித்து குடித்து வந்தால் தேவையில்லாத கொழுப்புகளை கரைத்து, இதய துடிப்பை சீராக்கி ,இதய அடைப்பு ,ஏற்படாமல் பாதுகாக்கிறது, தேவையற்ற கொழுப்புகளை சேரவும் விடாது.
இருதய நோய் உள்ளவர்கள் காபி குடிப்பதை தவிர்த்தல் நல்லது டீ குடிக்கலாம்.வைட்டமின் சத்துக்கள் அதிகம் நிறைந்த அன்னாசி பழம் மற்றும் ஆரஞ்சு பழங்களை அவ்வப்போது உண்ண வேண்டும். இதயத்தை பலப்படுத்தி சீராக்கும் அத்திப்பழத்தை தொடர்ந்து உண்டு வர வேண்டும். பசும் பாலில் பூண்டு பற்கள் சிலவற்றை நசுக்கி போட்டு, நன்கு காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். வெள்ளை தாமரை பூவின் இதழ்களை நசுக்கி, கஷாயம் செய்து ,காய்ச்சிய பசும்பாலில் அக் கஷாயத்தை கலந்து குடிக்க வேண்டும். மாதுளம்பழசாற்றில்தேன்கலந்துகுடிக்கவேண்டும்.இருதயம் வலுவாக அத்திப்பழத்தை காய வைத்து பொடியாக்கி1 கரண்டி சாப்பிட்டு வருவதால் நல்ல பலன் கிட்டும்.தினசரி ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வருவதால் இருதயம் பலம் பெரும்.
விஷம் என ஒதுக்கும் எருக்கம் செடியில் பல மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடப்பதாக சித்த மருந்துவத்தில் குறிப்பிடப்படுகிறது. செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதில் எருக்க இலையை அடுக்கிக் காலால் மிதித்தால் குதிகால் வலி நீங்கும். செடியின் இலைகளை நெருப்பில் போட்டுஎரித்து அந்த புகையை சுவாசித்தால் மார்புச்சளி கட்டுப்படும் இலையை நெருப்பில் வாட்டி கட்டிகள் மேல் கட்டினால் அவை உடையும்.
மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் இவை தீவிரமாகாமல் தடுக்கவும், அறிகுறியை கட்டுப்படுத்தவும் பாரம்பரியமாகவே சில மூலிகைகள் உள்ளது. சுக்கு மழைக்காலத்தில் கண்டிப்பாக எடுக்க வேண்டிய மூலிகை என்று சொல்லலாம்.இஞ்சியை, சுண்ணாம்பு நீரில் நனைத்துக் காயவைத்து எடுக்கப்படுவதுதான் சுக்கு. இது, காரத்தன்மை கொண்டது.சுக்கு, பித்தத்தை அதிகரிக்கும். கபம், வாதம் போன்றவற்றைக் குறைக்கும்.பசியின்மையைச் சரிசெய்யும். உடல்பருமன் இருப்பவர்களுக்கு ஏற்றது. கெட்ட நீரை அகற்றும்.தனியா, சுக்கு, சீரகம், மிளகு போன்றவற்றைச் சேர்த்து அரைத்து, ஒரு தேக்கரண்டி அளவு பாலில் கலந்து, சுக்கு காபியாகக் குடிக்கலாம்.சுக்கு ரத்தத்தைக் கெட்டிப்படுத்தும். எனவே, ரத்தம் உ றைதல் பிரச்னை இருப்பவர்கள், அளவாகப் பயன்படுத்த வேண்டும்.செரிமானம் பிரச்னை உள்ளவர்கள்அரை தேக்கரண்டி சுக்குப் பொடியை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க நிவாரணம் கிடைக்கும்.
ஒற்றைத் தலைவலி என்று சொல்லப்படும் மைக்ரேன் வந்தால் ஒரு பக்க தலை மட்டும் வலிக்கும் சிலமணி நேரம் முதல் 3 நாட்கள் வரை தொடரும். சிலருக்கு இருபக்கமும் வலி இருக்கும்.வெண்ணீரில் குளிப்பதன் மூலம் ஒற்றைத்தலைவலி குணமாகிறது..ஒற்றை தலைவலி ஏற்படும் போது 1 டம்ளர் கேரட் சாறில் சிறிது வெள்ளரிக்காய் சாறு மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் ஒற்றை தலைவலி குறையும் .
மாம்பழம் அதிகம் சாப்பிட்டு, அஜீரணம் என்றால் பால் சாப்பிட வேண்டும்.நெய் சாப்பிட்டு, அஜீரணம் என்றால் எலுமிச்சை சாறு சாறு சாப்பிட வேண்டும்.கேக் சாப்பிட்டு அஜீரணம் என்றால், வெந்நீர் அருந்த வேண்டும்.பால் சாப்பிட்டு அஜீரணம் என்றால், வாழைப்பழம் சாப்பிட வேண்டும்.தேங்காயால் அஜீரணம் என்றால் அரிசியை சிறிது மென்று தின்றால் சரியாகும்.பருப்பினால் அஜீரணம் என்றால் சிறிது சர்க்கரை சாப்பிட வேண்டும்.பப்பாளி பழம் சாப்பிட்டதால் அஜீரணம் என்றால் தாராளமாக தண்ணீர் குடியுங்கள் குணமாகும்.
கருவேப்பிலையைகாலை வெறும் வயிற்றில் மென்றுசாப்பிடுவதால் செரிமானத்தை அதிகரிக்கிறது: கறிவேப்பிலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் உணவை சிறிய துண்டுகளாக உடைக்க உதவுகிறது, எனவே இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் குடலை சுத்தம் செய்ய உதவுகிறது. அஜீரணம், குடல் வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது.கருவேப்பிலை சாப்பிடுவதன் மூலம் கண் பிரச்சனை மேம்படுத்தலாம். கருவேப்பிலை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. தினமும் வெறும் வயிற்றில் கருவேப்பிலை சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும் .கருவேப்பிலை பலவகையான தொற்று நோய்களை குறைக்கிறது, மற்றும் நோயாளிகளின் அபாயத்தை குறைக்கிறது. கருவேப்பிலை மென்று சாப்பிடுவதால் மூலம் எடை மற்றும் தொப்பையை குறைக்கிறது.குழந்தை இல்லாத பெண்மணிக்குதினமும் கருவேப்பிலை சாப்பிட்டு வந்தால் கரு தங்க உதவுகிறது.கர்ப்பபைக்கு ரொம்ப நல்ல கருவேப்பிலை.
கற்பூரவல்லி இலை, துளசி இலை சின்ன வெங்காயம், உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு இடித்து அதன் சாறை எடுத்து அதனுடன்.சிறிதளவு மிளகுதூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால் போதும் சளி உடனடியாக வெளியே வந்து இருமல் குறைந்து விடும் எப்படிப்பட்ட இருமல் இருந்தாலும் ஒருமுறை குடித்தால் போதும் இருமல் ஓடிவிடும்.