25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


நலம் வாழ

Oct 28, 2025

பம்ப்ளிமாஸ் பழம்.

பம்பளிமாஸ் பழம் சாத்துக்குடி, ஆரஞ்சு வகையைச் சேர்ந்தது. இந்தப் பழம் பச்சை நிறத்தில் பெரிய பந்து போல இருக்கும். முற்றின காயின் மேல் இளம் மஞ்சள் நிறத்தில் மாறும் அதுதான் பழம். இதன் தோல் அழுத்தமாக காணப்படும். உள்ளே சாத்துக்குடிபோல சுளைகள் இருக்கும். சிலவகை வெள்ளைச் சுளைகளைக் கொண்டிருக்கும். சிலவற்றின் சுளைகள் ரோஸ் நிறத்தில் காணப்படும். இந்த இரண்டு வகைப் பழங்களின் குணமும் ஒன்றுதான். இதில் புளிப்பு, இனிப்பு என இரண்டுவகை உண்டு. இதில் புளிப்புவகையை விட இனிப்பு வகையே சிறந்தது. இது அனைத்து காலங்களிலும் கிடைக்காது அதற்கென உள்ள சீசனில் மட்டுமே கிடைக்கும். இது குளிர்ச்சி நிறைந்தது எனவே சளி, சீதாள தேகம் உள்ளவர்கள் இதனை சாப்பிடக்கூடாது.புரதம்,கார்போஹைட்ரேட்,வைட்டமின் C ,வைட்டமின் A ,தாமிரம்,பொட்டாசியம்,கால்சியம் சத்து உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை அளிப்பதோடு, கோடைகால சோர்வினை போக்குகிறது.பம்ப்ளிமாஸ் பழம் மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை குறைக்கிறது. இரத்தசோகையைப் போக்கும் குணம் பம்பளிமாஸ் பழத்திற்கு உண்டு.இந்தப் பழத்தின் சுளைகளை மதிய உணவுக்குப்பின் தினமும் சாப்பிடுவது நல்லது.வைட்டமின் A சத்துக்குறைவால் ஏற்படும் மாலைக்கண் நோயை தடுக்க பம்ப்ளிமாஸ் பழம் சிறந்தது.

Oct 27, 2025

 உடல் சூட்டை குறைக்கும் முள்ளங்கி.

ஜீரணத்தை மேம்படுத்தும்.உடல் சூட்டை குறைக்கும். இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கல்லீரல் சுத்தம் செய்ய உதவும்.எடை குறைக்க உதவும். தோல் பிரச்சினைகளை குறைக்கும்.பற்கள் மற்றும் எலும்புகளுக்கு பலம் தரும்.

Oct 24, 2025

நிறைவான சத்துகளைத் தன்னிடத்தில் புதைத்து வைத்துள்ள கோழி முட்டை.

50 கிராம் கோழி முட்டையில் 6 கிராம் புரதச்சத்தும் 5 கிராம் கொழுப்புச்சத்தும் இருக்கின்றன. மாவுச்சத்து மிகவும் குறைவு, வெறும் 0.6 கிராம்தான். விட்டமின்-ஏ, இ, பி6, பி12, ஃபோலிக் அமிலம் எல்லாமே முட்டையில் இருக்கின்றன. செம்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட ஏழு வகை தாதுச் சத்துக்களும் இருக்கின்றன. சூரிய ஒளிக்கு அடுத்தபடியாக விட்டமின் டி முட்டையில்தான் நிறைய கிடைக்கிறது. ஒரு முட்டை சாப்பிட்டால் 60 - 70 கலோரி எரிசக்தி கிடைக்கிறது. இப்படி நிறைவான சத்துகளைத் தன்னிடத்தில் புதைத்து வைத்துள்ளதால்தான் முட்டையை முழு உணவு என்கிறோம்.

Oct 23, 2025

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அத்திப்பழம்...

அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப்படுதலை தடுக்கும். அத்தி எளிதில் ஜீரணமாவதுடன் கல்லீரல், மண்ணீரல் போன்ற ஜீரண உறுப்புகளை நல்ல முறையில் சுறுசுறுப்புடன் செயலாற்றச் செய்கிறது. சிறுநீரகத்தில் கல்லடைப்பு போன்ற தடங்கல்களை அகற்றிச் சிறுநீரைப் பெருக்குகிறது. பெருங்குடலில் ஆங்காங்கே, இறுகிய கழிவுப் பொருட்களை பக்குவப்படுத்தி, இளக்கி, வியர்வையாகவும், சிறுநீராகவும், மலமாகவும் வெளியேற்றி குடலை மிருதுவாகச் செய்கிறது. அத்திப்பழத்தில் இருக்கும் அதீத நார்ச்சத்து மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.அத்திப்பழத்தை இரவில் நீரில் ஊறவைத்து1 அல்லது2 சாப்பிடலாம். இதன் மூலம்விரைவாக எடை குறைகிறது. சருமம் மென்மையாகிறது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. முடி வளர்ச்சி அதிகரிக்கிறது. தோல் சுருக்கம் நீக்குகிறது. கண்களுக்கு குளிர்ச்சி.நீரிழப்பை தடுக்கும். கல்லீரலை பாதுகாக்கும், ரத்த ஓட்டம் சீராகும். தீராத தலைவலியும் தீரும். வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

Oct 22, 2025

உடலில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு

மூளைக்கு - வல்லாரைமுடிவளர - நீலநெல்லிஎலும்பிற்கு - இளம்பிரண்டைபல்லுக்கு - வேலாலன்பசிக்கு - சீரகமிஞ்சிகல்லீரலுக்கு - கரிசாலைகாமாலைக்கு - கீழாநெல்லிகாதுக்கு - சுக்குமருள்தொண்டைக்கு - அக்கரகாரம்தோலுக்கு - அருகுவேம்புநரம்பிற்கு - அமுக்குரான்அம்மைக்கு - வேம்பு மஞ்சள் 

Oct 21, 2025

பாசுமதி அரிசி .

1. குறைந்த glycemic index -நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. 2.ஜீரணத்திற்கு எளிது, வயிற்றில் கனமாக இருக்காது. 3.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 4. கொழுப்பை குறைத்து உடல் எடையைக் கட்டுப்படுத்தும். 5.இயற்கையன வாசனையால் உணர்ச்சி & உணவு ஆசை அதிகரிக்கும்  (பாசுமதி அரிசி)பயன்பாட்டு முறை (Usage): பிரியாணி,புலாவ், சாதம், அரிசி வகைகளில் சிறந்தது. அரிசி வேக வைக்கும் முன் 30 நிமிடம் ஊறவைத்தால் மென்மையாக வரும். மாதத்தில் 2-3 முறை எடுத்தால் ருசியோடு, ஆரோக்கியமும் கிடைக்கும்.

Oct 18, 2025

பூவரசன் மரம்......

பூவரசு மரத்தின் இலை, காய்களை பறித்து நன்கு சுத்தபடித்துவிட்டு அதனை நன்கு பசைபோல் அரைத்து உங்கள் உடலில் உள்ள தேமல்களின் மீது தடவி வருவதன் மூலம் தேமல் குணமாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏதாவது காயம் ஏற்பட்டால் அது குணமாகாது . அவர்களும் இந்த பூவரசு மரத்தின் பட்டையை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வைத்து புண்கள் உள்ள இடங்களை கழுவி வருவதன் மூலம் அந்த புண்கள் குணமாகும்.பூவரசு மரத்தின் வேர்ப்பட்டை பறங்கிப்பட்டை இரண்டையும் சம அளவு எடுத்துபசும் பாலில் அவித்து வெய்யிலில் காயவைத்து பொடி செய்யவும். இதில், ஐந்துகிராம் பொடியை தயிர் அல்லது மோர் அல்லது பசு வெண்ணெய்யில் கலந்து மதியவேளையில் சாப்பிட்டு வந்தால் 60 நாள்களில் குஷ்ட நோய் குணமாகும். பெண்களுக்கு கழுத்தில் நகைகள் அணிவதினால் கருப்பு நிறத்தில் இருக்கும். அதற்கு இந்த பூவரசு மரத்தின் பூக்களை நல்லெண்ணெயுடன் சேர்த்து நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனை வடிக்கட்டி அந்த எண்ணெயை தடவி வருவதன் மூலம் அந்த கருப்பு நிறம் விரைவில் மறைந்து விடும். பூவரசு மரத்தின் இலையை வெய்யிலில் உலர்த்தி எரித்து, சாம்பலை தேங்காய் எண்ணெய்யில் குழைத்து சொறி, சிரங்குகளில் தடவி வந்தால் குணம் பெறலாம். பூவரசு மரத்தின் வேர்ப் பட்டையைத் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி. அதில் ஆமணக்கு எண்ணெய் 25 மில்லி சேர்த்து குடித்தால் பேதி குணமாகும்.

Oct 17, 2025

கை  கால் மரத்துப்போவதை விரைவில் கண்டறிவது அவசியம்.

அதிக நேரம் கை கால்கள் அசையாமல் இருந்தால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு மரத்துப்போகும்.. சிலசமயம் சாதாரணமாக மரத்துப்போவது நோய்க்கான அறிகுறி. மரபணு பிரச்சனை, உடலில் சர்க்கரை அளவு அதிகமாதல் முதுகுத்தண்டு பிரச்சனை B12 குறைபாடு போன்ற பல பிரச்சனைகளுக்கான அறிகுறி. எனவே இதை விரைவில் கண்டறிவது அவசியம்

Oct 15, 2025

முடக்கத்தான் கீரையைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடமூட்டு வலி குணமாகும்.

முடக்கத்தான் கீரையைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். குப்பைமேனி இலையுடன் சதகுப்பை விதையை அவித்துச் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம். வெங்காயத்தை, கடுகு  எண்ணெய் உடன் சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம்.கைப்பிடி அளவு கருப்பு கவுணி அரிசியை, கஞ்சியாக காய்ச்சி வாரத்தில்3 முறை குடித்து வந்தால் மூட்டு வலி பறந்து ஓடி விடும்.ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை, சீரகம் பூண்டு மஞ்சள் சேர்த்து அரைத்து கஞ்சியாக காய்ச்சி  குடித்து வந்தால் மூட்டு வலி காணாமல் போகும். ஊமத்தை இலை, நொச்சி இலை, சிற்றாமணக்கு இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டலாம். பிரண்டையின் வேர்ப் பொடி,  முடக்கத்தான் இலைப் பொடி, தழுதாழை இலைப் பொடி, இவற்றைச் சம அளவு கலந்து, அரை ஸ்பூன் மிளகுத் தூளுடன் பாலில் சேர்த்து  அருந்தலாம்.

Oct 10, 2025

கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் 

பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும்.இதயம் பலம் பெறும்.பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் பது ரத்தம்உண்டாகும்.எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.ரோஜாப்பூ குல்கந்தில் தேன்கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.தேங்காய்பாலில் தேன்கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும்.இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்தசோகை போகும்.தேனில் கண்ணாம்பு கலந்து தடவ  கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 36 37

AD's



More News