25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நலம் வாழ

Jun 04, 2026

வாய்ப்புண் அடிக்கடி வருவதால் உடல் கொடுக்கும் எச்சரிக்கை.

வாய்ப்புண் அடிக்கடி வருவது உடலில் முக்கிய சத்துக்கள் குறைவும் உடல் எதிர்ப்பு சக்தி குறைவும் இருப்பதைக் காட்டுகிறது. கீரைகளில் முருங்கைக்கீரை, சிறுகீரை சேர்த்தால் உடல் சத்து சமநிலை மேம்படும்.பழங்களில் வாழைப்பழம், மாதுளை சேர்த்தால் உடல் சக்தி அதிகரிக்கும்.காய்கறிகளில் கேரட், பீட்ரூட் சேர்த்தால் இரத்த சத்து மேம்படும்.போதுமான தண்ணீர் குடித்தால் உடல் சூடு குறைந்து வாய்ப்புண் குறையும்.சரியான உணவு பழக்கம் தொடர்ந்து இருந்தால் வாய்ப்புண் மீண்டும் வருவது குறையும்.

Jun 03, 2026

வெறும் வயிற்றில் உண்ணக்கூடாதவை...

 வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருக்கிறது. அதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் அதிக அளவில் மக்னீசியம் ரத்தத்தில் கலந்து விடும். அது சிலரது உடலுக்கு ஒத்துக்கொள்ளாது. தயிர் சாப்பிடக்கூடாது. அதில் இருக்கும் நல்ல பாக்டீரியா நொதித்து வயிற்று உப்புச்சத்தை ஏற்படுத்திவிடும்.

Jun 02, 2026

மருத்துவ குணமுள்ள சாதம் வடித்த தண்ணீர்.

சாதம் வடித்த கஞ்சி தண்ணீர், முக்கால் டம்ளர் எடுத்து கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து, அதில் அரை ஸ்பூன் நெய் மற்றும் சீரக பவுடர் அரை ஸ்பூன் சேர்த்துவெதுவெதுப்பாக குடித்தால் இடுப்பு வலி பறந்து போகும்.சாதம் மீந்து போனால், அதை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, கூட கடலை மாவு, உப்பு, வெறும் மிளகாய்த்தூள் சேர்த்து தோசை வார்த்தால் அடை போன்று சுவையுடன் ருசியாக இருக்கும்.

Jun 01, 2026

உடல் எடையை கட்டுப்படுத்த சியா விதைகள்.

தேங்காய் தண்ணீரில் சியா விதைகள் சேர்த்தால், அவை நீரில் ஊறி பெரிதாக வீங்கும். இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுவதுடன், வயிறு நிறைந்த உணர்வையும் தருகிறது. இதனால் அதிகமாக சாப்பிடும் பழக்கம் குறைந்து. உடல் எடையை கட்டுப்படுத்த உதவக்கூடும்.

May 30, 2026

BP (ரத்த அழுத்தம்) உள்ளவர்கள்  செய்ய வேண்டியவை......

BP உள்ளவர்களுக்கு காலை ஹைட்ரேஷன் மிகவும் முக்கியம்.அதனால் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் குடிக்க வேண்டும்.பொட்டாசியம் நிறைந்த உணவுகள், வாழைப்பழம்,இளநீர் (கொக்கோனட் வாட்டர்) ,ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.எண்ணெய், உப்பு அதிகம் உள்ள காலைஉணவுகளை தவிர்க்க வேண்டும்.நார் சத்து (Fiber) அதிகம் உள்ள உணவுகள்,பச்சைப்பயறு,ஓட்ஸ்,விதைகள் காலை நேரத்தில் சாப்பிட்டால் BP குறைய உதவும்.10 நிமிடம் ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி (Deep Breathing) BP மீது நல்ல விளைவைக் கொடுக்கும். BP தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் மருத்துவர் ஆலோசனை அவசியம்.

May 29, 2026

கர்ப்ப காலத்தில் கிவி பழம் சாப்பிடுவது மிகவும் நன்மை தரும்.

கர்ப்ப காலத்தில் கிவி பழம் சாப்பிடுவது மிகவும் நன்மை தரும். இதில் போதுமான அளவு ஃபோலேட் சத்து உள்ளது, இது கருவின் மூளை மற்றும் தண்டுவடத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.மாதவிடாய் காலங்களில் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது மாதவிடாய் வலியைக் குறைக்க உதவுகிறது, ஏனெனில் அதில் அதிக அளவில் மெக்னீசியம் உள்ளது.

May 27, 2026

எலும்புகள் வலுவாக இருக்க….

 பால், மோர், வெந்தயம், எள், ராகி போன்ற கால்சியம் நிறைந்த உணவுகள்,முட்டையின் மஞ்சள் கரு, காளான் ஆகிய வைட்டமின் டி உணவுகள், துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, பாதாம், வால்நட் போன்ற புரதம் நிறைந்தவை,வாழைப்பழம், பேரீச்சை, கடலை பருப்பு, பூசணி, சூரியகாந்தி விதை ஆகிய மெக்னீசியம், பாஸ்பரஸ் இருப்பவை. அதேநேரம், இனிப்புகள், குளிர்பானம், கூடுதல் உப்பு மற்றும் அளவுக்கதிமான காஃபின் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

May 25, 2026

வறட்டு இருமல் மற்றும் தொண்டை வலி குணமாக...

ஒரு டம்ளர் சாதம் வடித்த கஞ்சி தண்ணீரில்2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு அல்லது தேன் கலந்து, ஒரு நாளைக்கு மூன்று வேளை, மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் தொண்டை வலி மற்றும் வறட்டு இருமல் குணமாகும்.இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் வறண்ட இருமலைக் குறைக்க பெரிதும் உதவும். தொண்டையில் ஏற்படும் தொற்று மற்றும் எரிச்சலைக் குணப்படுத்த உப்பு நீர்ச்சிகிச்சை மிகவும் பாரம்பரியமானது.

May 23, 2026

கல்லீரலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும் கறிவேப்பிலை.

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு,நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய்மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்னையிலிருந்து நல்ல பாதுகாப்பு தரும்.நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருக்கும். கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். 

May 22, 2026

குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆனதும், பருப்புத் தண்ணீர் கொடுக்கத் தொடங்குங்கள்.

குழந்தைக்கு ஆறு மாதங்கள் ஆனதும், பருப்புத் தண்ணீர் கொடுக்கத் தொடங்குங்கள். ஏனெனில், பருப்புத் தண்ணீர் உடலில் இரத்த உருவாக்கத்திற்கு உதவுகிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 50 51

AD's



More News