25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நலம் வாழ

May 21, 2026

வஜ்ராசனம். 

வயிறு நிறைந்த நிலையில் செய்யக்கூடிய உடலின் ஒரே ஆசனம் இதுதான்.சாப்பிட்ட பிறகு படுப்பது மரணத்தை வரவழைப்பதற்குச் சமம். சாப்பிட்ட உடனேயே, 10 நிமிடங்கள் வஜ்ராசனத்தில் அமருங்கள். இது கற்களை ஜீரணிக்கவும், வயிறு பெரிதாகாமல் தடுக்கவும் உதவும்.

May 20, 2026

 பெரிய பலன் தரும் சின்ன பழக்கம்,

 காலையில் வெளிய வந்து, குறைந்தது 10 நிமிஷம் சூரிய ஒளியில் நிக்க try பண்ணுங்க.தேவையான Vitamin D கிடைக்கும். காலையில சூரிய ஒளி எடுத்துக்கிட்டா எலும்பு பலம், மன அமைதி, நல்ல தூக்கம் எல்லாமே கிடைக்கும்.ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா?மருதாணி பூக்களைப் பறித்து ஒரு துணியில் கட்டி, இரவு தூங்கும் போது தலைமாட்டில் வைக்க, அதன் மணம் உடல் பித்தத்தைக் குறைத்து நல்ல தூக்கம் தருகிறது.

May 18, 2026

எலும்புகளை வலுப்படுத்தும்  பூண்டு பால்.

மூட்டு வலியை குணப்படுத்தும்.தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை இல்லை.எலும்புகளை வலுப்படுத்தும், சருமம் பிரச்சனைகள் இல்லை.பிளேட்லெட்டுகளை அதிகரிக்கும், இரத்தம் உறைவதைத் தடுக்கும்.செரிமான பிரச்சனைகளை குணப்படுத்தும்.ஒற்றைத் தலைவலி, புற்றுநோயைத் தடுக்கும்.மலச்சிக்கல் பிரச்சனை இல்லை.முதுமைத் தோற்றத்தைக் குறைக்கும்.

May 13, 2026

நுரையீரலை சுத்தம் செய்ய.....

வெந்நீரில் ஆவி பிடிப்பது சுவாசக் குழாய்களைத் திறந்து, சளியை வெளியேற்ற உதவும்.நிறைய தண்ணீர் குடிப்பது சளியை நீர்த்துப்போகச் செய்து வெளியேற்ற உதவும். இஞ்சி,மஞ்சள், துளசி, மிளகு, அதிமதுரம் போன்றவற்றை டீயில் கலந்து குடிப்பது,நுரையீரலுக்கு நன்மை தரும்.

May 12, 2026

கல்லீரல் காக்கும் விளாம்பழம்.

விளாம்பழத்தை நாட்டு சர்க்கரையோட கலந்து காலைல வெறும் வயித்துல சாப்பிட்டுட்டு வந்தாலே குணம் கிடைக்கும், வாய்ப்புண், குடல் புண் (அல்சர்) குணமாகும்.இதய துடிப்பை சீராக வைத்திருக்கும்.பற்களை வலுடையச் செய்கிறது.உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும்.தலை வலி குறையும்.கண்பார்வை மங்கல் குணமாகும்.பசியை தூண்ட செய்யும்.இதயத்தை பலம் பெற செய்யும்.மூட்டு வலி, உடல் வலி போன்றவற்றை போக்கும்.வாயுத் தொல்லை நீங்கும்.நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.எலும்புகள் வலுவடையும்.ரத்தத்தை சுத்திகரிக்கிறது. நினைவாற்றல் அதிகரிக்கும்.பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் தீரும்.உடல் வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சிக்கு சிறந்தது.வாய்ப்புண், குடல் அல்சர் குணமடையும்.வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை தீரும்.

May 11, 2026

வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட....

சில காரணங்களால் சில பேர் தூக்கம் வராம தவியா தவிப்பாங்க. அந்த மாதிரி நேரங்கள்ல சின்ன வெங்காயத்தை நெய்யில் வதக்கி, ராத்திரி9 மணிக்கு முன்னாடி சாப்பிட்டா பயன் கிடைக்கும். வெங்காயம் பிடிக்காது, நெய் சேர்க்கமாட்டேன்'னு சொல்றவங்க... சீரகத்தை இளவறுப்பா வறுத்துப் பொடி பண்ணி, வாழைப்பழத்தோட சேர்த்து சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்.

May 09, 2026

தினம் ஒரு பழம் சாப்பிட்டு வர ....

 தினசரி ஒரு மாம்பழம் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.கோவைப்பழம் தினசரி ஒன்று சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வர கல்லீரல் பலப்படும். இரத்த சோகை சரியாகும்.இலந்தைப்பழம் சாப்பிட்டு வர நெஞ்சுவலி குணமாகும்.அன்னாசிப்பழம் தினம் சாப்பிட்டு வர வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.மாதுளம் பழத்தை படுக்கைக்குச் செல்லும் முன் சாப்பிட குடல் புழுக்கள் அழியும்.

May 08, 2026

கல்லீரலை சுத்தமாக்க....

 ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ்தண்ணீர் ஊற்றி, அதில் நசுக்கிய இஞ்சி மற்றும் ஒரு துண்டு எலுமிச்சையைச் சேர்க்கவும்.இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரவும்.இஞ்சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரலில்உள்ள  கொழுப்பைக் குறைக்க உதவும். எலுமிச்சை பித்த நீரைச் சுரக்கச் செய்து நச்சுக்களை வெளியேற்றும்.வாரத்தில்3 நாட்கள் செய்தாலே போதும், உங்கள் கல்லீரலில் உள்ள  நச்சுக்களை நீங்கி பலத்தை பெறும்.

May 07, 2026

முதுகு வலி குறைய....

மிளகு, கிராம்பு, சுக்கு டீ - 5 மிளகு,.6 கிராம்பு,.1கிராம் சுக்கு, சேர்த்து நீர் விட்டு டீ செய்து தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால்முதுகு வலி குறையும்.கொள்ளு ரசம் - கொள்ளு ரசம் குடித்தால்முதுகு வலிக்கு தீர்வு கிடைக்கும்.வெற்றிலை, தேங்காய் எண்ணெய் - வெற்றிலை சாறு பிழிந்து தேங்காய் எண்ணெயில் கலந்து வலி இருக்கும் இடத்தில் தடவிவர வலி குறையும்.

May 06, 2026

மாணவர்கள் தேர்வுகளுக்கு முன்பு வாழைப்பழங்களைச் சாப்பிட வேண்டும்.

மாணவர்கள் தேர்வுகளுக்கு முன்பு வாழைப்பழங்களைச் சாப்பிட வேண்டும். ஏனெனில், இது அவர்களின் ஆற்றலைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும், வாழைப்பழங்களில் உள்ள அதிக பொட்டாசியம் சத்து, அவர்களின் மூளையைக் கூர்மையாக்கி, தேர்வு எழுதுவதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 50 51

AD's



More News