வில்வ பூ- சுவாசத்தை சீராக்கும். காச நோயை குணப்படுத்தும்.சித்தகத்தி பூ - தலைவலியை குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.தாழம்பூ- நறுமணம் விசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும் உடல் சோர்வை நீக்கும். தாமரைப்பூ - தலை எரிச்சல், தலைச்சுற்றல் போன்றவற்றை சரி செய்யும், மன உளைச்சலை நீக்கும் .மன அமைதிக்கு வழிவகுக்கும். சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.கனகாம்பரம் பூ - தலை வலி மற்றும் தலை பாரத்தை சரி செய்யும்.தாழம்பூ, மகிழம்பூ, ரோஜா பூ, செண்பகப்பூ, போன்றவை வாதம், கபத்தை குறைக்கக் கூடியது.
வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதன் சாறு சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற உதவுகிறது.இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வயிற்று புண்கள் ஏற்படுவதை தடுக்கிறது.வாழைத்தண்டை இடித்து, சாறு பிழிந்து அத்துடன் முள்ளங்கி சாறு அரைபாகம் சேர்த்து காலை, மாலை இரு வேளையும் 100 மி.லி. குடித்துவர கல்லடைப்பு நீங்கும்வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் ,வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் நாளடைவில் குணமாகும்.வாழைத்தண்டு சாறு ஒரு நாள் மற்றும் பார்லி கஞ்சி ஒரு நாள் என்று சாப்பிட்டு வர சிறுநீர்க்கற்கள் பொடிப்பொடியாகி சிறுநீருடன் வெளியேறும்.
சுடு நீரில் ஆவாரம் பூக்களை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகலாம்.ஆவாரம் பூ பொடியை வெந்நீரில் போட்டு பருகலாம் சர்க்கரை சேர்க்க கூடாது.செரிமான பிரச்னையை நீக்கும்.தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்.உடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கும்.சரும சுருக்கங்களை குறைத்து நிறத்தை அதிகரிக்கும்.உடல் சூடு, பித்தம், மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு , ஒழுங்கற்ற மாதவிடா, குடல் புண் இப்படி பல்வேறு வகையான பிரச்னைகளுக்கும் ஆவாரம் பூ மருந்தாக இருக்கிறது.சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் அளவு சீராக இருக்க ஆவாரம் பூ பயன்படுத்துவார்கள். கருப்பை ஆரோக்கியம் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கும்.
கம்மங்கஞ்சி காலை மதிய உணவுக்கு ஏற்றதாகும்.இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். உடலை நோய் தாக்காமல் பாதுகாத்துகொள்ளும். கம்பு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.கம்பு நார்ச்சத்து மிகுந்த உணவு.இதில் கொழுப்பும் குறைவாக உள்ளது. இந்த கம்பங்கூழை குடித்து வந்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய கூடும். உடல் எடையை குறைக்க விரும்பினால் தினசரி ஒரு வேளை கம்பு உள்ள உணவை எடுத்துகொள்வதன் மூலம் பலன் கிடைக்கும்.கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும் படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் புண் வயிற்றுப்புண் சரியாகும்.காலை உணவிலும் இதனை சேர்த்துக் கொண்டால் நீண்ட நேரத்துக்கு பசி இருக்காது.கஞ்சியுடன் தொட்டுக்கொள்ள மாங்காய் பச்சை மிளகாய் வெங்காயம் வத்தல் போன்றவற்றை செய்து கொண்டால் ருசி அள்ளும்.கம்பு. மிக முக்கியமான உணவாக உள்ள இது கோடைமாதங்களில் கம்மங்கூழ் செய்வதற்கு மட்டுமே என்று இன்றைய தலைமுறையினர் நினைக்கிறார்கள். ஆனால் கம்பு எல்லா காலங்களிலும் சாப்பிட ஏற்றதே. கம்மஞ்சோறு, கம்மங்கூழ், கம்பு ரொட்டி, கம்பு தோசை, கம்பு இட்லி, கம்பு புட்டு, கம்பு கொழுகட்டை, கம்மங்களி, கம்பு பணியாரம் என்று எல்லா உணவுகளையும் ருசிபட தயாரிக்கலாம்.
அல்சர் பிரச்சனைக்கு பழங்களை எடுத்து கொள்வதன் மூலம் மிக எளிதாக இந்த பிரச்சனையை சரிசெய்துவிட முடியும்.அஜீரணத்தை அலட்சியப்படுத்தும் போது அது வயிற்று புண்ணாக மாறி விடுகிறது. அதிக அளவில் காரம், மிளகாய் வத்தல் போன்றவற்றை எடுக்கும்போது குடலின் உட்பகுதிகளிலும் , வயிற்றின் உட்பகுதிகளில் உள்ள சளி படலத்தில் சில புண்கள் உருவாகும். அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஆப்பிள் சாப்பிடலாம். இந்த ஆப்பிளில் உள்ள ப்ளேவோனாய்டுகுள், பைலோரி பாக்டீரியாவில் வளர்ச்சியைத் தடுக்கும்.பொதுவாக நாம் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதினால் வயிற்று அல்சர் இருந்தாலும், அதை குணப்படுத்துவதோடு, அல்சர் வராமலும் தடுக்கும்.மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் மற்றும் அல்சர் விரைவில் சரியாகும்.அகத்திக்கீரை சூப் செய்தும் குடிக்கலாம்.துளசி இலை சாற்றில் மாசிக்காயை, வயிற்றுப் புண் உள்ளவர்கள் குடித்தால் நல்ல குணம் பெறலாம்.வயிற்று அல்சருக்கு மற்றொரு சிறப்பான தீர்வு நெல்லிக்காய். அதிலும் நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்துகலந்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.அதிக ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரந்த பழங்களில் ஒன்று தான் மாதுளை. பொதுவாக செரிமான பிரச்சனைக்கு இந்த மாதுளை பழம் மிகவும் சிறந்தது.நாட்டு மருந்துக்கடைகளில் நன்னாரி வேர்(coleusroots) என்று கேட்டுவாங்குங்கள் பச்சைவேர்கிடைப்பது கஷ்டம் கிடைத்தால் வாங்கி கைப்பிடி அளவு எடுத்து சிறிது பசும்பால் விட்டு அரைத்து வெறும் வயிற்றில் ஒரு வாரம் சாப்பிட ஜெலுசிலுக்கு விடுதலை அல்சர் குணமாகும்.நன்னாரி வேர் காய்ந்திருந்தால் முன் இரவு தண்னீரில் ஊற வைத்து காலையில் பால் விட்டு அரைக்கவும்.
வயிறு முட்ட சாப்பிட்ட உடனே படுப்பதை தவிருங்கள். 2 மணிநேரம் கழித்து படுங்கள்.அதிகமாக சாப்பிடாதீர்கள். வயிறு நிறைந்த பிறகு சாப்பிடுவது உங்களுக்கு எதுக்களித்தல் பிரச்சனையை ஏற்படுத்தும்.சாப்பிடும் போது உணவை முழுசு முழுசாக விழுங்காதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிடுங்கள்.காரசாரமான உணவுகள், அமில உணவுகள் சிட்ரஸ் உணவுகளை தவிருங்கள். இவை எதுக்களித்தல் பிரச்சனையை ஏற்படுத்தும்.உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாக இருக்கும். எனவே உடல் எடையை குறைக்க முற்படுங்கள். தக்காளி மற்றும் வெங்காய ஜூஸ் குடிக்காதீர்கள். பலருக்கு இரவில் எதுக்களித்தல் பிரச்சினை அதிகமாக இருக்கும். இதனால் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்படுபவர்கள். படுக்கும் போது உயரமான தலையணையில் தலையை வைத்து படுங்கள்.அசிடிட்டி மற்றும் எதுக்களித்தல் பிரச்சனை அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகி விடுவது நல்லது.காபி சாக்லேட் எலுமிச்சை , ஆரஞ்சு இதெல்லாம் கொஞ்சம் தள்ளி வைங்க. வயிறு கொஞ்சம் அமைதியா இருக்கும். PCOS இருக்கறவங்க கவனத்துக்கு. நீங்க பால் பொருட்கள் ,வெள்ளை அரிசி, மைதான்னு சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள். அப்புறம் ஸ்வீட் ஐட்டம்ஸ், சர்க்கரை , இதெல்லாம் அவாய்ட் பண்ணுங்க. உங்க உடல்நலத்துக்கு நல்லது.
கீழாநெல்லி - மஞ்சள் காமாலை அல்சர் வயிற்றுக் கோளாறுகள் தீரும்.காசினி கீரை - ஈரல்களில் சகல தோஷங்கள் உடல் வீக்கம் தீரும்.கருவேப்பிலை -பித்தம் ,பசி மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்.கருந்துளசி - இரைப்பு ,இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம் தீரும்.கண்டங்கத்திரி - சளி இருமல் ஆஸ்துமா ஈசிலோபீலியா பீனிசம் ஆகிய நோய்தீரும்.
வாரம் இரண்டு நாள்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ரத்தம் உற்பத்தியாகும். திராட்சைப் பழ ஜூஸ் ஒரு டம்ளர் அல்லது ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாற்றில் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும்.தினம் ஒரு கப் அளவுக்கு தயிர் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கும். அடிக்கடி விளாம்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழியும். இரண்டு லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் சீரகத்தைப் போட்டு10 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரை நாள் முழுவதும் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
நீர்ச்சத்து மற்றும் சத்து நிறைந்தது.லெட்யூஸ் கீரை. கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது. கீரையை வாங்கியவுடன், சமைத்து விடுவது நல்லது.வாடினால் அதன் நீர்ச்சத்து போய்விடும். குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதும் நல்லதல்ல.உடல் வீக்கத்தையும், இதய நோய்களையும் தடுக்க கூடியது. இதில், வைட்டமின் ஏ, சி, கே மற்றும் பொட்டாஷியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. மேலும், இந்த கீரையை சாப்பிட்டு வந்தால், நரம்பு மண்டலம் வலுப்பெறும்.நல்ல துாக்கம் வரும். செரிமான பிரச்னைகளை சரி செய்யும்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, சரியான உணவு முறையுடன் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதற்கு சுகாதார நிபுணர்கள்5 வகையான காய்கறிகளை பரிந்துரைக்கின்றனர் காலிஃபிளவர். பாகற்காய், வெண்டைக்காய், ப்ரோக்கோலி, பசலைக்கீரை ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். இது போன்ற காய்கறிகள் சர்க்கரையை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி உடல் செயல்பாடுகளையும் மேம்படுத்துகிறது.முழு தானியங்கள் இவை மற்ற கார்போஹைட்ரேட்டுகளை விட கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் மற்றும் சர்க்கரை குறைவாக உள்ளது. சில எடுத்துக்காட்டுகளில் ஓட்ஸ் அடங்கும். பெர்ரி இவற்றில் இயற்கையான சர்க்கரை உள்ளது, ஆனால் மற்ற பழங்களை விட குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இருப்பினும், குளுக்கோஸை எதிர்க்க உதவும் கிரேக்க தயிர், பருப்புகள் அல்லது சீஸ் போன்ற புரதத்துடன் அவற்றை இணைக்க வேண்டும். இலை கீரைகள் மற்றும் மாவுச்சத்து இல்லாத காய்கறிகள் இவற்றில் நார்ச்சத்து அதிகம் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளன, மேலும் நீங்கள் விரைவாக முழுதாக உணர உதவும். சில எடுத்துக்காட்டுகளில் கீரை, காலே, ரோமெய்ன், அஸ்பாரகஸ், ப்ரோக்கோலி, பச்சை பீன்ஸ், ஸ்குவாஷ் மற்றும் காளான்கள் ஆகியவை அடங்கும்.