25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


நலம் வாழ

Jun 26, 2025

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் புளி சாறு

புளி சாறு  இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். புளி உடலில் கார்போஹைட்ரேட்டுகள் சேர அனுமதிக்காது, இதனால் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்காது. இது தவிர, புளியில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் செரிமானத்தை மேம்படுத்தி இன்சுலின் செயல்திறனை அதிகரிக்கின்றன. இந்த சாறு இரத்த சிவப்பணுக்கள் உருவாவதற்கும் உதவியாக இருக்கும். இது உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது மற்றும் சோர்வைக் குறைக்கிறது. புளி சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமல்ல முழு உடலின் வளர்சிதை மாற்றத்தையும்  மேம்படுத்தஉதவுகிறது.

Jun 24, 2025

மூட்டு வலியை குறைக்கும் கொடுக்காப்புளி .

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது இரத்தத்தில் வெள்ளை அணுக்களை அதிகரித்து, பித்தப்பை கற்களை கரைக்க உதவுகிறது. உடலுக்குள் ஏற்பட்ட காயங்களை ஆற்றி, மூட்டு வலியை குறைக்கும் தன்மை கொண்டது. 

Jun 23, 2025

நாரத்தை இலையை பொடி செய்து சாப்பிட்டால் அஜீரணம் சரியாகும்.

நாரத்தை இலைகள் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இந்த இலையை பொடி செய்து சாப்பிட்டால் அஜீரணம் சரியாகும். இந்த இலை வயிற்றுப் புண்ணை ஆற்றுகிறது. நாரத்தை இலையின் நடுவில் உள்ள நரம்பினை நீக்கி, இலையுடன் காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கெட்டியான சிறு உருண்டையாக்கி, காற்று போகாத பாட்டில் போட்டு மூடி வைத்து தொட்டு சாப்பிடலாம். தயிர் சாதத்திற்கு இன்னும் சிறந்த காம்பினேஷன். முற்றிய இலையாக இருக்கக்கூடாது. இளம் இலையாக பார்த்து பொடி செய்வது சுவை கூடுதலாக கிடைக்கும்.

Jun 21, 2025

டிராகன் பழம்

கற்றாழை குடும்பத்தை சேர்ந்த கொடி போன்ற ஒட்டுயிர் தாவர இனம் 'டிராகன்'. இந்தப் பழம் அடர்சிவப்பு நிறத்தில் காணப்படும். இதன் செதில்கள் பச்சை நிறமாக இருக்கும். இதன் மையத்தில் வெள்ளை நிறத்திலான இனிப்புக்கூழ் சிறு கறுப்பு விதைகளுடன் காணப்படும். சராசரியாக 700 முதல் 800 கிராம் எடை கொண்டது. இது உலகின் வெப்பமண்டல பகுதிகளில் பயிரி டப்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இந்தப் பழத்தில் வைட்டமின் பி3 இருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து பருமன் இல்லாத சீரான உடலமைப்பை உருவாக்க உதவுகிறது. இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் எலும்புகளை வலிமைப் படுத்துகிறது.

Jun 20, 2025

கனகாம்பர பூ

 வெறும் தலையில் சூடி அழகு பார்ப்பதாக மட்டுமல்லாமல், காயங்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் இந்த பூவிற்கு உண்டு.கனகாம்பர பூவுடன் மிளகுத்தூளை கலந்து பேஸ்ட் போல் ஆக்கிவிட்டு காயங்கள் மீது தடவினால் குணமாகும். அன்றைய நாட்களில் இரும்பு பொருள் துருப்பிடிக்காமல் இருக்க கனகாம்பரத்தின் பேஸ்ட் பயன்படுத்தப்பட்டதாம்.நம் உடலில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியா, வைரஸ், ஈஸ்ட் தொற்றுகளை குறைக்கும் தன்மையும் கனகாம்பரத்திற்கு உண்டு.ஒவ்வாமை வாந்தி வராமல் தடுப்பதற்கும் முக்கியமான மருந்தாக கனகாம்பரத்தை பயன்படுத்தி வந்துள்ளார்கள்.அத்துடன்  தலைவலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும் கனகாம்பரத்தில் மாலை செய்து அணிந்தால் இதயம் நலம் பெறும் .

Jun 18, 2025

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கக்கூடிய சாத்துக்குடி ஜூஸ்

சாத்துக்குடி, உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கக்கூடியது. பசியை ஏற்படுத்தக்கூடியது. வயிறு மந்தமாக இருப்பவர்கள் சாத்துக்குடி ஜூஸைக் குடித்துவந்தால், நல்ல தீர்வு காண முடியும். இது செரிமானப் பிரச்னையைச் சரிசெய்யக் கூடியது. வறண்ட சருமத்தினர், கடினமான சருமத்தினர் இருவருக்குமே சாத்துக்குடி ஜூஸ் ஏற்றது. இதனைத் தொடந்து பருகிவர முகத்தில் கரும்புள்ளிகள் மறையும்.

Jun 17, 2025

கொய்யா  இலை டீ

கொய்யா இலையை வெயிலில் காய வைத்தோ அல்லது பச்சையாகவோ தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து டீ செய்து 12 வாரங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் அது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை குணமாக்கிறது.

Jun 16, 2025

மாப்பிள்ளை சாம்பா அரிசி

மாப்பிள்ளை சம்பா அரிசி பார்பதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கும். இதில் புரதம் நார்ச்சத்து இரும்புச்சத்து துத்தநாகம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளது. இதில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்துகள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை கொடுக்கிறது. ஆண்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அரிசி மாப்பிள்ளை சம்பா. உடலுக்கு அதிக அளவில் பலம் கொடுக்க கூடிய சத்து. இதில் இருக்கிறது. குறிப்பாக மாப்பிள்ளையாக போகிறவர்களுக்கு இது மிகவும் அவசியம் .ஆகையால் தான் இளம் வயது உடைய ஆண்களுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசியை சாப்பிட கொடுப்பார்கள். மேலும் உடலுக்கு வலுவை கொடுக்க கூடிய ஏராளமான சத்துக்கள் இதில் உள்ளது. மாப்பிள்ளை சம்பாவின் சிறப்பே ஆண்மையை பலப்படுத்துவது தான் ,மாப்பிள்ளை சம்பா அரிசியை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும்.

Jun 14, 2025

உடல் எடை குறைய சுரைக்காய்

சுரைக்காயுடன் பூண்டு சேர்த்து வேகவைத்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும்,சுரைக்காய் ஜூஸை அடிக்கடி குடித்து வந்தால் வயிற்றுப் புண்கள் மற்றும் வாய்ப்புண்கள் ஆறும்.சுரைக்காயை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் கோடைக்காலத்தில் ஏற்படும் தலைவலி சரியாகும்.வாரம் ஒருமுறை கரைக்காய் ஜூஸ் குடித்தால் உடல் எடை குறையும்.

Jun 11, 2025

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வாழைப்பூ.

வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். வாழைப்பூவின் துவர்ப்பு தன்மை ரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரையை கரைக்க உதவுகிறது. வாழைப்பூவை வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைந்துவிடும். பெண்களுக்கு மாதவிடாய் சீராக வருவதற்கு வெள்ளைப்படுதல், வயிற்று வலி பிரச்சனை சரியாக வாழைப்பூவை தினமும் சாப்பிடலாம்.

1 2 ... 7 8 9 10 11 12 13 ... 36 37

AD's



More News