25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நலம் வாழ

Feb 06, 2026

பல் கூச்சத்திற்கு...

பல் வலி, பல் கூச்சம், ஈறுகளில் வலி, பல் ஆட்டம் போன்ற பாதிப்புகளுக்கு கொய்யா இலை, மாந்தளிர் இவ்விரண்டையும், தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். அந்நீரால் அடிக்கடி வாய்க்கொப்பளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.அசைவ உணவு சாப்பிடாதவர்கள், கொண்டைக் கடலையை நிறைய சாப்பிடலாம். இதில், துத்தநாகம், இரும்பு, வைட்டமின் பி, புரதச்சத்து அதிகம் உள்ளது. கொழுப்புச்சத்து மிகவும் குறைவு. இது, நோய்தொற்றை தடுக்கும். இதில், நார்ச்சத்து அதிகம் என்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளும்.

Feb 05, 2026

வைட்டமின் நிறைந்த உணவுகள்

வைட்டமின் A ஆரஞ்சு, கேரட் ,சக்கரவள்ளி கிழங்கு ,பசலைக்கீரை ,மஞ்சள் பூசணி ,பால் ,தக்காளி, குடை மிளகாய்.வைட்டமின்E: எண்ணெய்கள் ,எண்ணெய் விதைகள் ,நட்ஸ்.வைட்டமின் K. கீரைகள் ,பீன்ஸ் ,சோயா பீன்ஸ் ,முட்டை, ஸ்ட்ராபெரி.வைட்டமின்B: பால் மற்றும் மாமிச பொருட்கள்.வைட்டமின்C; நெல்லிக்காய், கொய்யா, சிவப்பு குடைமிளகாய், கிவி ,ஸ்ட்ராபெரி, பப்பாளி.வைட்டமின் D: முட்டை, மட்டன், டுணா, சால்மன் நிறைந்த மீன் ,சீஸ் மற்றும் சூரிய ஒளி.

Feb 04, 2026

சத்து மிகுந்த ஜவ்வரிசி..

ஜவ்வரிசி உடலில் உள்ள சிவப்பு ரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது. நமது உணவுக்குழாய், வயிறு குடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களை குணப்படுத்துகிறது. எலும்புகளை ஆரோக்கியம், மூட்டுவலி, தசைகளை வலுவூட்டல், உடல் குளிர்ச்சி செல்களை புதுப்பிக்கவும் பயன்படுகிறது.

Feb 03, 2026

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவசியம் சாப்பிட வேண்டியது.

வாழைத்தண்டு, வாழைப்பிஞ்சு, வாழைப்பூ, வெண்டைக்காய், முட்டைக்கோஸ், புடலங்காய், பாகற்காய், அவரைப்பஞ்சு, சாம்பல் பூசணி, சுண்டைக்காய் ஆகிய காய்கறிகளை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.ஆரைக்கீரை, கறிவேப்பிலை, புதினா கீரை, முசுமுசுக்கை கீரை, வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, முருங்கை கீரை, சிறுகீரை, மணத்தக்காளி கீரை, துத்தி கீரை ஆகிய கீரைகளில் ஏதேனும் ஒன்றை பொறியலாக தினம் உட்கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு நல்லது.நாவல்பழம், நெல்லிக்காய் ஆகியவற்றை வேண்டிய அளவு சாப்பிடலாம். மலைவாழை வாரத்திற்கு இரண்டு சாப்பிடலாம்.பேரீச்சம்பழம், கொய்யாக் காய் ,பப்பாளி, ஆப்பிள், விளாம்பழம் போன்றவற்றை ஒரு நாளைக்கு50 கிராம் அளவு சாப்பிடலாம். மேலே உள்ள பழ வகைகளில் ஏதேனும் ஒன்றைச் சாப்பிடலாம். ஒரே நாளில் அனைத்து பழ வகைகளையும் சாப்பிடக் கூடாது.

Feb 02, 2026

சளி தொல்லை நீங்க...

சுக்கு, மிளகு, கொத்தமல்லி விதை, திப்பிலி, சித்தரத்தை ஆகிய அனைத்தையும் சம அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, நன்றாக கொதித்தபின் இறக்கி வடிகட்டி லேசான சூட்டில் பருகி வர நீண்ட நாள் சளி தொல்லை நீங்கும் (3 வயதுக்கு மேல் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கலாம்) .ஒரு நாளைக்கு ஒரு முறை என 2 நாட்கள் அல்லது 3 நாட்கள் குடித்துவர வேண்டும்.வைரஸ்களினால் ஏற்படும் சளித் தொல்லையை சரி செய்ய நீங்கள் பழச்சாறை தேர்வு செய்யலாம். வைட்டமின் சி நிறைந்த பழங்கள் உங்கள் உடலுக்கு சிறந்தவை. ஆரஞ்சு, அன்னாசி, தர்ப்பூசணி போன்ற பழங்களை சேர்த்துக் கொள்ளலாம். இந்த பழங்களில் உள்ள வைட்டமின் சி நோய் தொற்றுக்கு எதிராக போராடி நம்மைக் காக்கிறது.

Jan 28, 2026

அப்பளம் அதிகம் சாப்பிடுவதால் ........

 அப்பளம் கார்போஹைட்ரேட் நிறைந்த உடல்நலத்திற்கு தீங்கு என மருத்துவர்கள் கூறுகின்றனர். உணவு. அதிகமாக சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து நீண்ட காலத்தில் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. எண்ணெயில் அப்பளங்கள் பொறித்து எடுக்கப்படுவதால் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும். மேலும், அப்பளத்தில் சோடியம் அதிகமாக இருப்பதால் உடல் எடையை அதிகரித்து, இதயநோய்கள், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே அப்பளத்தை அதிகமாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.

Jan 26, 2026

15நாளில் பலவீனமான ஒருவரை வலுவான சிங்கமாக மாற்றும் முறைகள்.

காலை வெறும் வயிற்றில் 5 ஊறவைத்த பாதாம் + அத்தி (அஞ்சீர்) சாப்பிடுங்கள் -உடலுக்கு சக்தி நிரம்பும்.ஒவ்வொரு உணவிலும் புரதம் (Protein) கட்டாயம் இருக்க வேண்டும்-பருப்பு, பனீர்,தினமும் 20 புஷ்அப்ஸ் + 30 ஸ்க்வாட்ஸ் செய்யுங்கள் - ஜிம் செல்லாமலேயே உடல் கட்டு உருவாகும் பாலில் தேன் கலந்து குடித்தால்-நேராக எனர்ஜி & மாஸ் அதிகரிக்கும்.அல்லது முட்டை இதில் ஒன்றை நிரந்தரமாக சேர்க்கவும்.தினமும் 8 மணி நேரம் நன்றாக உறங்க வேண்டும்.மசில் (Muscle) உடற்பயிற்சியில் அல்ல. உறக்கத்தில்தான் உருவாகுகிறது.தினமும் 1 வாழைப்பழம் + நிலக்கடலை சாப்பிடுங்கள் பலவீனமாக இல்லாமல் உறுதியான தோற்றம் கிடைக்கும்.

Jan 24, 2026

கால்சியம் குறைவால் ஏற்படும் பாதிப்புகள்.

எலும்புகள் பலவீனமாகும்.பல் வலி, பற்கள் விழுதல் ஏற்படலாம்.கை, கால் வலிகள் அதிகரிக்கும்.கால்களில் திடீர் பிடிப்பு (கிராம்ப்ஸ்) வரும்.நகங்கள் எளிதில் உடையும்.முடி உதிர்வு அல்லது நரம்புகள் பலவீனமாகும்.இதயத் துடிப்பு ஒழுங்கற்றதாக மாறலாம்.அதிக சோர்வு மற்றும் பலவீனம் ஏற்படும்.தூக்கப் பிரச்சனைகள் ஏற்படலாம்.கால்சியம் குறைபாடு ஏற்பட்டால் ஆஸ்டியோபோரோசிஸுக்கு வழிவகுக்கும், எலும்பு முறிவுகள் மற்றும் ஆஸ்டியோபீனியா போன்ற அபாயத்தை அதிகரிக்கும். மேலும், தசைப்பிடிப்பு, சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்கள் ஆகியவற்றையும் ஏற்படுத்தும். 

Jan 22, 2026

இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் உணவுகள்.

இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க, நார்ச்சத்து நிறைந்த (கீரை, சுவிஸ் சார்ட்), பெர்ரிகள், முழு தானியங்கள் (ஓட்ஸ்), பாகற்காய், கொட்டைகள் மற்றும் விதைகள், மெலிந்த புரதங்கள் (முட்டை, மீன்) மற்றும் யோகர்ட்** போன்ற உணவுகளை உண்ணலாம், இவை இரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவதை மெதுவாக்கி, அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.  கீரை, கேல், ப்ரோக்கோலி போன்ற இலைக்கறிகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். பாகற்காய் சாறு வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது.வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்தும். மேலும் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புகளில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றும். இதில் அதிகமுள்ள வைட்டமின் ஏ கண்புரை ஏற்படுவதை தடுக்கிறது.இந்த உணவுகள் அனைத்தும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் (Low Glycemic Index) கொண்டவை, அதாவது அவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை மெதுவாக உயர்த்துவதோடு, நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான தேர்வுகளாகும்.

Jan 21, 2026

கல்லீரல் கொழுப்பு நோய் அறிகுறிகள் .

கல்லீரல் கொழுப்பு பிரச்சனை இருப்பதற்கான முக்கிய அறிகுறிகள் எளிதில் உடல் சோர்வு அடையும், வயிற்றின் வலது பக்கத்தில் வலி அல்லது அதிக பாரம் இருப்பது போன்ற உணர்வு, அடிக்கடி செரிமான கோளாறு ஏற்படும். வாயில் அடிக்கடி கசப்பு போன்ற உணர்வு ஏற்படுதல், திடீர் உடல் எடை அதிகரித்தல் அல்லது குறைதல், ரத்தத்தில் கொழுப்பின் அளவு கூடும்.கண்களுக்கு கீழ் கருவளையம் இருந்தால் அது கல்லீரல் திரிபு அல்லது மோசமான நச்சுத்தன்மையை குறிக்கலாம்.கல்லீரல் நோய் புரதங்களை உருவாக்கும் கல்லீரல் திறனை பாதிக்கலாம். இது இரத்த ஓட்டம் மற்றும் திரவத்தை அகற்றும் செயல்பாட்டை பாதிக்கலாம்.கொழுப்பு கல்லீரல் நோயின் தீவிர நிகழ்வுகளில் கல்லீரல் சரியாக செயல்படாது.இந்த பிரச்சனை உள்ளவர்கள் உணவில் நெல்லிக்காய், பூண்டு, மஞ்சள், கீரைகள், வெள்ளை பூசணி ,சுரைக்காய், புடலங்காய், எலுமிச்சை சாறு, சிறுதானியங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

1 2 ... 10 11 12 13 14 15 16 ... 51 52

AD's



More News