25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


நலம் வாழ

May 30, 2025

குடற்புண் உள்ளவர்கள் திராட்சைப் பழச்சாற்றை பருகினால் குணம் பெறலாம்.

திராட்சைப் பழத்தை பன்னீரில் ஊறவைத்து சாறு பிழிந்து பருகினால் இதயநோய்கள் அகலும். இதய செயற்பாடு சிறப்பாக அமையும். மேலும், குடற்புண் உள்ளவர்கள், கல்லீரல், மண்ணீரல் கோளாறு உள்ளவர்கள் இதன் பழச்சாற்றை3 வேளை, அரை அவுன்ஸ் வீதம் பருகினால் குணம் பெறலாம். அதேபோன்று20 கிராம் உலர்ந்த திராட்சையை நெய் விட்டுப் பொரித்துச் சாப்பிட்டு வந்தால் சூடு காரணமாகத் தோன்றும் இருமல் மட்டுப்படும்

May 29, 2025

பாலில் பூண்டு கலந்து குடித்தால் ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கும்.

இடுப்பு வலி, மூட்டு வலி, வாய்வு பிடிப்பு மற்றும் கால் வலி போன்ற பிரச்னை உள்ளவர்கள், பூண்டை பாலில் காய்ச்சி குடித்தால் நல்ல பலனை காணலாம். மேலும், பூண்டு கலந்த பால் உடல் பருமனைக் குறைத்து இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி ரத்தத்தில் சேரும் கொழுப்புகளை குறைக்கிறது.

May 28, 2025

இருமல்,  சளியை விரட்ட...

அடிக்கடிவிடாமல் இருமிக் கொண்டிருப்பவர்களுக்கும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களுக்கும் அருமருந்து தான் மஞ்சள், பால் மற்றும் மிளகு.குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும்.நான்கைந்து நாளில் இருமல் பறந்தோடி விடும்.  மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க் கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.அதே போல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்திஉள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத்தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும்சக்தி மிளகுக்கு உள்ளது. மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடவில் சேரும் போது இருமல், சளி சரியாகி விடும்.

May 27, 2025

செங்கரும்பஞ்சாறு.

கரும்பை சுத்தம் செய்து தோல் உரித்து, சிறு துண்டுகளாக்கவும். துருவிய இஞ்சியை சிறிதளவு சேர்த்து அரைத்து வடிகட்டவும். பின், எலுமிச்சை சாறு சேர்க்கவும். சுவையும், குளிர்ச்சியும் தரும் கரும்பு சாறு தயார்.இதில் உள்ள சுக்ரோஸ் உடலுக்கு உடனடி ஆற்றல் தரும். எளிய சர்க்கரையை உடல் எளிதாக உறிஞ்சும். சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவும். ஜீரணத்தை எளிதாக்கும். செரிமானத்தில் சமநிலை பேணும்.இதில் உள்ள பொட்டாஷியம், வயிற்றில் நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கிறது. மலச்சிக்கல் வராமல் பாதுகாக்கிறது. கல்லீரல் நோய்த்தொற்றுகளை எதிர்க்க உதவுகிறது. குடலை சுத்தப்படுத்தி கெட்ட கொழுப்பு அளவை குறைக்கிறது. எலும்பு. பற்களை வலுப்படுத்த உதவுகிறது. இயற்கை டையூரிடிக்காக செயல்பட்டு, உடல் நச்சுகளை வெளியேற்றுகிறது. சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுக்கிறது.

May 26, 2025

நார்ச்சத்து அதிகம் உள்ள கறுப்பு கொண்டைக்கடலை.

கறுப்பு கொண்டைக்கடலையில் நார்ச்சத்து அதிகம், சர்க்கரையை வெளியிடும் பண்பு குறைவு. குளுகோஸ் பயன்பாட்டை மேம்படுத்தக்கூடியது என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதைத் தொடர்ச்சியாகச் சாப்பிடலாம் இதில் போலி அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன. இது மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து, அந்நோய் வராமல் பாதுகாக்கும் உன்னத உணவு.

May 25, 2025

மூட்டு வலி குணமாக முடக்கத்தான் கீரை

கீரை, சீரகம், மிளகு, வெங்காயம், தக்காளி, பூண்டு இவையெல்லாம் தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடுங்கள். கொதித்த பின்பு அதனை இறக்கி வடிகட்டி விடுங்கள். நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து குடிக்க மூட்டு வலி குணமாகும்.முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மலக்சிக்கல், மூல நோய்கல், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.முடக்கத்தான் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து, கால்சியம், புரதம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.

May 23, 2025

புளிப்பு

புளிப்பு பித்தத்தைத் தூண்டி ஜீரணத்தை அதிகரிக்கும். இதயத்திற்கு பலமளிக்கும்.புளிப்பு சுவை உணவில் உள்ள வைட்டமின் மற்றும் புரதச் சத்துக்களை கிரகித்து உடலுக்கு அளிக்கும்.புளிப்பு சுவை அதிகமாகும்போது அஜீரணம் ஏற்படும். சரும நோய் உண்டாகும். ரத்தம் கேடு அடையும்.புளித்த மாவில் செய்யப்படும் இட்லி, தோசை உடல் நலத்திற்கு அதிக கேடு விளைவிக்கும்.

May 22, 2025

கண் குறைபாடுகள் நீங்க தூதுவளை.

தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும்.தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். தூதுவளையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளையும் தேனில் கலந்து பத்தியம் இருந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் இருமல், இளைப்பு நீங்கி உடல் வலுவடையும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தியைத் தூண்டும்.

May 21, 2025

இருமல் குறைய அதிமதுரம்

அதிமதுரம் நுரையீரலை சுத்தம் செய்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கும்.அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் கடித்து, அதன் சாற்றை சுவைத்து விழுங்கினாலே இருமல் குறையும், அதிமதுர பொடியை2 கிராம் அளவு தேனில் குழைத்து, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும்.

May 20, 2025

கோதுமை ரவையில் உள்ள விட்டமின் சத்துகள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும் .

கோதுமை ரவை உப்புமாவை உடல் மெதுவாக சீரணிக்கிறது. இதனால் உங்களுக்கு நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்த உணர்வு இருப்பதால், நடுவில் நொறுக்குத்தீனிகள் அல்லது மற்ற உணவுகள் சாப்பிடவும் தோன்றாது. இதனால் உடல் பருமனாவது. கொழுப்பு சேர்வது தடுக்கப்படும்.கோதுமை ரவையில் உள்ள விட்டமின் சத்துகள் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். குறிப்பாக இதிலுள்ள விட்டமின் B, விட்டமின் E ஆகியவை நோயெதிர்ப்பு ஆற்றலுக்கு வலுச் சேர்க்கும்.உப்புமா உடலுக்கு ஆற்றல் அளிப்பதை உணவியல் நிபுணர்களும் ஒப்புக்கொள்கின்றனர். மேலும், அதில் போதுமான காய்கறிகள் சேர்க்கும்போது, அதில் சத்தும் கூடுதலாகக் கிடைக்கும்.

1 2 ... 9 10 11 12 13 14 15 ... 36 37

AD's



More News