25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


நலம் வாழ

Apr 03, 2025

எதிர்ப்பு சக்தி அதிகரிக்க....

 தினம் இரு வேளை இஞ்சி, எலும்பிச்சைத்தோல், மஞ்ச தூள், இரண்டு கிராம்பு, தேவையான அளவு கல் உப்பு சேர்த்து,1 லிட்டர் தண்ணீரில் கலந்து நன்கு கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை பருகி வந்தால், எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நோய் கிருமிகள் தாக்காத வண்ணம்  பாதுகாக்கும். மேலும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மருத்துவமனையில் இதைதான் கொடுக்கிறார்கள்.  அனைவரும் பின்பற்றவும்..

Mar 31, 2025

பன்னீர்  திராட்சை

பன்னீர் திராட்சையில் உள்ள பண்புகள் கட்டிகள் மற்றும் புற்றுநோயின் வளர்ச்சியைதடுக்கின்றன. இதனை ஜூஸாக எடுத்துக்கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோயின்அபாயத்தைப் பெறும் அளவு குறைக்கலாம்.இதனுடன் மாதவிடாய் பிரச்சனைகளும் சரியாகும். 

Mar 28, 2025

புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடும் பச்சை மிளகாய்.

பச்சை மிளகாயில் இருக்கும் கேப்சைசின், அதிகளவு கொலஸ்ட்ரால் மற்றும் உடல் பருமனுக்கு எதிராக செயல்படுகின்றது. இது கொழுப்பை எரித்து, உங்கள் எடை இழப்பிற்கு துணை புரிகிறது.பச்சை மிளகாயில் உள்ள கேப்சைசின் மார்பக புற்றுநோய், கணைய புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், புரோஸ்டேடிக் புற்றுநோய் மற்றும் இரைப்பை பு ற்றுநோய் போன்ற பல வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடும் திறன் பெற்றது.பச்சை மிளகாயை சாப்பிடுவது, இதய நோயால் ஏற்படும் இறப்புகளை குறைக்கிறது. டைப்-2 நீரிழிவு மற்றும் இதய நோய்க்கு இது மிகவும் சிறந்த மருந்தாகும்.

Mar 27, 2025

ஞாபக சக்தியையும், மன அமைதியும் தரும் பாய் .

ஆண்கள் பாயில் படுக்கையில் அவர்களின் மார்பகம் தசை தளர்ந்து விரியும்.பாய் உடல் சூட்டை உள் வாங்கக்கூடியது,பெரியோர்கள் சீர்வரிசை கொடுக்கையில் பாய் இல்லா ஒரு சீர்வரிசை கிடையாது.ஒரு பாய் மூன்று ஆண்டுகள் வரை அதன் தன்மையை இழக்காது.கட்டிலில் விரித்து உறங்கும் பஞ்சு மெத்தையை விட, வெறும் தரையில் பாய் விரித்து உறங்குவதால்... உடல் உஷ்ணம், தணிவதையும் உடலின் வளர்ச்சியும்.ஞாபக சக்தியையும், மன அமைதியும், நீண்ட உடல்/மன ஆரோக்கியத்தையும் தருகிறது,எலும்புகளை வலுவாக்கும். பாலூட்டும் பெண்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும்.

Mar 25, 2025

செல்கள் முதிர்ச்சி அடைவதை கட்டுப்படுத்தும் முந்திரி.

முந்திரி  பருப்பில் அதிகமாக கலோரி உள்ளது உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்பு காப்பர், செலினியம் பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற கனிம தாதுப் பொருட்கள் அதிக அளவில் உள்ளது.இது செல்கள் முதிர்ச்சி அடைவதை கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு.உடலுக்கு தீமை விளைவிக்ககூடிய கொலஸ்டிராலை குறைத்து நன்மை தரக்கூடிய கொலஸ்டிராலை  அதிகரிக்க செய்கிறது.

Mar 23, 2025

உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்க...

பச்சைப் பயறு, மோர், உளுந்து வடை, பனங்கற்கண்டு, சின்ன வெங்காயம், சுரைக்காய்.நெல்லிக்காய், வெந்தயக்கீரை மாதுளம் பழம், இளநீர், வெந்தயம், நாவற்பழம், கோவைக்காய் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

Mar 20, 2025

 மலச்சிக்கல் உள்ளவர்களுக்கெல்லாம் இதயநோய் ஏற்படும் சாத்தியம் அதிகம்.

 .புகை பிடித்தல், மன அழுத்தம், உடல் பரு மன் ஆகியவை தான் இதய நோய்களுக்கான காரணிகளாக அறியப்பட்டு வந்தன. தற்போது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மொனாஷ் பல்கலை23,814 பேரை வைத்து மேற்கொண்ட ஆய்வில், யாருக்கெல்லாம் மலச்சிக்கல் உள்ளதோ அவர்களுக்கெல்லாம் இதயநோய் ஏற்படும் சாத்தியம் அதிகமுள்ளதாகக் கண்டறிந்துள்ளது.

Mar 18, 2025

நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும்  உளுந்தம்பால்.

செய்முறை-அரை கப் உளுந்தை நன்றாக கழுவி, குழைய வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை ஆற வைத்து, மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து அரைத்த விழுதை ஊற்றி ,வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு வெந்தவுடன் 1 கப் தேங்காய் பால் சேர்த்து இறக்கவும். தேங்காய் துருவல், சுக்குத்தூள் கலந்து பருகலாம் புரதம் நிறைந்த இந்த பால், நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தும். உடலுக்கு குளிர்ச்சி தரும். உடலை இரும்பு போல் மாற்றும்.

Mar 11, 2025

உடல் எடையைக் குறைக்க வெந்தயம்.

 வெந்தய விதைகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது .நெய்யில் வறுத்த வெந்தயத்தை பொடி செய்து அதை வெது வெதுப்பான பாலில் கலந்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தால், சருமம் மற்றும் தலை முடியின் ஆரோக்கியம் அதிகரிக்கும். வெந்தயத்தை சிறிது நெய்யில் வறுத்து, காலையில் வெறும் வயிற்றில் பாலுடன் சாப்பிட்டு வந்தால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடல் எடையைக் குறையும்.

Mar 10, 2025

சிறுதானியத்தின் பலன்கள் 

வரகு - உடல் எடை மற்றும் சர்க்கரை நோய்க்கு. குதிரைவாலி-  இதய நோய் சம்பந்தமான குறைபாட்டுக்கு.சாமை - இரத்த சோகை மற்றும் உடலின் கொழுப்பினை குறைக்க.திணை- இதயத்தை பலப்படுத்தும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்,இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த.சோளம்- இரத்த ஓட்டம், செரிமான சக்தியை மேம்படுத்துதல் மற்றும் வாயுத்தொல்லை நீங்க.நாட்டு கம்பு- உடல் வெப்பம், பார்வைதிறன், இரத்ததில் உள்ள சர்க்கரை அளவினை குறைக்க.நாட்டு ராகி- இரும்புச்சத்து, சுண்ணாம்புசத்து, பெருங்குடல் புற்றுநோய் & தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க.பனி வரகு- சருமத்தை பிரகாசமாக வைத்தல் மற்றும் நரம்பு மண்டலத்தை பலமாக்க.

1 2 ... 12 13 14 15 16 17 18 ... 36 37

AD's



More News