25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


நலம் வாழ

Feb 11, 2025

பாகற்காய் ஜூஸ்

பாகற்காயை தோலை சீவி விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இதை மிக்சியில் போட்டு தேன், எலுமிச்சை சாறு சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் உப்பு, மிளகுதூள், தண்ணீர் சேர்த்து கலக்கினால் பாகற்காய் ஜூஸ் ரெடி இது கல்லீரல் பிரச்சனை வராமல் தடுக்கும். மேலும், நீரிழிவு, இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.

Feb 10, 2025

பலநோய்களுக்கு மருந்தாகும் சோம்பு வாட்டர்..

சோம்பை லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள், ஒரு டம்ளர் வெந்நீரில் சோம்பை சேர்க்கவும், சற்றே ஆற வைத்து, பனங்கற்கண்டு, புதினா, எலுமிச்சை சாறு விட்டு நன்றாக கலக்கி மிதமான சூட்டில் குடித்து வந்தால், வயிறு மந்தம், உப்புசம், அஜீரணக் கோளாறுக்கு ஏற்ற பானம் இது, உடல் வலி குணமாகும், உடல் எடை குறையும், காலை, மாலை, இரவு சாப்பிடுவதற்கு முன்பு அருந்துவது நல்லது.

Feb 03, 2025

கிருமி நம்ம வீட்டுக்குள்ள வராம தடுக்க…..

கால் மேல தண்ணி ஊத்திட்டு வீட்டுக்குள்ள வரப்ப, கால மிதியடில நல்லா தொடச்சிட்டு வீட்டுக்குள்ள வாங்க,கால தொடைக்காம வரப்ப ,நம்ம கால்தடம் அடியடியா தரைல பட்டு ,பாக்றவங்களுக்கு நம்மமேல அருவெறுப்ப உண்டு பண்ணும். அதே மாறி Restroom use பண்ண அப்புறமும் கால மிதியடில நல்லா தொடச்சிட்டு வாங்க, இப்படி பண்றது மூலமா வீணா போன கிருமி நம்ம வீட்டுக்குள்ள வராம தடுக்க முடியும். அதே மாறி இந்த பழக்கம் உங்க குணத்தையும் உங்க குடும்பத்தையும் பாதுகாக்கும்.

Feb 02, 2025

முட்டை மஞ்சள் கருவில் கொலஸ்ட்ரால் இரத்தக் கொழுப்பின் அளவை பாதிக்காது.

வேகவைத்த முட்டை மற்றும் ஆம்லெட்டுகள் இரண்டிலும் கொலஸ்ட்ரால் முதன்மையாக மஞ்சள் கருவில் உள்ளது. சமீபகால ஆய்வுகள், ஒருமுறை நினைத்தபடி, உணவுக் கொலஸ்ட்ரால் இரத்தக் கொழுப்பின் அளவைக் கணிசமாகப் பாதிக்காது என்பதைக் காட்டுகிறது. ஹார்வர்ட் ஹெல்த் பப்ளிஷிங்கின் கூற்றுப்படி, நமது உடல்கள் முக்கியமாக முட்டை போன்ற உணவு மூலங்களிலிருந்து இல்லாமல் ,நமது உணவில் உள்ள நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் மூலம் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கின்றன. எனவே, ஒரு வேகவைத்த முட்டையில் சுமார் 186 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது, குறைந்த மஞ்சள் கரு அல்லது முட்டையின் வெள்ளைக்கருவைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆம்லெட் புரதத்தை தியாகம் செய்யாமல் கொலஸ்ட்ரால் நுகர்வு குறைக்க உதவும்.

Jan 31, 2025

வேகவைத்த முட்டை vs ஆம்லெட்: எது ஆரோக்கியமானது.

வேகவைத்த முட்டை மற்றும் ஆம்லெட்டுகள் தனித்துவமான ஊட்டச்சத்து நன்மைகளை வழங்குகின்றன. வேகவைத்த முட்டைகள் குறைந்த கலோரி, புரதம் நிறைந்த தேர்வு, விரைவான உணவுக்கு ஏற்றது. ஆம்லெட்டுகள் பல்துறைத்திறனை வழங்குகின்றன, மேலும் காய்கறிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை அனுமதிக்கின்றன, ஆனால் கலோரி மற்றும் கொழுப்பு உட்கொள்ளலை நிர்வகிக்க கவனமாக மூலப்பொருள் தேர்வு தேவைப்படுகிறது. இரண்டும் புரதம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்களின் நல்ல ஆதாரங்கள், கொலஸ்ட்ரால் கவலைகள் இப்போது உணவுக் காரணி குறைவாக உள்ளது.முட்டைகள் புரதம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்த ஊட்டச்சத்தின் ஆற்றல் மையமாகும். ஆரோக்கியமான உணவில் முட்டைகளை சேர்த்துக்கொள்ளும் போது, ​​பலர் வேகவைத்த முட்டை மற்றும் ஆம்லெட்டுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள். உணவுத் தேர்வுகள் இரண்டும் பெரும்பாலும் காலை உணவில் பெரும்பாலான மக்களால் விரும்பப்படுகின்றன. இரண்டு விருப்பங்களும் சுவையாகவும் வசதியாகவும் இருந்தாலும், அவை ஊட்டச்சத்து உள்ளடக்கம், கலோரிகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுகின்றன.

Jan 30, 2025

பகல் உணவு சாப்பிடுவதற்கு முன்பு...

பகல் உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் அல்லது 1மணி நேரத்திற்கு முன் எலுமிச்சை சாற்றில் சிறிது இஞ்சி சாறு கலந்து அதனுடன் சிறிது கல் உப்பு சேர்ந்து குடித்தால் ஜீரண மண்டலம் நன்றாக வேலை செய்யும். உணவு நன்றாக செரிக்கும். மேலும், இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேராமல் பாதுகாப்பதனால் உடல் பருமன் பிரச்சனை நீங்கும். வயிறு, செரிமான பிரச்சனைகள் வராமல் காக்கும்.

Jan 27, 2025

40 மற்றும் 50 வயது மேற்பட்டவர்களுக்கு நடைபயிற்சி

40கள் மற்றும் 50கள் முழுவதும் வளர்சிதை மாற்றம் குறைகிறது, மேலும் மூட்டு ஆரோக்கியம் மற்றும் சகிப்புத்தன்மை போன்ற பிற அம்சங்கள் மிகவும் முக்கியமானதாகிறது. இந்த வயதுப் பிரிவினர் தினசரி 30 முதல் 45 நிமிடங்கள் மிதமான வேகத்தில் உலாவுவதால் பயனடையலாம். வலிமை உடற்பயிற்சிகள் அல்லது சரிவுகள் அல்லது பாதைகள் போன்ற வெவ்வேறு நிலப்பரப்புகளில் நடப்பது நன்மைகளை அதிகரிக்கலாம். இந்த ஆண்டுகளில், கூட்டு ஆரோக்கியத்தை பராமரிப்பது ஒரு முக்கிய பிரச்சினையாகிறது; எனவே, பொருத்தமான பாதணிகளை அணிவது மற்றும் சமமான பரப்புகளில் நடப்பது மிகவும் முக்கியம்.

Jan 20, 2025

நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் சிறுதானிய உணவுகள்

வரகு - உடல் எடை மற்றும் சர்க்கரை நோய்க்கு. குதிரைவாலி-  இதய நோய் சம்பந்தமான குறைபாட்டுக்கு.சாமை - இரத்த சோகை மற்றும் உடலின் கொழுப்பினை குறைக்க.திணை- இதயத்தை பலப்படுத்தும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்,இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த.சோளம்- இரத்த ஓட்டம், செரிமான சக்தியை மேம்படுத்துதல் மற்றும் வாயுத்தொல்லை நீங்க.நாட்டு கம்பு- உடல் வெப்பம், பார்வைதிறன், இரத்ததில் உள்ள சர்க்கரை அளவினை குறைக்க.நாட்டு ராகி- இரும்புச்சத்து, சுண்ணாம்புசத்து, பெருங்குடல் புற்றுநோய் & தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க.பனி வரகு- சருமத்தை பிரகாசமாக வைத்தல் மற்றும் நரம்பு மண்டலத்தை பலமாக்க.

Jan 19, 2025

பழங்கள்,ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காமல் இருப்பது நல்லது .

வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.இனிப்பு சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது. இவ்வாறு செய்வதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து, டைப்-2 சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.பழங்கள் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்காமல் இருப்பது நல்லது. பழங்களில் சர்க்கரை அல்லது சிடரிக் அமிலம் இருப்பதால் 5 நிமிடங்களுக்கு தண்ணீர் குடிக்க வேண்டாம். ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது ஐஸ்கிரீம் சாப்பிட்ட 15 நிமிடம் கழித்துதண்ணீர் குடிக்கலாம்.டீ காபி, சூடான பானங்கள் அருந்திய பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது. குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ எடுத்துக் கொண்டால், எடை வாயு, அமிலத்தன்மை மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Jan 16, 2025

கிழங்கு வகைகளும், அற்புத மருத்துவ குணங்களும்

கருணைக்கிழங்கு உடல் சூட்டை தணிக்கும், மூல நோயை குணமாக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கு உடலுக்கு பலம் தரும் சொறி, சிரங்குகளை குணமாக்கும். சேப்பங்கிழங்கு மலச்சிக்கல் தீரும், நரம்புகளுக்கு வலுசேர்க்கும் சேனைக்கிழங்கு நீரிழிவை தடுக்கும் உடல் பருமனை குறைக்கும் உருளைக்கிழங்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். குடல் ஆரோக்கியம் மேம்படும் மரவள்ளிக்கிழங்கு உடல் பலம் பெறும். வியாதிகளை குணமாக்கும் தன்மை உள்ளது.

1 2 ... 14 15 16 17 18 19 20 ... 36 37

AD's



More News