25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


நலம் வாழ

Nov 19, 2024

குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு

தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.

Nov 17, 2024

வயிற்றை சுத்தம் செய்ய...

  காலையில் வெறும் வயிற்றில் எதுவுமே குடிக்காமல், சாப்பிடாமல் 'வெறும் வயிற்றில் பழைய சோறு தண்ணி நல்ல புளித்த நீராகாரம் நல்ல உப்பு கொஞ்சம் அதிகமாக சேர்த்து ஒரு செம்பு நிறைய  குடித்து விட்டால் அடுத்து ஒரு மணி நேரத்தில் வயிறு நல்ல சுத்தமாகி விடும். வயிற்றை சுத்தம் செய்யும் போதெல்லாம் இப்படி செய்தால் போதும் நல்ல வயிறு சுத்தமாகி உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Nov 15, 2024

தினமும் ஒரு தக்காளியை சாப்பிடுவது உடலை சுறுசுறுப்பாக்கும்

1.தக்காளிப் பழங்கள் வலுவான எலும்புகளையும் பற்களை பெறுவதற்கு உதவுகின்றன. 2.தக்காளி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், வயதாவதையும் தாமதப் படுத்துகிறது. 3.பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. 4.தினமும் ஒரு தக்காளியை சாப்பிடுவது உடலை சுறுசுறுப்பாக்கும்.

Nov 14, 2024

வைட்டமின் B6 (PYRIDOXINE) சத்து நிறைந்த உணவுகள்

1. மஞ்சள்.2. பிஸ்தா.3. குங்குமப்பூ.4. கோழி இறைச்சி.5.கல்லீரல்.6. மாட்டிறைச்சி.7. பன்றி இறைச்சி.8. சால்மன் மீன்.9. டோஃபு.10.பிரிஞ்சி இலை. 

Nov 08, 2024

எடை குறைக்கும் வெள்ளரிக்காய் ஜூஸ்

.உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தினமும் தூங்கும் முன் வெள்ளரிக்காயை கட் பண்ணி அதில் கொஞ்சம் புதினா சேர்த்து அரைத்து சாறு எடுத்து அதில் அரை லெமன் பிழிந்து குடித்தால் உடல் எடை மடமட என குறையும் மேலும் ஞாபக சக்தி அதிகரிக்கும் உடல் சூட்டை தணிக்கும் மன அழுத்ததை குறைக்கும் இதை தினமும் குடித்து வந்தால் உடல் எடையை சீக்கிரம் குறையும்.உடல் எடை அதிகமா இருக்கா இந்த ஜூஸ் குடித்து பாருங்க மடமட என குறையும்.

Nov 07, 2024

கோதுமை மாவு

கோதுமை மாவில் செய்த உணவுகளை உண்டு வந்தால். உடல் பலம் பெறும். அக்கிப்புண். தீப்பட்ட இடங்கள், தோல் உரிந்த இடங்கள் போன்றவற்றில் இதன் மாவை நேரடியாகவோ, வெண்ணெய் சேர்த்தோ பூசினால் எரிச்சல் தணிவதோடு பிரச்னையின் தீவிரமும் குறையும்.

Nov 04, 2024

ஆப்பிள் பற்றிய சில தகவல்கள்

உடல் எடையை குறைப்பதிலும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதிலும் ஆப்பிள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆப்பிளில் இரண்டு வகையான நார்ச்சத்து உள்ளது. அதில் ஒன்று கொலஸ்டராலைக் குறைப்பது. மற்றொன்று பெருங்குடலில் உள்ள புரோபயாடிக் பாக்டீரியாக்களுக்கு உணவாக செயல்படுகிறது. இதயம் தொடர்பான பிரச்னைகளைத் தடுக்கிறது.

Nov 03, 2024

பீர்க்கங்காய் நன்மைகள்

எடை குறைய உதவும்.ரத்தத்தை சுத்தம் செய்யும்.மஞ்சள் காமாலையை குணமாக்கும்.மலச்சிக்கலை குணமாக்கும்.வயிறு சுத்தமாகும்.சிறு நீரக கற்கள் கரையும்.கண் பார்வைக்கு நல்லது.

Nov 01, 2024

மூக்கு எரிச்சல்

மூக்கு எரிச்சல், மூக்கில் நீர்வடிதல் மற்றும் மூக்கடைப்பு இருப்பவர்கள், சிறிது ஓமம், சிறுதுண்டு பச்சைக் கற்பூரம், ஒரு சிட்டிகை சுத்தமான மஞ்சள் தூள் ஆகிய மூன்றையும் நசுக்கி, ஒரு தூய வெள்ளைத் துணியில் முடிந்து, அவ்வப்போது மூக்கில்வைத்து முகர்ந்து கொண்டே இருந்தால், மேலே சொன்ன மூக்குப் பிரச்னைகள் அண்டாது. சுவாசப் பாதையில் நோய்க் கிருமிகள் தொற்றாமல், கவசம் போல காக்கும்.

Oct 31, 2024

அரிசியை விட 8 மடங்கு இரும்புச் சத்து உள்ள கம்பு

அரிசியை விட 8 மடங்கு இரும்புச் சத்து உள்ள கம்பு.பெண்களுக்கு இந்த உணவு முக்கியம்கம்பு பருவமடைந்த பெண்களுக்கு சிறந்த உணவாக உள்ளது. மாதத்தில் நான்குமுறையாவது கம்பை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.மாதவிடாய் சமயங்களில் அடி வயிற்று வலியும், ரத்தபோக்கும் உண்டாகும் நேரங்களில் சூடாக கம்பு கூழ் அல்லது கம்பு சூப் வைத்துகொடுப்பதன் மூலம் இவை குறையலாம். அதே நேரம் கம்பு உடன் மோர் மற்றும் சாம்பார் வெங்காயம் சேர்த்தும் சாப்பிடலாம்.பிரசவித்த பெண்கள் கம்பு உணவு எடுத்துகொள்ளும் போது தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.அதோடு ஆற்றல் மிகுந்த சத்துகளை கொண்டிருப்பதால் அவர்கள் சோர்வு, இல்லாமலும் இருப்பார்கள். நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கக்கூடியது.

1 2 ... 17 18 19 20 21 22 23 ... 36 37

AD's



More News