25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


நலம் வாழ

Dec 22, 2024

கம்பங்களி சாப்பிட.....

கம்பை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்து வரும்போது, கம்பு மாவை அதில் சேர்த்து கட்டியாகாமல் கிளறி இறக்கி சாப்பிடலாம்.கால்சியம், புரதம், இரும்பு, கனிமச் சத்துகள் என அனைத்து சத்துகளுமே கம்பில் உள்ளது.வளரும் குழந்தைகளுக்கும், பருவடைந்த பெண்களுக்கும் அவசியம் தர வேண்டிய உணவு.சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு, ஆகிய பிரச்சனைகளில் இருந்தும் இது காக்கிறது.சருமம், கண்பார்வைக்கு அவசியமான வைட்டமின் A, பீட்டா கரோட்டின் கம்பில் அதிகளவில் உள்ளது.கம்பு, வேண்டாத கொழுப்புகளை உடலில் தங்கவிடாது.

Dec 10, 2024

மதிய நேரம் குட்டித் தூக்கம் (afternoon cat nap ).. உடலுக்கு நல்லதா?

மதிய நேர குட்டித் தூக்கம் நல்லதா, கெட்டதா?. மதிய நேர குட்டி தூக்கத்தை ஆங்கிலத்தில் afternoon cat nap என்று சொல்கிறார்கள். பல்வேறு ஆராய்ச்சிகளில், மதிய நேரம் தூங்குவது மூளையின் செயல்திறனை மேம்படுத்தும், ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும், சோர்வை குறைத்து சுறுசுறுப்பாக்கும் எனத் தெரிய வந்துள்ளது. ஆதலால் மதிய நேர குட்டி தூக்கம் நல்லது என உடல் நல நிபுணர்கள் கூறுகின்றனர்.

Dec 09, 2024

எப்படிப்பட்ட இருமல் இருந்தாலும் ஒரு முறை குடித்தால் போதும் இருமல் ஓடிவிடும் .

கற்பூரவள்ளி  ,துளசி, சின்ன வெங்காயம்,உப்பு நன்றாக  இடித்து அதன் சாரை எடுத்து அதனுடன்  மிளகுத்தூள் எலுமிச்சை சாரை சேர்த்து குடித்தால் போதும் சளி உடனடியாக வெளியே வந்து இருமல் குறைந்து விடும் நல்ல மருந்து, முயற்சி செய்து பாருங்கள்

Dec 08, 2024

வேப்ப இலைகளில் தயாரிக்கப்பட்ட ஜூஸ்ஐ தினமும் அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

வேப்ப இலைகளில் தயாரிக்கப்பட்ட ஜூஸ்ஐ தினமும் அருந்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும். மலேரியா நோய்க்கு இந்த ஜூஸ்ஐ குடிப்பதால், அதுகுயினின் போலவே பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேம்பில் அதிகளவு கால்சியம் உள்ளதால், நமது எலும்புகளுக்கு நன்மை தருவதாக இருக்கிறது. அதுமட்டுமின்றி புற்றுநோய்க்கு கூடவேம்பு மருந்தாக அமைகிறது.வேப்பிலை சாற்றின் கசப்பான தன்மை காரணமாக இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கிறது. இது மாவுச்சத்தை குளுக்கோஸாக உடைத்து இரத்த சர்க்கரை ஏறாமல் உடனே ஏறாமல் தடுக்கிறது.

Dec 06, 2024

பல் வலிக்கு கிராம்பு…

கிராம்பு பல் வலி, தேள்கடி, விசக்கடி, கோழை, வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றோட்டம் போன்றவற்றைக் குணமாக்கப் பயன்படுகிறது.வயிற்றில் சுரக்கும் சீரண (Hcl) அமிலத்தைச் சீராக்கும்.ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிக்கும்.இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.உணவில் ஏற்படும் அஃபலாக்சின்(en:Aflatoxin Aflatoxin) என்ற நஞ்சை, கிராம்பிலுள்ள யூகினால் (en:Eugenol Eugenol) அழிக்கும்.

Dec 05, 2024

இதய பிரச்சனை, பக்கவாதத்திற்கு மரவள்ளிக்கிழங்கு

மரவள்ளிக்கிழங்கு கொழுப்பு இல்லாதது என்பதால் ஆரோக்கியமான உடல் எடையை கொடுக்க வல்லது. இதிலுள்ள தாதுக்கள் ரத்தசோகை போன்ற நோய்களை போக்க உதவுகிறது. இதயத்திற்கு நல்லது. பக்கவாதம் தடுப்பு உள்பட பல நன்மைகளை வழங்குகிறது. இதிலுள்ள வைட்டமின் கே. மனஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மூளை நரம்பியல் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது.

Dec 03, 2024

பொட்டுக்கடலை சாப்பிட்டால் செரிமான அமைப்பை மேம்படுத்தும்

  பொட்டுகடலையில் நம் உடலின் சரியான வளர்ச்சிக்கு தேவையான பல ஊட்டச்சத்து கூறுகள் உள்ளன. இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைப்பதன் மூலம் ஆரோக்கியமான செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. பொட்டுகடலையில் கலோரிகள் மிகக் குறைவு மற்றும் இரும்புச் சத்து அதிகம்.மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு சிறந்தது. பொட்டு கடலையில் நார்ச்சத்து அதிகம் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது. நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கிறது. ஏனெனில் இது குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. மேலும் இது நமது பெருங்குடலை ஹைட்ரேட் செய்வதன் மூலம் மலச்சிக்கலைத் தடுக்கிறது.பொட்டுகடலை பெண்களின் ஹார்மோன் அளவை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்துகிறது.

Dec 02, 2024

ஜலதோஷம், தலைவலி பிரச்சனைகளுக்கு ஓமவள்ளி இலை

ஓமவள்ளி இலையிலிருந்து சாற்றை எடுத்து அதனுடன் சிறிது சர்க்கரைசேர்த்துநெற்றியில்பற்றுப்போட்டால்ஜலதோஷம், தலைவலி மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சனைகளும் நீங்கும்.இந்த இலையை அரைத்து தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். இவற்றுடன், ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் ஆகியவற்றை நன்கு கலந்து தினமும் 2 வேளை குடிக்க வேண்டும். இதனை நீங்கள் மூன்று நாள் மட்டும் குடித்து வந்தால் விரைவில் நல்ல முடிவை காண்பீர்கள்.இந்த இலையை தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து ஆவி பிடித்தாலும் நல்ல தீர்வு கிடைக்கும் . 

Nov 29, 2024

குடல்  புண் ஆற மணத்தக்காளி

மணத்தக்காளி வியர்வையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி,உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது.சமையலில் மணத்தக்காளி கீ ரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு

Nov 24, 2024

சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க....

வெந்தயம்,மல்லி, பட்டை, நெல்லி முள்ளி மற்றும் கறிவேப்பிலை (காய வைத்தது) ஆகியவற்றை பொடியாக்கிக் கொள்ளவும். இந்த மூலிகை பொடியை காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் வாயில் போட்டு தண்ணீர் குடிக்கவும். இதனால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

1 2 ... 16 17 18 19 20 21 22 ... 36 37

AD's



More News