நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான சேர்க்கை பெற்றுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.
விருதுநகர் மாவட்டத்தில், மாவட்டம் நிர்வாகம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை உயர்கல்வியில் சேர்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கை பெறுவதற்காக கடந்தாண்டுகளில் நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு நிகழ்வின் மூலம் தொடர்ச்சியாக பல்வேறு நுழைவு தேர்வு பயிற்சிகளும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விழிப்புணர்வு பெற்று, பயிற்சியின் மூலம் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான சேர்க்கை பெற்று வருகின்றனர்.
அந்த வகையில், கிருஷ்ணன்கோவில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று, நான் முதல்வன் திட்டத்தின் கல்லூரி கனவு நிகழ்வின் மூலம் பயிற்சியும், வழிகாட்டுதலும் பெற்று, அம்ரிதா என்பவர் கிளாட்(CLAT) நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று ஜபல்பூரில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்திலும், ஆறுமுகம் மற்றும் ஆர்.விஜய் ஆகியோர் ஐ.ஐ.டி.டி.எம்- ஜே.இ.இ நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று புவனேஷ்வரில் உள்ள ஐ.ஐ.டி.எம்(IITM) கல்வி நிலையத்திலும் சேர்க்கை பெற்றுள்ளனர்.மேலும், வத்திராயிருப்பு வட்டம் மகாராஜபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களின் மகன்களான பி.விஜயகுமார் மற்றும் பி.தினேஷ் ஆகியோர் Indian Institute of Hotel management -லும், சிவகாசி வட்டம், பூவநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர் மரியராஜ் பாண்டியன் என்பவர், இந்திய கடல்சார் பல்கலைக்கழக IMU நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று Marine Engineering படிப்பிற்கும் தேர்வாகி உள்ளனர்.
அதுபோல, கிருஷ்ணன்கோவில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பயின்று 8 மாணவர்கள் NLU, IITM, NCHM, APU போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில தேர்ச்சி பெற்றுள்ளனர். அந்த வகையில் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ள இந்த 14 மாணவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி, மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து தலா ரூ.5000 வீதம் மொத்தம் ரூ.70,000 மதிப்பிலான தொகைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
0
Leave a Reply