25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


முதுமை

May 20, 2026

ஆஸ்துமா நோயுள்ளவர்கள் கவனத்திற்கு...

முறையாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது ஆஸ்துமா நோயாளிகளுக்கு அவசியம்.எந்தளவிற்கு விரைவாகச் சிகிச்சை பெறுகிறார்களோ அந்த அளவிற்கு ஆஸ்துமா விரைவில் குணமாகும்.வாகனம் ஓட்டும்போதும், சமையல் செய்யும்போதும், ஒட்டடை அடிக்கும்போதும் முகத்தைத் துணியால் மூடிக்கொள்வது அவசியம்.மருத்துவரிடம் ஆஸ்துமா நோயாளிகள் தாங்கள் பிறநோய்களுக்கு உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளைக் காண்பிப்பது மிக முக்கியம்.தவறாமல் செய்யும் நடைப்பயிற்சி மூலம் நுரையீரலின் செயல்திறனை அதிகரித்துஆஸ்துமாவின் தொல்லையை வெகுவாகக் குறைக்க முடியும்.பிராணாயாமம் மற்றும் தியானப் பயிற்சி மிகவும் அவசியம்.சரியாக உட்காருதல் மற்றும் தூங்கும் நிலைகளை முறையாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.உடல் பருமன் மற்றும் தொப்பையைக் குறைக்கவும்.மனதைரியம், உற்சாகம், ஊக்கம் ஆகியவற்றை ஆலோசனை மூலம் அதிகரித்தல் அவசியம்.ஆஸ்துமா சிகிச்சையை மருத்துவரின் அனுமதியோடு மட்டுமே ஆரம்பிக்க வேண்டும்.சைனஸ் மற்றும் வயிறுஎரிச்சல் போன்ற தொல்லைகளுக்குத் தக்க சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.தேவைப்பட்டால் நீராவி பிடித்துக்கொள்ளலாம்.இன்புளூயன்ஸா, நிமோனியா தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை இன்புளூயன்ஸா தடுப்பூசியும், ஆயுளுக்கு ஒருமுறை மட்டும் நிமோனியா தடுப்பூசியும் போட்டுக்கொள்ள வேண்டும்.உள் இழுப்பான் (Inhaler) மற்றும் உள் உறிஞ்சி (Nebulizer) ஆகியவற்றை உபபோகிக்கும் முறையைச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். மூச்சுவிடும் சிரமத்திலிருந்துஉடனே நிவாரணம் கிடைக்கும். பக்கவிளைவுகள் ஏதுமில்லை. குறைந்த அளவு மருந்தே உள்ளே செல்லும்.முடிக்குச் சாயம் (Hair dye) அடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை வெளிக்கொணர மார்பு இயன்முறைச் சிகிச்சை தேவைப்படும். சளி இறுகாமலிருக்க நிறைய திரவ உணவினை வாய் மூலமோ, ஊசி மூலமோ எடுத்துக்கொள்ள வேண்டும்.நோய் தீவிரநிலையில் இருக்கும்போது வெந்நீர் அருந்துவது நல்லது.காற்றோட்டமான அறை, வீடு அவசியம்.அவசர உதவிக்கு அழைப்பு மணி (Alarm) வீட்டில் தேவை.தேவையெனில் சக்கர நாற்காலியை உபயோகிக்க தயங்கக்கூடாது.

May 13, 2026

நீர்ச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டால்..

வாந்தி, வயிற்றுப்போக்கினால் நீரிழப்பு ஏற்பட்டால் ORS பாக்கெட்டுகளைப் பயன்படுத்துங்கள்.இதில் போலிகளும் விற்கப்படுகின்றன. எனவே, பல வண்ணங்களில் விற்கப்படும் பானங்கள் வாங்குவதில் கவனமாக இருங்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி, தரமான பாக்கெட்டுகளையே வாங்குங்கள்.நீரிழப்பின் ஆரம்ப அறிகுறிகள்-அதிக தாகம் எடுப்பது, நாவறட்சி, சிறுநீர் குறைவாகப் போவது, அடர்ந்த மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போவது, தலைவலி, தசைப்பிடிப்பு போன்றவை உடலில் நீரிழப்பு ஏற்பட்டிருக்கும் அறிகுறிகளை உணர்த்தும்.வீட்டிலேயே தயாரிக்கலாம்உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி, ஒரு லிட்டர் ஒ.ஆர்.எஸ். கரைசலில் சர்க்கரை 13.5 கிராம், சோடியம் குளோரைடு 2.6 கிராம், பொட்டாசியம் குளோரைடு 1.5 கிராம், சோடியம் சிட்ரேட் 2.9 கிராம் சேர்க்க வேண்டும். இவற்றைக் கொதிக்க வைத்து, பின்பு ஆற வைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் ஆறு டீஸ்பூன் சர்க்கரையும் அரை டீஸ்பூன் உப்பும் சேர்க்க வேண்டும். அனைத்தையும் நன்கு கலக்கிக் கரையச் செய்தால் ஓ.ஆர்.எஸ் கரைசல் தயார்.ஒ.ஆர்.எஸ். கரைசல் மிதமான நீரிழப்பை மட்டுமே சரி செய்யும். கடுமையான நீரிழப்புக்கு மருத்துவச் சிகிச்சை அவசியம்.

May 06, 2026

கோடை வந்தவுடன் முதியோர்களைத் தாக்க முதலில் வருவது heat Stroke.

உடல் வறட்சி, அரிப்பு, வேனல் கட்டி, அக்கி, நீரிழப்பு, மயக்கம், நீர்ச்சுருக்கு. இவை எல்லாவற்றிலும் இருந்து மொத்தமாக நம்மைக் காப்பாற்றஒரே ஒரு மருந்து இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்? வாங்க... ஒட்டுமொத்தநோய்களுக்கும் கீழ்க்காணும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை மட்டுமே இந்தக்கோடை முழுவதும் சாப்பிட்டால் சகலரோக நிவாரணியாகச் செயல்படும்! 1. குக்கில் பற்பம் அல்லது குக்கில் பற்ப மாத்திரையைப் பாலுடன் தினமும் ஒருவேளை எடுக்க நீர்க்கடுப்பு, உடல் உஷ்ணம், தோல் அரிப்பு வெப்ப அலை தாக்கம் இவற்றிலிருந்து தப்பிக்கலாம் (மருத்துவரின் அறிவுரையின் பேரில் எடுக்கவும்). 2. பாதாம் பிசினைப் பொடித்து நீரில் ஊறவிட்டுப் பாலுடனோ,பழச்சாறுகளுடனோ சேர்த்துக் குடிக்க, மேற்சொன்ன கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்கலாம். 3. சப்ஜா விதைகளை நீரிலிட்டு ஊறவைத்துப் பழச்சாறுகளுடன் குடிக்கலாம். இதனால் உடல் உஷ்ணம் தணியும். 4. சர்க்கரை நோய் இல்லாதவர்கள் நன்னாரி மணப்பாகு தினம் இருவேளை நீர்விட்டுக் குடிக்க மேற்சொன்ன நோய்கள் தீரும். 5. மேலும் வெண்பூசணி லேகியம், சதாவரிலேகியம், சரபுங்க வில்வாதி லேகியம், நன்னாரி லேகியம், மனோரஞ்சித லேகியம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை மருத்துவரின் அறிவுரையின் பேரில் எடுக்கலாம். 6. வாழைத்தண்டு, முள்ளங்கி, பீர்க்கன்காய், வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்துள்ள காய்களைத் தினமும் சாப்பிடலாம். 7. பானகம், பழச்சாறுகள் இளநீர், மோர், நிசி நீர் எனப்படும் பழைய சோற்றுநீர் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன் புரோபயாடிக் உள்ளதால்  உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Apr 29, 2026

இதயத்தைப் பாதுகாக்கும் ஒரு முக்கியக் கருவி ஹோல்டர் மானிட்டர்,

இதயத்தின் துடிப்பு ஒய்வில்லாத ஒன்று என்பது நாம் அறிந்ததே. ஆனால், ஒவ்வொரு மாற்றத்தையும் ஒரு சாதாரண ஈ.சி.ஜி.யினால் பதிவு செய்ய முடியாது, இதற்குக் காரணம் உண்டு. பரிசோதிக்கும் அந்த சில விநாடிகளில் மட்டுமே இதயத்தின் மின்னழுத்த இயங்கலை ஈ.சி.ஜி.யானது பதிவு செய்கிறது. சில நோயாளிகளுக்கு ஏற்படும் துடிப்புக் குறைபாடு, அதிக துடிப்பு, திடீர் மயக்கம், மார்பு வலி, நெஞ்சு படபடப்பு போன்றவை எப்போதும் வரக்கூடியவை அல்ல. எனவே, இவற்றைஈ.சி.ஜி.யினால் துல்லியமாகக் கண்டறிய முடியாது. இப்படி விட்டு விட்டுஏற்படும் நாடித்துடிப்பைக் கண்டுபிடிப்பதற்கு ஹோல்டர் மானிட்டர் (Holter monitor) மிகச்சிறந்த சாதனமாக உள்ளது.ஹோல்டர் மானிட்டர் என்பது சிறிய,கைகளில் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு சாதனம். 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம்வரை தொடர்ந்து ஈ. சி. ஜி. யைப்  பதிவு செய்யும் கருவியும் கூட. நோயாளியின் மார்பில் சில மின்முனைகள் (Electrodes) பொருத்தப்பட்டு, ஒரு சிறிய ரெக்கார்டருடன் இந்த ஹோல்டர் மானிட்டரானது இணைக்கப்படும். ஹோல்டர் கருவி பொருத்தப்பட்டிருக்கும்போதும் நோயாளி தனது வழக்கமான தினசரி வேலைகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கலாம்.

Apr 22, 2026

அறுபது வயது முதியவர், தனியாக இருந்தால்,…

60 வயது முதியவர் போல் இருப்பார்..!!60 வயதுடைய இரண்டு பேர் சந்தித்தால், 30 வயதுடையவர்கள் போல இருப்பார்கள்..!!!60 வயதுடைய மூன்று பேர் ஒன்று சேர்ந்தால்20 வயது இளையவர்களாகத் தெரிகிறார்கள்..!!!!60 வயதுடைய ஆறு பேர் ஒன்று சேர்ந்தால், அவர்கள் பள்ளி செல்லும் குழந்தைகள்அதனால்தான் ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்களை மறக்காமல் தொடர்ந்து சந்தித்து வந்தால்,முதுமையின் அறிகுறிகள் மறைந்துவிடும்.நண்பர்களை மறந்து விடாதீர்கள்..!

Apr 15, 2026

மூத்த குடிமக்கள் வயதானவர்கள் அதிகம் பேசினால் கிண்டல் செய்யப்படுவார்கள்.

வயதானவர்கள் அதிகம் பேசினால் கிண்டல் செய்யப்படுவார்கள், ஆனால் மருத்துவர்கள் அதை ஒரு வரமாகப் பார்க்கிறார்கள் : ஓய்வு பெற்றவர்கள் (மூத்த குடிமக்கள்) அதிகம் பேச வேண்டும்என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், ஏனெனில் தற்போது நினைவாற்றல் இழப்பைத் தடுக்கவழி இல்லை.  அதிகம் பேசுவதுதான் ஒரே வழி.   மூத்த குடிமக்கள் அதிகம் பேசுவதால்குறைந்தது மூன்று நன்மைகள் உள்ளன.பேசுவது மூளையை செயல்படுத்துகிறது, ஏனெனில் மொழியும்எண்ணங்களும்ஒன்றுக்கொன்றுதொடர்புகொள்கின்றன, குறிப்பாகவிரைவாகபேசும்போது, இதுஇயல்பாகவே சிந்தனையை விரைவுபடுத்துகிறது மற்றும் நினைவகத்தை மேம்படுத்துகிறது. பேசாத மூத்த குடிமக்களுக்கு ஞாபக மறதி ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிகமாகப் பேசுவது மன அழுத்தத்தைக் குறைக்கிறது, மனநோயைத் தடுக்கிறது.மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.  பெரும்பாலும் எதையும் பேசாமல் இதயத்தில்எல்லாவற்றையும் வைத்துக்கொள்வது, மூச்சுத் திணறல் மற்றும் அசௌகரியமாக உணர்கிறது,எனவே, பெரியவர்கள் அதிகம் பேசுவதற்கு வாய்ப்பு கொடுப்பது நல்லது.பேச்சு முகத்தின் சுறுசுறுப்பான தசைகளுக்குப் பயிற்சி அளிக்கிறது, தொண்டைக்கு பயிற்சி அளிக்கிறது, நுரையீரலின் திறனை அதிகரிக்கிறது, கண்கள் மற்றும் காதுகளை சேதப்படுத்தும் தலைச்சுற்றல் மற்றும் காது கேளாமை போன்ற மறைந்திருக்கும் ஆபத்துகளைக் குறைக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ஓய்வு பெற்றவர், அதாவது மூத்த குடிமகன், அல்சைமர்நோயைத் தடுப்பதற்கான ஒரே வழி, உங்களால் முடிந்தவரை பலருடன் பேசுவதும்சுறுசுறுப்பாகப் பழகுவதும்தான்.   இதற்கு வேறு பரிகாரம் இல்லை.

Apr 08, 2026

இதய அறுவை சிகிச்சையின் நன்மைகள்.

தடுக்கப்பட்ட கரோனரி தமனிகளைச் சுற்றிப் புதிய பாதையை உருவாக்குவதன் மூலம், ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் இதயத் தசைக்குச் செல்வதை இந்த அறுவை சிகிச்சை உறுதி செய்கிறது.இது இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, அது சீராக இயங்க உதவுகிறது.இதயத்துக்குப் போதுமான ரத்தம் கிடைக்காததால் ஏற்படும் மார்பு வலி, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளை இந்த அறுவை சிகிச்சைத் திறம்பட நீக்குகிறது அல்லது கணிசமாகக் குறைக்கிறது.இது நோயாளியின் அன்றாட வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அதிக சுறுசுறுப்புடன் இருக்க உதவுகிறது.தமனியில் உள்ள அடைப்புகளை நீக்கி, ரத்த ஓட்டத்தை மீட்டெடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க CABG உதவுகிறது.குறிப்பாக, பல தமனிகள் அடைக்கப்பட்டிருக்கும் கடுமையான கரோனரி தமனி நோய் உள்ளவர்களுக்கு இது உயிர் பிழைப்பதற்கான சாத்தியத்தை மேம்படுத்தலாம்.சிகிச்சை அளிக்காவிட்டால் ஏற்படும் கடுமையான சிக்கல்களைத் தவிர்ப்பதன் மூலம், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மூத்த குடிமக்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க வாய்ப்புள்ளது.அறுவை சிகிச்சைக்குப் பிறகு சரியான பராமரிப்பு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பின்பற்றுவதன் மூலம், நோயாளிகள் பல ஆண்டுகளுக்கு அறிகுறிஇல்லாமல் ஒரு சாதாரண, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.சில சந்தர்ப்பங்களில், ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty) போன்றஎதிர்கால நடைமுறைகளைத் தவிர்க்க இதய அறுவை சிகிச்சை உதவக்கூடும்.முக்கியக் குறிப்பு75 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தொடர்பான சிக்கல்கள் மற்றும் மீட்புக் காலம் சற்றே அதிகமாக இருக்கும் என்றாலும், பொதுவாக அறுவை சிகிச்சை செய்யலாமா வேண்டாமா என்ற முடிவானது நோயாளியின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம், அடைப்புகளின் தீவிரம் மற்றும் இதயநோய் நிபுணரின் முழுமையான மதிப்பீட்டின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது.மேம்பட்ட அறுவை சிகிச்சை நுட்பங்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் முந்தைய தீவிரக் கவனிப்பு ஆகியவை மூத்த குடிமக்களுக்குக்கூட அறுவை சிகிச்சையின் பலனை அதிகரிக்கிறது.எப்போதும் உங்கள் இதய அறுவை சிகிச்சை நிபுணர்அல்லதுமருத்துவரிடம்கலந்தாலோசித்து, அபாயங்கள் மற்றும் நன்மைகளை முழுமையாகப் புரிந்துகொண்டு முடிவெடுப்பது மிக முக்கியம்.

Apr 01, 2026

75 வயதிற்கு பிறகும் இதய அறுவை சிகிச்சை செய்யலாம்.

மனிதரின் வயது அதிகரிக்கும்போது, ரத்த நாளங்கள், குறிப்பாக இதயத்துக்குச் செல்லும் கரோனரி ஆர்ட்டரிகள் மெல்ல மெல்லக் கொழுப்பு மற்றும் கால்சியம் அடைப்புகள் மூலம் குறுகத் தொடங்குகின்றன. இதனால் இதயத்தின் தசைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் குறைந்து, மார்பு வலி (Angina) அல்லது இதயக்குழல் அடைப்பு (Myocardial infarction) போன்ற பிரச்னைகள் ஏற்படும்.75 வயதுக்கு மேல் உள்ள நோயாளிகளுக்கு,பல ரத்தக்குழல் அடைப்புகள் காணப்படும்.சில சமயங்களில் ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது ஸ்டென்ட் போட முடியாதவாறு கடினமான அல்லது நீண்ட அடைப்புகள் இருக்கும்.இதயத்தின் வெளிகொணரும் (Pumping) திறன் குறைந்திருக்கும்.இத்தகைய சூழலில், மருந்துகள் மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை போதாது. இதயத்துக்குப் புதிய வழி (Bypass) அமைத்து, ரத்த ஓட்டத்தைச் சீர் செய்ய, இதய அறுவை சிகிச்சை மிகச் சிறந்த தீர்வாகிறது.வயது தடையல்லஇன்றைய நவீன மருத்துவத் தொழில்நுட்பம், சிறந்த இதய அறுவை சிகிச்சை நுட்பங்கள் மற்றும் அவசரச் சிகிச்சைப் பிரிவு (ICU) பராமரிப்பு முன்னேற்றங்கள் காரணமாக, 75 வயதுக்கும் மேல் உள்ளவர்கள்கூட இதய அறுவை சிகிச்சையால் சிறப்பாகக் குணமடைகிறார்கள்.நோயாளியின் உடல்நிலை, இதயத்தின் செயல்திறன் மற்றும் சுற்றியுள்ள உடல்நலக் குறைபாடுகள் ( சிறுநீரகம், நுரையீரல் முதலியவை )போன்றவற்றை மதிப்பீடு செய்த பின்சரியான தீர்மானம் எடுப்பதில் இதில் முக்கியமே. சுருக்கமாக சொன்னால் வயதுஓர் எண் மட்டுமே! இதயத்துக்குப் புதிய உயிர்கொடுக்கும் இதய அறுவை சிகிச்சை, 75 வயதுக்குப் பிறகும் பலருக்கு நம்பிக்கையையும் புதிய வாழ்க்கையையும்தருகிறது.

Mar 25, 2026

கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடினால் அடிக்கடி சிறுநீர் போவது, அதிக தாகம் எடுப்பது. அதிகமாகப் பசிப்பது போன்ற அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்துகொள்ள முடியும். அதுபோல், ரத்த அழுத்தம் அதிகரித்தாலும் சிலருக்குக் கிறுகிறுப்பு, தலைவலிபோன்ற அறிகுறிகள் தோன்றும். ஆனால், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கூடினால் நமக்குஎந்த அறிகுறியும் வெளியில் தெரியாது. நெஞ்சுவலி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்றவற்றுக்காக ரத்தப் பரிசோதனை செய்யும் போதுதான்கொலஸ்ட்ரால் கூடி இருப்பது தெரிய வரும். ஆகவே, 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையும், ஏற்கனவே கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் வருடத்துக்கு இரண்டு முறையும், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற இணை நோய்கள் இருப்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும்கொலஸ்ட்ரால் பரிசோதனைகளை மேற்கொண்டு, கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

Mar 18, 2026

முதுமை என்பது ஒரு பருவமே. முதுமையே ஒரு நோயல்ல.

முதுமை என்பது ஒரு பருவமே. முதுமையே ஒரு நோயல்ல. ஆனால், முதுமையில் பல நோய்கள் வரவாய்ப்புகள்அதிகமாகின்றன.நாம் ஏன் முதுமை அடைகிறோம்? என்றுமே இளமையுடன் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்? ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் அதற்கு முடிவு என்று ஒன்று உண்டு. ஆகையால் இளமைக்கு முதுமை ஒரு முடிவு. உடல் முதுமை அடைவதற்கு என்ன கருணங்கள் என்ஆ பல ஆராய்ச்சிகள் நடைபெற்று ஆனால், இன்னும் விளக்கம் கிடைக்கவில்லை. முதுமை அடைய பல காரணங்களைக் கூறுகிறார்கள். அவற்றில் ஒரு சில  முன்னோர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்திருந்தால் அவர்கள் சந்ததியினரும் அவ்வாறே இருப்பார்கள்.வயது ஆக ஆக உடலில் உள்ள முக்கிய உயிரணுக்கள் குறைகின்றன.திறனற்ற உயிரணுக்கள் உற்பத்தி ஆகுதல்.உயிரணுக்கள் பெருகிவரும் தன்மை குறைவது.கழிவுப் பொருட்கள் உடலிலிருந்து வெளியேற்றப்படாமல் தங்கி விடுதல்.ஃப்ரீ ரேடிகல்ஸ் (Free radicals) என்ற திரவம் உடலில் அதிகம் சேர்ந்து மற்ற திசுக்களை அழித்தல்.உடல் வளர்ச்சிக்குத் தேவையான (Growth hormone ) குறைதல்.நமது மூளைப்பகுதியிலுள்ள பிட்யூட்ரி என்னும் நாளமில்லாச் சுரப்பி Killer hormone எனும் திரவத்தைச் சுரக்கிறது. இந்தத் திரவம், ஒரு பெண்பூப்பெய்தும் பருவத்தில் சுரக்க ஆரம்பிக்கிறது. இத்திரவம் உடலை அழித்துமரணத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் ஒரு பெண் பூப்படையும் வயது தள்ளிப்போனால்அவள் வாழும் வயதும் அதிகரிக்கும் என்ற ஒரு கருத்து உண்டு.தலையிலுள்ள மூளைப்பகுதியில் பீனியல் எனும் சுரப்பி Melatonin எனும் திரவத்தைச்சுரக்கிறது. இளமையைப் பாதுகாக்க இத்திரவம் மிகவும் அவசியம். ஆனால், ஒருவர் 25 வயதை அடையும்போது இத்திரவம் குறைகிறது. ஆகையால் முதுமை அப்போதே தொடங்கஆரம்பித்துவிடுகிறது.இத்தகை தகைய உடல் மாற்றங்கள் காலத்தால் ஏற்படுவது என்றாலும், முதுமை அடைந்தவர்களுக்கெல்லாம் இவை ஏற்படுவதில்லை. சிலருக்குச் சில மாற்றங்களே நிகழும்; மேற்கண்ட மாற்றங்கள் முதுமையில் ஏற்படினும், வாழ்க்கையைப் பக்குவமாக (Balanced life) அமைத்துக்கொண்டால் முதுமையிலும் இன்பம் காணலாம்.இளமை இனிமேல் போகாது.. முதுமை எனக்கு வாராது என்று உற்சாகமாகப் பாடுங்கள்!

1 2 3 4 5 6 7

AD's



More News