அதிகம் சாப்பிடுதல் கூடாது. மிதமான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் பால் குடிக்கக்கூடாது. .இரவு ஏழு முப்பது மணிக்குள் சாப்பிட வேண்டும். 9மணிக்கு இரவு தூங்கிவிட வேண்டும். அதிக நேரம் தொலைபேசி பார்க்க கூடாது. .இரவில் குப்பைகளை வெளியில் கொட்ட கூடாது. .இரவு நேரத்தில் துணி துவைக்க கூடாது.
ஆப்பிள் விதைகள் நச்சுத்தன்மையுள்ளபொருள். மென்று தின்னும் போதோ ,அரைபடும்போதோ நச்சாக மாறுகிறது. ஆப்பிள் ஜூஸ் போடும்போது வடிகட்டப் போவதால், கொட்டையோடு சேர்த்து அரைக்கக்கூடாது. ஒன்றோ இரண்டோ விழுங்கினால் தப்பில்லை.அதிக அளவு பயன்படுத்தும் போது விதைகள் நீக்கிய பிறகே சாப்பிடவோ ஜூஸ் போடவோ ரெசிப்பிக்கோ பயன்படுத்தனும்
காய்கறி சூப்கள், முளைக் கட்டிய பயிர்கள், சோளம், தேனுடன் கூடிய மூலிகை தேநீர், மசாலா சாய், எலுமிச்சை, புதினா இலைகள், உலர் பழங்கள் மற்றும் பருப்புகள், புரோபயாடிக்குகள், தயிர், மோர், பழங்கள்,வேகவைத்த காய்கறிகள், கீரைகள், பூண்டு, மஞ்சள், சுரைக்காய்,போன்றவைகளை சாப்பிடலாம்.
மதுப்பழக்கம்,புகைப்பிடித்தல் ,தொடர்ந்து புண்கள்,அடிக்கடி காய்ச்சல், மற்றும் உடல்நல பாதிப்பு ஏற்படும்.இரவு நேரத்தில் வியர்வை,திடீரென உடல் எடை குறைவது கணையம் வயிறு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அறிகுறியாகும்.தொடர்ச்சியான புண்கள் வாய் அல்லது தொண்டைக்குள் ஆறாத வெள்ளை திட்டுக்கள் வாய்வழி புற்று நோயாக இருக்கலாம்.சிறுநீர் அல்லது மலத்தில் ரத்தம் வெளியேறுதல் சிவப்பு அல்லது கருப்பு நிறத்தில் வெளியேறுதல்.இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம். குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால், பித்த கோளாறுகள் நீங்கும். பாதி வேகவைத்த முட்டையுடன், கேரட் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை சக்தி அதிகரிக்கும். வாரத்திற்கு மூன்று முறை காரட் சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம். கேரட் சாப்பிடுவதால் முகம் பொலிவு பெற முடியும்.
சுக்கு,மல்லி விதை ( தனியா ) ஆகியவற்றுடன், கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சுக்குமல்லி காபி தயாரிக்கலாம். நீங்கள் வழக்கமாகப் பருகும் டீ. காபிக்கு பதிலாக இந்த சுக்குமல்லி காபியை எத்தனை முறை வேண்டுமானாலும் குடிக்கலாம். குறிப்பாக, காலையில் எழுந்து பல் துலக்கிய உடனே, வெந்நீர் அல்லது சுக்கு மல்லி காபியை அருந்தலாம்.
குளிர்காலங்களில் மூக்கடைப்பு ஏற்படுவது சகஜம் இதை விரட்ட எளிமையான வழி இருக்கிறது. உலர்ந்த மஞ்சள் கொம்பு ஒன்றை எடுத்து, அதை அடுப்பில் காட்டி, எரிய விடுங்கள். பின்னர், அதிலுள்ள தீயை அணைத்தால் ஏற்படும் புகையை சுவாசியுங்கள்.இவ்வாறு செய்யும் போது. மூக்கடைப்பு அகலும். அதுமட்டுமின்றி, கிருமிகளை அழிப்பதோடு, மூக்கு, சைனஸ் அறைகள் மற்றும் நுரையீரலைசுத்தமாக வைத்திருக்கவும் உதவும்.மூக்கு முற்றிலும் அடைத்துவிட்டாலும் கவலை வேண்டாம். குறுமிளகு என்று சொல்லக்கூடிய மிளகை ஊசியில் குத்தி, நெருப்பில் காட்டி, பின்னர் அதிலிருந்து எழும் புகையை சுவாசிக்க, மூக்கடைப்பு உடனே சரியாகும்.
அதிகப்படியான முட்டைகளை சாப்பிடுவது அதிக கொழுப்பு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். முட்டைகள் புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரமாக இருந்தாலும், அதிகப்படியான நுகர்வு LDL (கெட்ட) கொழுப்பின் அளவை அதிகரிக்கலாம், சில நபர்களுக்கு, குறிப்பாக தற்போதுள்ள கொழுப்பு அல்லது இதயம் தொடர்பான நிலைமைகள் உள்ளவர்களுக்கு இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். முட்டைகளை அதிகமாக உண்பது, ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு வழிவகுத்தால், சமநிலையற்ற உணவுக்கு வழி வகுக்கும். உண்மையில், அதிக அளவு முட்டைகளை தொடர்ந்து உட்கொள்வது, அதிக புரதச் சுமை காரணமாக முன்பே இருக்கும் சிறுநீரக பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு சிறுநீரகங்களை கஷ்டப்படுத்தலாம். அதே வேளையில், முட்டையின் ஆரோக்கிய நன்மைகள் முக்கியமானது.
தலைமுடி பிரச்சனையை தீர்க்க உதவும்.நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும்.உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும்.இதய நோய் வராமல் தடுக்க உதவும்.கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும்..இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். மார்பக புற்று நோயை தடுக்க உதவும். எலும்புகள் வலுவடைய உதவும்.
பால் - கால்சியம் சத்தின் சிறந்த மூலமான இதில் வைட்டமின் D உள்ளது. ஒரு கப் பாலில் 300 மிகி கால்சியம் உள்ளது. இது உங்களுக்கு தேவையான கால்சியம் சத்தை வழங்குவதோடு தசை மீட்புக்கும் உதவும்.பாதாம் பால் - அதிக கால்சியம் சத்து கொண்ட இது குறைந்த கலோரிகள் மற்றும் தாவரம் அடிப்படையிலான பாலாக அமைகிறது. ஒரு கப் பாதாம் பாலில் 450 மில்லி கிராம் கால்சியம் உள்ளது.