பால் -வாழைப்பழம் கீரை -மிளகு மிளகாய் வற்றல்- கொத்துமல்லி விதை நிலக்கடலை - கருப்பட்டி அவல் - பால், நெய் உளுந்து வடை- தேன்,நெய்,பேயன் வாழைப்பழம் பலாப்பழம் - தேன் சாதம் - துவரம் பருப்பு பொடி, நெய் பச்சை மிளகாய் -பச்சை கொத்துமல்லி வெள்ளரிக்காய் - மிளகு பொடியும் உப்பும்
உருளைக்கிழங்கில் உள்ள மாவுசத்து அடி வயிறு வீங்குவத்தை தடுக்கிறது.இதன் சாறை,எரிக்காயம்,சிராய்ப்புகள்,.போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்க உபயோகிக்கலாம்."இரத்தம் கெட்டுபோதல், மலச்சிக்கல், சிறுநீர் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும்.தசை வீக்கம், வாத நோயை குணமாக்கும்வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு, இதன் சாறு வரப்பிரசாதமாகும்.ரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து இதய நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.முகப்பருக்கள். கரும்புள்ளிகள் ஏற்படுவதை முற்றிலும் தடுத்து முக அழகை கூட்டுகிறது. முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து இளமைத் தோற்றத்தை அதிகரிக்கிறது. தோல் கடினமாக மாறுவதை தடுத்து ஈரப்பத தன்மையுடனும் மிருதுவாகவும் இருக்குமாறு செய்கிறது.இதை அதிகம் சாப்பிடும் நபர்களுக்கு கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பும் ரத்தத்தில் கிடைக்கப் பெற்று உடல்' மற்றும் மனச்சோர்வை போக்கி முளையை மேலும் சுறுசுறுப்படையச் செய்கிறது.
செம்பருத்தி வெறும் மலர் மட்டுமல்ல. பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. சித்த மருத்துவத்தில் செம்பருத்தி பல நோய்களுக்கு மருந்தாகிறது.செம்பருத்தியில் வைட்டமின் சி உள்ளது.செம்பருத்தி தேநீர் அருந்துவது இரத்தஅழுத்தத்தை சமப்படுத்துகிறது.செம்பருத்தி பூ கொழுப்பை குறைக்கிறது.கண் மற்றும் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது. செம்பருத்தி பூ சாப்பிடுவது முடி வளர்ச்சியையும், நோய் எதிர் ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.தோல் புற்றுநோயை தடுப்பதில் செம்பருத்திபூ உதவுகிறது.
ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ளவும்,ரத்த உற்பத்திக்கும் தக்காளி உதவுகிறது.ரத்தத்தை சுத்திகரிக்கும் பணியையும் செய்கிறது.தக்காளி ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் தோல் சம்மந்தமான அனைத்து நோய்களும் குணமாகும். சருமத்தை பளபளப்பாகவும் ஆரோகியமாகவும் வைத்துக்கொள்ள தக்காளி உதவுகிறது.தக்காளி ஜூஸை முகத்தில் தடவி30 நிமிடங்கள் கழித்து சுத்தமான நீரில் கழுவும்போது முகம் பளபளப்பாகவும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைய தொடங்கும்.தினமும் இரண்டு பழுத்த தக்காளி பழங்களை சாப்பிடுவதால் உடல்பருமனை குறைக்கலாம். உடலுக்கு வளத்தையும், பலத்தையும் தரும் ஆற்றல் உடையது.
பேரிச்சம்பழம் தினமும் நான்கு சாப்பிட வேண்டும்முருங்கைக் கீரை வாரம் இரண்டு முறை.வாரம் இரண்டு முறை பீட்ரூட் ஜூஸ்.சுண்டைக்காய் வாரம் இரண்டு முறை.முளைகட்டிய சுண்டல்/பச்சைபயிறு - வாரம் நாலு முறை.மாதுளை தினமும் ஒரு பழம்.ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை தினமும் நான்கு.பீர்க்கங்காய் வாரம் இரண்டு முறைஇப்படி சாப்பிடுவதால் பெண்களின் உடல்நலம் ஆரோக்கியமாகும்.முகம் மிகவும் அழகாக மாறும்.
இதய நோய் மற்றும் பக்க வாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. கெட்ட கொழுப்புகளை கரைத்துவிடும்.குறை பிரசவத்தை தவிர்க்கலாம்.தாய்ப்பாலை அதிகரிக்கச் செய்கிறது.குழந்தைகளுக்கு ஆஸ்துமா எற்படும் வாய்ப்பு குறைகிறது. எலும்பு தேய்வு,சொரி, சிரங்கு சரி செய்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப் படுத்துகிறது. புற்று நோய் வராமல் நடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸ் உடன் சீரகம் கலந்து பருகி வந்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். மோருடன் சீரகம், இஞ்சி. சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாய்வுத் தொல்லை நீங்கும்.ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
வாழைப்பழத்தில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் ரத்தச் சோகையை நீக்கி, ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.உடலுக்கு ஆற்றலையும், சுறுசுறுப்பையும் உடனடியாகக் கொடுக்கும்.தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்னைகள் சரியாகும்.இதய ரத்தக்குழாய் பாதிப்பு மற்றும் பக்கவாதம் எற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.வாழைப்பழத்தில் உள்ள மக்னீசியம் எலும்புகளை உறுதியாக்கும்.
நெஞ்சு சளியை கரைத்து,வறட்டு இருமலை நீக்கும்.நுரையீரலை சுத்தப்படுத்தும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது சுக்குப் பால்.தேவையானப் பொருட்கள் - சுக்கு,மிளகு,அரிசி, திப்பிலி,சித்தரத்தை,அதிமதுரம்,நறுக்கு மூலம், பச்சரிசி,உளுந்து, ஏலக்காய் -2செய்முறை-தேவையானப் பொருட்கள் அனைத்தையும், தலா1 ஸ்பூன் எடுத்து மிக்ஸியில் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரம் வைத்து தண்ணிர் ஊற்றி பனை வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும். இதனுடன் அரைத்த பொடியை கலந்து கிளறவும். வெந்தவுடன் 2 கப் தேங்காய் பால் சேர்த்து இறக்கவும். இறுதியாக தேங்காய் துருவல் கலந்து பருகலாம்.
உருளைக் கிழங்கு அதிக வெளிச்சம் படும் இடத்தில் வைக்கப் பட்டால் பச்சை நிற திட்டுக்கள் உண்டாகும்.நாள் பட்ட கிழங்கு முளை விட்டிருக்கும் அதை அப்படியே சாப்பிட்டால் அதிலுள்ள நச்சுத் தன்மை தலைவலி,வயிற்று உபாதையை ஏற்படுத்தும்.முளைத்த பகுதி,பச்சை நிற பகுதி வெட்டி விட்டுப் பயன்படுத்தலாம்.