25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நலம் வாழ

Aug 07, 2026

சளி மற்றும் ஜலதோஷம்.

பெரும்பாலான சளி மற்றும் ஜலதோஷம் வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. பொதுவாக 7–10 நாட்களில் தானாகவே குணமாகிவிடும். சத்தான உணவு, போதிய ஓய்வு மற்றும் அதிகளவு தண்ணீர் குடிப்பது குழந்தை விரைவில் குணமடைய உதவும்.

Aug 04, 2026

சீரகத் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.

தினமும் அளவோடு சீரகத் தண்ணீர் குடிப்பது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கலாம்.செரிமானம் சீராக செயல்பட உதவும். வயிற்று உப்புசம் மற்றும் அஜீரணத்தை குறைக்கலாம். உடலின் நீர்ச்சத்தை பராமரிக்க உதவும். வளர்சிதை மாற்றத்தை (Metabolism) மேம்படுத்துவதன் மூலம் எடை மேலாண்மைக்கு துணையாக இருக்கலாம். ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கலாம். குறிப்பு: சிகரெட் நச்சுகளை முழுமையாக வெளியேற்றும் அல்லது மனஅழுத்தத்தை குணப்படுத்தும் என்ற கூற்றுக்கு போதுமான அறிவியல் ஆதாரம் இல்லை.

Aug 03, 2026

இயற்கை மருத்துவம் & உடல்நலம்.

வெந்தய தண்ணீர்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை இரவில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ஜீரணம் சீராகும். இன்சுலின் செயல்பாட்டை அதிகரித்து இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்.கீழாநெல்லி (தோல் நோய்): கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, 15 நிமிடங்கள் ஊறிக் குளித்தால் தோல் நோய்கள் குணமாகும்.கொய்யா பழம்: தினசரி ஒரு கொய்யா பழம் சாப்பிடுவது வைட்டமின் சி தேவையைப் பூர்த்தி செய்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.சூயிங்கம் மெல்வதன் நன்மை: தினமும் சூயிங்கம் மெல்வதால் மூளையின் ஹிப்போகாம்பஸ் பகுதியில் இரத்த ஓட்டமும் ஆக்சிஜனும் அதிகரித்து நினைவாற்றல் மேம்படும்.இஞ்சி பால் நன்மைகள்: நுரையீரல் சுத்தமாகும், சளி மற்றும் வாயுத் தொல்லை நீங்கும், தேவையில்லாத கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும். மாரடைப்பு தடுக்கும் சக்தி மற்றும் பெண்களுக்கு சினைப்பை புற்றுநோய்க் கட்டிகளை நீக்கும் தன்மை இதற்கு உண்டு.

Jul 29, 2026

குளிக்கும் நீரில் இவற்றை சேர்த்தால் என்ன பலன்?

சிலர் பாரம்பரிய நம்பிக்கைகளின் அடிப்படையில் குளிக்கும் நீரில் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்துகின்றனர்.கல் உப்பு – எதிர்மறை ஆற்றல் குறையும் என்ற நம்பிக்கை. ரோஸ் வாட்டர் – புத்துணர்ச்சி மற்றும் மன அமைதி தரும். மஞ்சள் – சரும சுத்தத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடும். கிராம்பு – கண் திருஷ்டி நீங்கும் என்பது பாரம்பரிய நம்பிக்கை. கற்பூரம் – நறுமணம் தருவதுடன் புத்துணர்ச்சியையும் அளிக்கும். குறிப்பு: மேற்கண்டவை பாரம்பரிய நம்பிக்கைகள். மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டவை அல்ல.

Jul 28, 2026

பீட்ரூட் சாறு குடிப்பதால் என்ன நன்மை?.

பீட்ரூட் சாற்றில் நைட்ரேட், இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால் இதய ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும்.ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவலாம். ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும். உடலுக்கு தேவையான சக்தியை அதிகரிக்க உதவுகிறது.இதய நலனை பாதுகாக்கும் ஊட்டச்சத்துகளை வழங்குகிறது.குறிப்பு: உயர் ரத்த அழுத்தம் அல்லது பிற நோய்களுக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை நிறுத்தாமல், மருத்துவ ஆலோசனையுடன் மட்டுமே உணவுமுறையில் மாற்றங்களை மேற்கொள்ளுங்கள்.

Jul 24, 2026

கருப்பு எள் புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுமா?

கருப்பு எள்ளில் உள்ள Sesamin, ஆன்டி-ஆக்சிடன்ட்கள், ஒமேகா-3, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. சில ஆய்வுகளின்படி, இது புற்றுநோய் செல்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கவும், குறிப்பாக மார்பக, பெருங்குடல், கல்லீரல் புற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கவும் உதவக்கூடும். மேலும், செரிமானம், கல்லீரல் ஆரோக்கியம், முடி வளர்ச்சி மற்றும் உடல்நலத்திற்கும் கருப்பு எள் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இருப்பினும், இது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக அல்ல; சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

Jul 22, 2026

காய்ச்சல் இருமல் வந்தால்….

காய்ச்சல்,இருமல் வந்தால்வேப்பமரத்து தோல் முருங்கை மரத்து தோல்50 கிராம் விதம் எடுக்க வேண்டும்.தோலை இடிச்சு வச்சுக்கணும்.சுக்கு, சீரகம்,மிளகு, பட்டை, திப்பிலி, கருஞ்சீரகம், சேர்த்து நல்லா இடிச்சு,ஒரு லிட்டர் தண்ணீரில் அரை லிட்டர் ஆகும் வரை சேர்த்து கொதிக்க வைக்கவும். வெது வெது சூடோட சாப்பிட உடன் நிவாரணம்.

Jul 21, 2026

கோடையில் தினமும் சாப்பிட வேண்டிய குளிர்ச்சி தரும் உணவுகள்!

ராகி கூழ் - உடல் சூட்டை வேகமாக குறைத்து, நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும். கம்பு கூழ் - உடலை உள்ளிருந்து குளிர வைக்கும், சோர்வை குறைக்கும். பழைய சோறு - குடல் ஆரோக்கியம் ஆதரிக்கும், உடல் குளிர்ச்சி தரும். நீர்மோர் - நீர்மோர் நீர்ச்சத்தை சீராக்கும், ஜீரணத்தை ஆதரிக்கும். தேங்காய் பால் - ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது உடல் ஊட்டச்சத்து ஆதரிக்கும். பானகம் - உடனடி எனர்ஜி தரும், ஆனால் அளவாக எடுத்தால் மட்டுமே நல்லது.

Jul 17, 2026

இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்.

வாழைப்பழம், ஆப்பிள், கிவி, பூசணி, நெல்லிக்காய், செர்ரி போன்றவற்றை இரவில் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இவை உடலுக்குப் புத்துணர்ச்சி தருவதால் இரவு தூக்கம் பாதிக்கப்படலாம்.ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகளால் புகைபிடிக்காத பெண்களுக்குக்கூட நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல். உணவுகள் காரணமல்ல, அவற்றை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் வீரியமிக்க பூச்சிக்கொல்லிகளே காரணம்.

Jul 14, 2026

இரவில் செல்போன் பார்ப்பதால்........

இரவு நேரத்தில் செல்போன் பார்ப்பதால், திரையில் இருந்து வெளிவரும் நீலநிற ஒளி கண்களுக்கு அதிக அழுத்தத்தை தரும். மேலும் கண் வறட்சி, மங்கலான பார்வை ஏற்படவும் வாய்ப்புள்ளது.இந்த ஒளி தூக்க ஹார்மோனான மெலடோனினை குறைத்து தூக்கத்தை பாதிக்கும்.இந்த பழக்கம் பல நாட்கள் தொடர்ந்தால் தூக்கமின்மை, கவனக்குறைவு,உடல் எடை அதிகரித்தல், காலையில் எழுந்தாலும் மீண்டும் சோர்வு, மன அழுத்தம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 51 52

AD's



More News