25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ரத்தச்சோகையை நீக்கும் நூல்கோல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரத்தச்சோகையை நீக்கும் நூல்கோல்.

நூக்கல் காயில் வைட்டமின்கள் A, E, C, போன்றவைகளும் மற்றும், மாங்கனீசு,பீட்டா,கரோட்டீன்மாவுச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் பி மற்றும் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்களும். நிறைந்துள்ளன. குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட காய்கறியான இது உடலின் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதுடன் அதிக எடையைக் குறைக்கவும் உதவுகிறது

நூல்கோலில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்க உதவும். ரத்தச் சிவப்பு அணுக்களைப் பெருக்கும். ரத்தச்சோகையை நீக்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் நூல்கோல் நல்லது.ரத்தத்தில் உப்புச்சத்து அதிகம் உள்ளவர்களுக்கு மட்டும் நூல்கோல் வேண்டாம். தவிர்த்து விடுங்கள்.

இதிலுள்ள பொட்டாசியம் ஒரு வாசோடைலேட்டராக செயல்பட்டு திடீரென இரத்த அழுத்த உயர்வதைக் குறைக்கிறது. தமனிகள் மற்றும் இரத்த நாளங்களில் உள்ள பதற்றத்தை குறைத்து போதுமான இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதன் மூலம் உடலின் முக்கிய உறுப்புகளைப் பாதுகாக்க உதவுகிறது.

பொட்டாசியத்துடன் நூக்கலில் இரும்புச் சத்தும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதால் இது  இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகையை தடுக்க அவசியமான இரத்த சிவப்பணுக்களை (RBC) அதிகரிக்க உதவுகிறது. இதனால் உண்டாகும் பலவீனம், சோர்வு, தலைவலி, வயிற்று கோளாறுகள் போன்றவற்றைத் தடுக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News