நிகழும் மங்களகரமான பராபவ வருடம் ஆவணி மாதம் 28ம் தேதி 14.09.2026திங்கள்கிழமை ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதீச்வர அனந்த ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள் அவர்களின் பரமானுக்ரஹத்துடன் விநாயகர் சதுர்த்தி பூஜை கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ளது.நிகழ்ச்சி நிரல் காலை 6.00 மணிஅனுக்ஞை, சங்கல்பம், விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாசனம். கணபதி ஹோமம்.காலை 7.15 மணிபூர்ணாஹுதி, தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம்காலை 08.35 மணிதீபாராதனை ப்ரசாதம்.இப்படிக்கு "குருபக்தமணி"பி.ஆர். வெங்கட்ராம ராஜாசேர்மன் - ராம்கோ குரூப்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள சாத்தங்குடியில் 1936ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி பிறந்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ் இளங்கலைப் பட்டமும், மதுரை தியாகராஜர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். கல்லூரிக் காலத்திலேயே நாடகங்களை இயக்கியும் நடித்தும் தனது கலைத் திறமையை வெளிப்படுத்தினார்.பின்னர் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மாணவராக இருந்த காலத்திலிருந்தே மேடைகளில் பேசி வந்த அவர், பேராசிரியராகப் பணியாற்றிய காலத்திலும் தனது பேச்சாற்றலைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டார்.1961ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியே அவரது முதல் மேடைப் பேச்சாக அமைந்தது. அதன் பின்னர் பட்டிமன்ற நடுவர்களாக இருந்த குன்றக்குடி அடிகளார், ஜோதிமுத்து உள்ளிட்டோரின் ஊக்கமும், அவரது தனித்துவமான நகைச்சுவை கலந்த பேச்சாற்றலும் அவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கின.தமிழை வெறும் பாடமாக அல்லாமல், மக்களின் வாழ்க்கையோடு இணைந்த மொழியாகக் கொண்டு சென்றவர் சாலமன் பாப்பையா. அவரது பேச்சும் எழுத்தும் தமிழ் மீது கொண்ட ஆழமான பற்றையும், தமிழை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற அக்கறையையும் வெளிப்படுத்தின.இவரது சேவையை பாராட்டி 2000 ம் ஆண்டு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருதும், 2021ல் மத்திய அரசு 'பத்ம ஸ்ரீ' விருதும் வழங்கி கவுரவித்தன. அண்ணாமலை பல்கலை 2010ல் 'முத்தமிழ் பேரறிஞர் ' விருது வழங்கியது.கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், ஜாதி, மத எல்லைகளைக் கடந்து அனைவராலும் தமிழறிஞராக மதிக்கப்பட்டவர் சாலமன் பாப்பையா. தன்னை ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல், தமிழ் ஆளுமையாகவே வாழ வேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்தது. பாரதியார், பாரதிதாசன் போன்றோரின் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது. பாரதியாரின் நினைவு நாளே தனது நினைவு நாளாகவும் அமையும் என்று அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.“சாகும்போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும்; என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்” என்ற அறிஞரின் வரிகளுக்கு ஏற்ப, தன் இறுதி தருணங்களிலும் தமிழ் தன்னுடன் இருக்க வேண்டும் என்பதே சாலமன் பாப்பையாவின் விருப்பமாக இருந்தது. அதற்குச் சான்றாக, நேற்று அவரது உடல் மீது அவர் எழுதிய திருக்குறள் உரை வைக்கப்பட்டிருந்தது. அவரது விருப்பத்தை மதித்து, அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.தமிழ் பேசிய குரல் ஓய்ந்தது.பட்டிமன்ற மேடையின் பேரொளி மறைந்தது.சாலமன் பாப்பையா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.22/02/1936 - 11/09/2026
கேசவ சேவா கேந்திரம் நாசே தொண்டு நிறுவனம் மற்றும் பழையபாளையம் ராஜூக்கள் மகுமை பொதுப்பண்டு இணைந்து நடத்தும் "நாசே"கிராமப்புற இலவச தொழிற்பயிற்சி திட்டம்இதற்கான விண்ணப்பம் கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் 04.09.2026, வெள்ளிக்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகிறது.இந்த தொழிற்பயிற்சி வகுப்புகள் மூன்று மாத காலம் இலவசமாக பயிற்சி அளித்து சான்றிதழ் வழங்கப்படுகிறது.இந்த தொழிற்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற கல்வி தகுதி... வயது வரம்பு... கட்டணம் ஏதும் இல்லை....பயிற்சி முகாம் நடைபெறும் இடம் - N.R.K. மண்டபம். A.K.D.R. ஆண்கள் பள்ளி அருகில், பழையபாளையம்.இராஜபாளையம் - 626117. விருதுநகர் மாவட்டம்.பயிற்சி நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை/பயனாளிகள் வசதிகேற்ப ஏதேனும் 1 மணி நேரம் பயிற்சி பெறலாம். ஒரு நபர் ஒன்றுருக்கு மேற்பட்ட பயிற்சி பெறலாம். அனைவரும் பயிற்சி பெற்று சுயதொழில் தொடங்கலாம்.தொடர்புக்கு : 98420 95550/ 99435 27521 / 96554 95550 / 88075 41551.
இராஜபாளையம் தர்மாபுரம் ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் கோவில் நண்பர்கள் நற்பணி மன்றம்,அனைத்து சமுதாய பெரியோர்களும், பொது மக்களுடன் இணைந்து நடத்தும் 39-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா நிகழ்ச்சிநிரல் கால அட்டவணைநாள் : 07-09-2026 திங்கட்கிழமை முதல் 14-09-2026 திங்கட்கிழமை வரைவிழாவை துவக்கி வைப்பவர்: தவத்திரு. திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் அவர்கள், 24-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசீக பராமாச்சாரிய சுவாமிகள் ஆசி வழங்க உள்ளார்கள்.தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஆதினங்கள், ஜீயர் சுவாமிகள், மடாதிபதிகள், சாது சன்னியாசிகள்.ஆன்மீக வாதிகள். விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆசிகள் வழங்க உள்ளார்கள். நாள் : ஆவணி மாதம் 21-ம் நாள் (07-09-2026) திங்கட்கிழமைநேரம் : மாலை 6-00 மணிக்கு மேல் 7-00 மணிக்குள்மத நல்லிணக்க திருவிழாவாகவும், மேளதான வாத்தியங்களுடன் கோ பூஜை செய்தும் விழா துவங்க உள்ளோம்.சென்னை சிவகலாலயம் மாணவர்கள் இணைந்து வழங்கும் பரதநாட்டிய குழுவினர்களுடன் பரத நாட்டியம். நடனம்.நர்த்தனம் திரு. Dr. S. சிவக்குமார் - Dr. S. சைலஜா. நாள் : ஆவணி மாதம் 22-ம் நாள் (08-09-2026) செவ்வாய்க்கிழமைநேரம் : மாலை 6-00 மணிக்கு மேல் 9-00 மணிக்குள்திருமுருக வள்ளல் வாரியார் சுவாமிகளின் மாணவி, சன்டிவி தெய்வ தரிசனம் புகழ், "சொல்லரசி"வாகீச கலாநிதி கலைமாமணி" திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்களின் ஆன்மீக சொற்பொழிவு நாள் : ஆவணி மாதம் 23-ம் நாள் (09-09-2026) புதன்கிழமைநேரம்: மாலை 6-00 மணிக்கு மேல் 9-00 மணிக்குள்திருமதி. சிவஸ்ரீ தேஜஸ்வி சூர்யா அவர்கள் குழுவினர்களுடன் நாம சங்கீர்த்தனம் நடைபெறும்.ஆனந்த பவன் - நிகழ்ச்சி & அன்னதான உபயதாரர். .நாள் : ஆவணி மாதம் 24-ம் நாள் (10-09-2026) வியாழக்கிழமைநேரம்: மாலை 6-00 மணிக்கு மேல் 9-00 மணிக்குள்திருமதி. சவிதா ஸ்ரீராம் அவர்கள் குழுவினர்களுடன் தெய்வீக பக்திப் பாடல்கள் நடைபெறும். நாள் : ஆவணி மாதம் 25-ம் நாள் (11-09-2026) வெள்ளிக்கிழமைநேரம் : மாலை 6-00 மணிக்கு மேல் 9-00 மணிக்குள்திரு. இறை அருள் செல்வன் H. சூரியநாராயணன்அவர்கள் குழுவினர்களுடன் பக்தி பாமாலை நடைபெறும். நாள்: ஆவணி மாதம் 26-ம் நாள் (12-09-2026) சனிக்கிழமைநேரம்: மாலை 6-00 மணிக்கு மேல் 9-00 மணிக்குள்தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மடாதிபதிகள். ஆதினங்கள். ஜீயர் சுவாமிகள். சாது சன்னியாசிகள் வருகை தருகிறார்கள். குருமகா சன்னிதானங்கள் வரும் நேரமும், தேதியும் பக்தர்களுக்கு மறு அழைப்பிதழில் தெரிவிக்கப்படும். நாள் : ஆவணி மாதம் 27-ம் நாள் (13-09-2026) ஞாயிற்றுக்கிழமைநேரம் : காலை 6-00 மணிக்கு மேல் மாலை 6-00 மணிக்குள்திருவாசகம் முற்றோதல் மாபெருந்திருவிழாகயிலைப் புனிதர் திருவாசகச் சித்தர் சிவதிரு. சிவ தாமோதரன் ஐயா(சதாசிவ பரபிரம்ம சிவனடியார் திருக்கூட்டம், திருக்கழுகுன்றம்) அவர்கள் நடத்துகின்றார்கள் நாள் : ஆவணி மாதம் 27-ம் நாள் (13-09-2026) ஞாயிற்றுக்கிழமை நேரம்: மாலை 7-00 மணிக்கு மேல் 9-00 மணிக்குள்கோவிந்தபுரம் ஸ்ரீ முரளிதரதாஸ் குழுவினரின் நாமபிரச்சார் மற்றும்அவர்களுடன் இணைந்து திருபுவனம் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ ஸ்வாமி பஜனை குழுவினரின் திவ்யநாமம் நடைபெறும். நாள் : ஆவணி மாதம் 28-ம் நாள் (14-09-2026) திங்கட்கிழமைநேரம் : காலை 5-00 மணிக்கு மேல் 8-00 மணிக்குள்திரு. ஈங்கோய்மலை ஸ்ரீ லலிதா ஸமாஜம் ஸ்ரீமாதாஜீ அவர்களின் நினைவாகவும் மற்றும் அம்பாஜிகள் ஆசியுடனும் உலக நன்மை வேண்டி கணபதி ஹோமம் & லட்சார்ச்சனை , அபிஷேக ஆராதனை நடத்த உள்ளார்கள். நாள் : ஆவணி மாதம் 28-ம் நாள் (14-09-2026) திங்கட்கிழமை நேரம் : மாலை 5-00 மணிக்கு மேல் கொடியசைத்து விழாவினை தொடக்கி வைப்பவர்: மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசீக ஸ்ரீ ஞானசம்மந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள்.
ராஜபாளையம் ரோட்டரி கிளப்,ஆனந்தாஸ்எம்.வி.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை,நாற்று எழுத்தறிவு அமைப்புபெருமையுடன் வழங்குகிறதுஉலக யானைகள் தினக் கொண்டாட்டம்: வரைவதில் ஆனந்தம் 2026பரிசு வழங்கும் விழாதலைமை விருந்தினர்கண்மணி ராசா(கவிஞர் மற்றும் எழுத்தாளர்)யானை மலை மலையாக நடப்பது போல்...உலக யானை தின ஓவியப் போட்டி சம்பந்தமாகஇராஜபாளையத்தின் பள்ளிகளுக்கு யானையாய் நடந்தோம்.சில பள்ளிகள் அன்பாய், பேரன்பாய் வரவேற்றன.சில பள்ளிகள் யோசித்தன.ஆனாலும் எடுத்த செயலை இனிதாய் நிறைவு செய்தோம்.ஆகஸ்ட் மாதம் அரசு நடத்தும் கலைவிழாக்கள்,விளையாட்டுப் போட்டிகள்.ஆனாலும் மாணவர்கள் உற்சாகமாய் பங்கேற்றனர்.அனைவர்க்கும் யானை தின வாழ்த்துகள்.
சிறப்பு இதய பரிசோதனை முகாம். SEPTEMBER 1 ST TO 30 THகார்டியாக்- முழுமையான இதயப் பரிசோதனை - ₹1,500இசிஜி, எக்கோ-சிடி, கால்சியம் ஸ்கோர், இருதயநோய் நிபுணர் ஆலோசனை அடிப்படை இதயப் பரிசோதனை - ₹750இசிஜி எக்கோ-இருதய மருத்துவர் ஆலோசனை கரோனரி ஆஞ்சியோகிராபி - ₹ 5,000இந்த உலக இதய தினத்தில், உங்கள் இதயத்திற்கு ஒரு பரிசு கொடுங்கள்10 நோயாளிகளுக்கு இலவச ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைசித்ரா மருத்துவமனை626, தென்காசி ரோடு, இராஜபாளையம்-626 117மாரடைப்பு மற்றும் பக்கவாதம் சிகிச்சைக்குஅவசர சிகிச்சைக்கு 74 108 84 108.
73 ஆண்டுகளாக மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பெற்ற இராஜபாளையம் ஆனந்தாஸ் நிறுவனம், தனது வெற்றிப் பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.கோயம்புத்தூரைத் தொடர்ந்து, நாளை முதல் சிங்கப்பூரிலும் ஆனந்தாஸ் நிறுவனத்தின் புதிய கிளை தனது சேவையைத் தொடங்குகிறது. இராஜபாளையத்தின் பாரம்பரியத்தையும், தரத்தையும் உலகளவில் கொண்டு செல்லும் இந்தப் புதிய முயற்சி மேலும் பல கிளைகளாக வளர்ந்து, மிகப்பெரிய வெற்றியைப் பெற ராஜபாளையம் டைம்ஸ் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.ஆனந்தாஸின் வெற்றிப் பயணம் உலகம் முழுவதும் தொடரட்டும்!
CHINMAYA VIDYALAYA , P.A.C. RAMASAMY RAJA MATRICULATION HIGHER SECONDARY SCHOOL AND SRIMATHI P.A.C.R. SETHURAMAMMAL NURSERY & PRIMARY SCHOOL. RAJAPALAYAMThe Managing Trustee, Correspondent.Members of Managing Committee, Principal. Headmistress, Staff and Students57th SPORTS MEET School YearCelebrating Excellence, Discipline & SportsmanshipDATE : Tuesday, 25th August 2026TIME : 8.00 a.m.VENUE : School Campus, Ilanthope. Programme 25.08.2026 / 8.00 a.m.ON THE FIELDArrival of the Chief GuestFlag HoistingMarch PastLighting the Olympic TorchOath TakingDeclaring the Sports Meet OpenDemonstration of Physical ExercisesSports EventsSports Events for the GuestsON THE STAGEPrayerWelcome Address by the PrincipalAnnual Sports Report by the Physical DirectorAddress by the Chief GuestDistribution of PrizesVote of Thanks by the School Pupil LeaderNational Anthem
SMT. SAKKANIAMMA DHARMARAJA NURSERY & PRIMARY SCHOOL RAJAPALAIYAM. SPORTS DAY CELEBRATIONOn Saturday, 22nd August 2026 at 8.30 A.MVenue: A.K.D. DHARMARAJA WOMEN'S COLLEGEShenbaga Thoppu Road, Rajapalaiyam.Thiru. N.D.VISWANATHSmt. S. RADHIKAThiru. A.G. BHAGAVATH SINGHThiru. M. RAM KUMARSchool Committee MembersDeclare the meet open & Preside over the functionSri. A.K.D. KRISHNAMA RAJUCorrespondentSmt. Sakkaniamma DharmarajaNursery & Primary School.
நூற்றாண்டு கண்ட இராஜபாளையத்தின் நூற்றுக்கு மேற்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் விழா(REWA வின் 49வது நிகழ்ச்சி)நாள் : 15-08-2026 சனிக்கிழமைநேரம் : காலை 10-00 மணிஇடம் :மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம்சிறப்புரை :Dr.V. வெங்கட்ராமன் அவர்கள்முன்னாள் முதல்வர். இராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி.விழா பேருரை :Dr.V. ரகுபதி அவர்கள்தலைவர், காந்திநிகேதன் ஆஸ்ரமம், T. கல்லுப்பட்டி.சுதந்திரப் போராட்டத்தில் இராஜபாளையத்தின் பங்கு ஆர்பரியதாக இருந்திருக்கிறது. பிரிட்டீஷாரே பயப்படும் அளவிற்கு தீவிரமாக அனைத்து போராட்டங்களும் 1905 வங்காள பிரிவினை முதல் 1947 சுதந்திரம் கிடைக்கும் வரை சுதேசி இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், அன்னியநாட்டு துணிகளை புறக்கணிப்பு, தீண்டாமை ஒழிப்பு, கதர் இயக்கம், மது எதிர்ப்பு பிரச்சாரம், சட்டமறுப்பு இயக்கம், உப்பு சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு, போன்ற போராட்டங்கள் நடத்தி, பிரிட்டீஷ் காவல்துறை இரண்டுமுறை துப்பாக்கி சூடு நடத்தும் அளவிற்கு சாதி, மத, அரசியல் சாயம் சிறிதும் இல்லாமல் பூர்ண சுவராஜ் என்ற இலக்கை நோக்கி நூற்றுக்கணக்கான தியாகிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர்.பிரிட்டீஷாரே நமது இராஜபாளையத்தை பயங்கர நகரம் (Dangerous Town) என்று பதிவிடும் அளவிற்கு ஒற்றுமையாக அனைவரும் போராடி உள்ளனர்.