25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


நலம் வாழ

Jul 14, 2025

மஞ்சள் காமாலை.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளை முள்ளங்கி அருமருந்து.அதை சாலட் ஆகவும் தயிர்பச்சடி ஜூஸ் என குடிக்க மஞ்சள் காமாலையிலிருந்து விடுபட்டு உடலும் ஆரோக்கியம் பெறும்.

Jul 11, 2025

எளிதில் நோய் தெற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ள ,கோடை வெயிலின் தாக்கம் இனி நாளுக்கு நாள் அதிகரிக்கும் .

 என்னதான் வீட்டுல ஏசி பிரிட்ஜ் எல்லாம் வச்சி இருந்தாலும் ஒரு ஓரமா மண் பானையில் தண்ணி புடிச்சி வச்சி குடிங்க!அம்மை போன்ற உடல் உஷ்ண  நேய்களை எதிர்கொள்ள மண் பானை தண்ணீரில் சிறிது வேம்பு கொழுந்து இலைகளை பறித்து போட்டு குடியுங்கள்.பப்பாளி இலைகளை அரைத்து கை,கால் குடைச்சலுக்கு பற்று போட்டு, வெந்நீரில் கழுவி வர வலி குறையும், 2.மாம்பழ துண்டுடன் தேன், குங்குமப்பூ, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், பால் ஆகியவை சேர்த்து சாப்பிட்டு வர உடல் பலம் பெறும்

Jul 08, 2025

தாய்ப்பால் நன்றாக சுரக்க....

 பப்பாளிப் பழத்தைத் தேனில் தொட்டு உண்டால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். இதைத் தாய்ப்பால் கொடுப்பவர்கள் தினமும் உண்ணலாம் குழந்தை பெற்ற தாய்மார்கள் தினம் சிறிது வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டுவர, பால் அதிகம் சுரக்கும் குழந்தையும் கொழு கொழுவென  ஆகும். அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்தால் தாய்பால் பெருகும்.

Jul 05, 2025

உடல் வெப்பத்தைத் தணிக்கும் கற்றாழை ஜூஸ்.

கற்றாழை ஜூஸ் குடித்தால் உடல் வெப்பம் தணியும். நீர்க்கடுப்பு, நீர்தாரை எரிச்சல் நீங்கும் .மாதவிடாய் கோளாறுகள், உடல் காந்தல் போன்ற பாதிப்புகள் குறைய உதவும். கண்களில் எரிச்சலைப் போக்கும் .வயிற்றுப்புண் ஆற உதவும், வயிற்றின் எரிச்சலை சரிசெய்யும். வெயிலில் இருந்தும் மூல நோயில் இருந்தும் நம்மைக் காக்கும் மலச்சிக்கல் நீங்க உதவும்.

Jul 04, 2025

துவரம்பருப்பு துவையல்.

துவரம்பருப்பை லேசாக வறுத்து, துவையலாக செய்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால், செரிமான சக்தி அதிகரித்து உடலுக்கு பலம் கொடுக்கும். சிறுநீரகக் கற்களை வெளியேற்றுவதுடன் , சிறுநீரகப் பாதைத் தொற்றுகளை நீக்கும் வல்லமை, துவரைக்கு உண்டு. துவரம்பருப்பிலுள்ள நார்ச்சத்து மலத்தை இளக்குவதுடன் ரத்தத்தில் கொழுப்புச்சத்து அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

Jul 02, 2025

இரத்தசோகை பிரச்சினை சரியாக....

உடலில் பித்தம் அதிகம் உள்ளவர்கள், தினமும் 2-3 அத்திப்பழத்தை சாப்பிட்டுவந்தால் கடும் பித்தம் வியர்வை வழியாக வெளியாகிவிடும். இரவில் 3-5 பழம் வரை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் தண்ணீரை குடித்துவிட்டு, இப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இரத்தசோகை பிரச்சினை சரியாகும்கருப்பு காய்ந்த திராட்சை மூன்றை இரவே ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் பழத்தை சாப்பிட்டு தண்ணீரை குடித்து வந்தால் ரத்தம் உற்பத்தியாகும்.

Jul 01, 2025

கால்சியம் சத்துக்கள் நிறைந்த உணவுகள்.

1.பால்2. தயிர்3.சீஸ் 4. பன்னீர்5.பாதாம்6.சர்க்கரைவள்ளி கிழங்கு7. சோயா பீன்ஸ்8.வெண்டக்காய்9. சியா விதைகள்10. காய்ந்த அத்திப்பழம்11.ஆரஞ்சு12.சுண்டல்13. எள் விதைகள்14. சோயா பால்15.கிவி 16. கொய்யாப்பழம்17. அன்னாசிப்பழம்18. மத்தி மீன்கள்19.கீரைகள்20. ஓட்ஸ்.

Jun 30, 2025

தொண்டை வலியும், சளியும் குறைய இஞ்சி-மல்லி கஷாயம்.

சளி மற்றும் இருமல் ஏற்பட்டால், ஒரு கப் தண்ணீரில் இஞ்சி, மல்லி விதை மற்றும் மிளகு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து , அதை வடிகட்டி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து சூடாக பருக வேண்டும். இது தொண்டை வலியும், சளியும் குறைய உடனடி நிவாரணம் தரும்.

Jun 28, 2025

வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் அதிமதுரம் பொடி.

.அதிமதுர பொடி ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவில் ஊறவைக்க வேண்டும் காலையில் சோறு வடித்த கஞ்சியில், கலக்கி குடித்து வந்தால் எப்பேர்ப்பட்ட அல்சரும் குணமாகும்.அதிமதுரத்தை வாயிலிட்டு சுவைக்கும்பொழுது, மிகவும் இதமான இனிப்புச்சுவை தொண்டையினுள் இறங்குவதை, வாழ்நாளில் மறக்கவே முடியாது. அதிமதுரத்தின் சுவையும், குளிர்ச்சியும் நீண்டநேரம்  நாவிலும், தொண்டையிலும் நீடித்து நிற்கும். உமிழ்நீர் சுரப்பினை அதிகரித்து, நாவறட்சி, தொண்டை பிரச்சனைகளை குணமாக்குகிறது. கண்நோய்கள், எலும்புநோய்கள்  இருமல், சளி தலைவலி, மஞ்சள்காமாலை, புண்கள் போன்றவற்றை குணப்படுத்தப் பயன்படுகிறது. அதிமதுர வேர் மூக்கில் ரத்தம் வடிதல், காக்கை வலிப்பு, படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. நரம்புதளர்ச்சி ,பித்தம், கப நோய்களுக்கு கசப்பில்லா இனிப்பு மருந்து அதிமதுரம்.வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் அதிமதுரத்தை பொடி செய்து சாப்பிட்டால் மிகவும் நல்ல பலனை பெறலாம்.

Jun 27, 2025

சிறுநீரக கல், சிறுநீர் அடைப்பு நீங்க...

கோதுமை மற்றும் உளுந்தை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை குடிக்கவும். மீதமுள்ள கோதுமை மற்றும் உளுந்தை அரைத்து, ரொட்டி செய்து சாப்பிடவும். ஒன்றரை மாதங்களில் சிறுநீரகக் கல்லாக இருந்தாலும் சரி, சிறுநீர்ப்பையில் உள்ள கல்லாக இருந்தாலும் சரி,வெடித்து சிதறும்.பாதாம் பிசினை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் நெஞ்செரிச்சல், சிறுநீர் அடைப்பு நீங்கும்.

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 36 37

AD's



More News