தினமும்7 கருப்பு உலர் திராட்சையை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை அருந்தி விட்டு, பின்னர் உலர் திராட்சை பழத்தையும் சாப்பிடுங்கள், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடல் எடை குறைய உதவும், சிறுநீரக நோய்கள் குணமாகும் .கருப்பு உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், காலையில் உங்கள் குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது, இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து, இரத்த சோகையை தூர விரட்டும், மேலும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை நீங்கும். நரம்பு தளர்ச்சி நீங்கும். மேலும் எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.
கண்களை ஆரோக்கியமாகவும், பார்வையை தெளிவாக வைக்க உதவுகிறது.ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களைத் தடுக்கிறது.உடலுக்கு வலிமையை தருகிறது. செரிமானத்தை சீராக்குகிறது. அஜீரணம், வாயுத்தொல்லை பிரச்சனைகளை சரி செய்கிறது.திரிபலா பொடி சருமப் பிரச்சனைகளை சரி செய்கிறது. தொடந்து எடுத்துக் கொள்வதால் பொலிவை ஏற்படுத்தும் மற்றும் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கும்.எந்தவொரு மூலிகையையும் தகுந்த மருத்துவரின் பரிந்துரை படி எடுக்கவேண்டும்.
தினமும்3,4 கருவேப்பிலை, அதிகாலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால்கண் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும். மாலைக்கண் நோய் மற்றும் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.ரத்தத்தில் உள்ள சர்க்கரை நோயை குறைக்கும். இதனால் சர்க்கரை நோயாளிகள் இதை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.மேலும் செரிமானத்திற்கும் கருவேப்பில்லை உதவியாக இருக்கும். மலச்சிக்கல், அமிலத்தன்மை, வயிறு உப்புதல் ஆகியவற்றை இது நீக்கும். இதில் ஆண்டிபயாடிக் தன்மைகள் காணப்படுவதால், தொற்று நோய்களை தடுக்க உதவுகிறது.கறிவேப்பிலை இலைகளை சிறந்த முடி டானிக்காக பயன்படுத்தலாம்.கறிவேப்பிலை இலைகளை கொதிக்க வைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, உச்சந்தலையில் தடவவும்.குறைந்தது15 முதல்20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். முடி நன்றாக வளர்வதற்கு வாரத்திற்கு இரண்டு முறை இதனை கடைபிடிக்கவும்.
அமரும்போது வலையாதீர்கள்.தினமும் 21 முறையாவது குனிந்து காலை தொட்டு நிமிருங்கள்.நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள்.சுருண்டு படுக்காதீர்கள். கனமான தலையணைகளை தூக்கி எறியுங்கள்.தினம் 23 நிமிடங்கள் வேகமாக நடங்கள்.70 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.டூ வீலர் ஒட்டும் போது குனிந்து ஓட்டாதீர்கள் .பலுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள்.காலை 20 முறை மாலை 20 முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்.
இளநீர் நம் உடலுக்கு நல்லது என்றாலும், அதை வெறும் வயிற்றில் குடிக்கக் கூடாது. தூங்கி எழுந்தவுடன் நம் வயிறு சற்று சூடாக இருக்கும், அந்த சமயத்தில் இளநீர் குடித்தால் அதன் அதிகப்படியான குளிர்ச்சியூட்டும் தன்மையால், நம் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.எனவே இளநீரை உணவு இடைவேளையில் தான் அருந்த வேண்டும்.இளநீரில்94% நீர் உள்ளது மற்றும் முற்றிலும் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாதது. இளநீரை பானமாக உட்கொள்ளும்போது பெரும்பாலான பெரியவர்களுக்கு பாதுகாப்பானது. இருப்பினும், அதிக அளவில் உட்கொண்டால், இளநீர் இரத்தத்தில் பொட்டாசியம் அளவு அதிகரிக்கச் செய்யும்.
தினமும் தயிரை சாப்பிடுவதால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாது. இதயம் வலுப்பெறும்.நோய் எதிர்ப்பு செல்கள் தூண்டப்படும். மேலும் பெண்களுக்கு பிறப்புறுப்பில் வரும் தொற்றுக்களை எதிர்க்கிறது. தயிர், கார்டிசால் சுரப்பை தூண்டி, சம நிலையின் வைக்க உதவுகிறது.இதனால் உடல் எடை குறைக்கிறது.தினமும் தயிர் சாப்பிடுவது உடலில்கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும். தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.
ஒரு வாரமாக உங்கள் தலையணை உறையை துவைக்கவில்லை என்றால், நீங்கள் ஒரு கழிப்பறை இருக்கையை விட 17,000 மடங்கு அசுத்தமான ஒன்றின் மீது தூங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என National Sleep Foundation வெளியிட்ட ஆய்வு தகவல், இதில் முகப்பரு, ஒவ்வாமை மற்றும் தோல் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் கிருமிகளும் அடங்கும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கருப்பு மிளகுடன் தேன் சேர்த்து சாப்பிடுவதால் அழற்சி எதிர்ப்பு, மூட்டு விறைப்பு, கீல்வாதம் போன்ற பிற வலிகளுக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது. தேன் மற்றும் கருப்பு மிளகு கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது எடை இழப்புக்கு வழி வகுக்கும். தேன் இல்லாவிட்டாலும் கருப்பட்டி சேர்த்து சாப்பிடலாம்.
வெந்தயம் ஊற வைத்த நீரை தினமும் காலையில் வெரும் வயிற்றில் குடித்து வத்தால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி உடல் வெப்பத்தை தணிக்க உதவுகிறது.வெந்தயம் ஊறவைத்த நீரை தினமும் காலையில் குடித்து வருவதால் இதில் இருக்கும் எண்ணெய் பசை முடி கொட்டும் பிரச்சனையை சரி செய்து முடி அடர்த்தியாக வளர உதவுகிறது.வெந்தயத்தில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சந்துக்கள் அதிகம் இருப்பதால் இது இதயத்தை பலமாக வைக்க உதவுகிறது
கடல்பாசி என்பது கடலில் வாழும் ஒரு வகை தாவரம். இது சிவப்பு, பழுப்பு, பச்சை நிறங்களில் இருக்கும். கடல் பாசியை சமையலில் பயன்படுத்தலாம். கடல் பாசியில் ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்துள்ளன.கடல் பாசிஎலும்புகளை உறுதியாக்கும்.தைராய்டை சரிசெய்யும்.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.எடை குறைக்க உதவும்.வயிறு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.நீரிழிவை கட்டுக்குள் வைக்கும்.