டீ. காபிக்கு பதில் நாள்தோறும் சோம்பு தண்ணீர் அருந்துவதால் ,பசி உணர்வை தூண்டும்.செரிமானப் பிரச்னைகளுக்கு நிரந்த தீர்வு.சிறுநீரகப் பிரச்னைகளை தடுக்கும்.கொழுப்பை குறைத்து எடையை கட்டுப்படுத்தும்.ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்தும்.தொப்பை குறைந்து கட்டுடல் உருவாகும்.வளர்சிதை மாற்றத்தை சரிசெய்யும்.சோம்பலை முறிக்கும் சோம்பு தண்ணீர்.மூளை சுறுசுறுப்பு, புத்துணர்ச்சிக்கு உதவும்.
மலேசியா மற்றும் இந்தோனேசியாலை தாயிடமாகக் கொண்டுள்ள இப்பழத்தை ''ரம்புட்டான்' என்பார்கள். இது நீர்ச்சத்து வழங்கி, தோல் பொலிவாகவும், ஜீரணத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும், இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் ரத்த சர்க்கரை கட்டுப்படுத்த உதவுகிறது.
இரத்த அழுத்தம், இதயம் மற்றும் பக்கவாதம் போன்ற பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். உயர் இரத்த அழுத்தம் கண் பார்வையை குறைக்கும். உணவில் குறைந்த அளவு உப்பை உட்கொள்வது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது, உணவின் சுவையை முழுமையாக வைத்திருக்கிறது.அத்துடன் பல நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது.
வயிற்றுவலி, வயிற்றுக்கோளாறு, வாந்தி, இருமல், வயிற்றுஉப்புசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மனஇறுக்கம், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள், தோலில் வறட்டுத் தன்மை, சுவகைளை உணரமுடியாத நாக்கு, பித்தம், ஆகிய அனைத்து நோய்களையும் குணமாக்க வல்ல அரிய கீரை புதினாக் கீரையாகும்.புதினா டீ ஒரு டம்ளர் தண்ணீரில் புதினாஇலை, தேயிலைச் சேர்த்துக் கொதிக்கவைத்து, தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துப் பருகவும். தேன் அல்லது பனங்கற்கண்டுக்கு பதிலாக கருப்பட்டி சேர்த்தும் பருகலாம். எலுமிச்சைசாறு சேர்த்து குடிக்கலாம். சுவை அற்புதமாக இருக்கும்.
ப்ளு டீ என்பது சங்குப்பூவில் செய்யப்படும் டீ ஆகும். இது சீனாவில் பிரபலம். ப்ளு டீ கொழுப்பை குறைப்பதால் உடலின் எடை குறைந்துவிடும். இதில்ஆன்டிஆக்ஸிடன்ட்கள்நிறைந்துள்ளன .இது சர்க்கரை நோயாளிகளுக்கு குளுகோஸின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது உடலின் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது, ப்ளு டீ இரத்த ஓட்டத்தை அதிகரித்து இதய நோய் பாதிப்பை குறைக்கிறது.ப்ளூ டீயில் பயோஃப்ளேவனாய்டு என்ற கலவை உள்ளது, இது உடலுக்கு பாதுகாப்பு ஆக்ஸிஜனேற்றிகளை வழங்க செயல்படுகிறது. இவை நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன.நீல சங்கு பூ டீ, நரைத்தல் மற்றும் முடி உதிர்வதைத் தடுப்பதன் மூலம் இழந்த பிரகாசத்தைத் திரும்பக் கொண்டுவருகிறது.உடலில் வலி மற்றும் காய்ச்சலைக் குறைக்கிறது. ப்ளூ டீ சுவாசக் கோளாறுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது . சளி மற்றும் இருமல் ஆகியவற்றிற்கும் பயனுள்ளதாக இருக்கும். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நுரையீரலின் வீக்கத்தைக் குறைக்கவும், உடலில் இருந்து அதிகப்படியான திரவத்தை அகற்றவும் உதவுகிறது.
உடல் எடையை துரிதமாக குறைக்க விரும்புபவர்கள் லிச்சி பழத்தை சாப்பிடலாம்.உடலில் சேரும் தேவையற்ற கொழுப்புகளை வெளியேற்றி உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள லிச்சி உதவுகிறது.ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து ரத்தசோகை ஏற்படாமல் தடுக்கிறது.இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
வெள்ளை மற்றும் கருப்பு என இரண்டு விதமான கொண்டைக்கடலையை அதிகம் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. இதில் கருப்பு கொண்டைக்கடலையில் புரதச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகமுள்ளது.முளைகட்டிய கொண்டைக்கடலையை சமைத்தோ அல்லது சமைக்காமலோ சாப்பிடலாம், இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் இது மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களின் சிறந்த மூலமாகும். இதில் வைட்டமின் ஏ, பி6, துத்தநாகம் மற்றும் மாங்கனீசு போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன.நீரிழிவு நோயாளிகளுக்கு கருப்பு கொண்டைக்கடலை சிறந்த உணவாகும். முளைக்கட்டிய கொண்டைக்கடலையை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவது நல்லது.உடலின்வலிமையைஅதிகரிக்க,முளைகட்டியகொண்டைக்கடலையில் எலுமிச்சை, இஞ்சி, லேசான உப்பு, கருப்பு மிளகு சேர்த்து காலையில் காலை உணவாக சாப்பிட்டு வந்தால், நாள் முழுவதும் ஆற்றல் கிடைக்கும்.
உணவுப் பாதையில் ஏற்படும் ஆறாத புண்கள் தான் நாம் அல்சர் என்கிறோம். இவற்றை பெப்டிக் அல்சர் என்று அழைப்பார்கள். இவை புற்றுநோயாக மாறும் ..கேஸ்ட்ரிக் (or) இரைப்பையில் அல்சர் இரைப்பையில் அதிக அளவு அமிலத்தன்மை தேங்கி நிற்பதால் எந்த உணவு சாப்பிட்டாலும், உடனே மேலே வரும்; வயிற்று வலியுடன் இரத்தம் கலந்த வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்படும்; ஹெலிக்கோபேக்டர் பைலோரி என்ற பாக்டீரியா காரணமாக உண்டாகும். இந்த வகை வயிற்றுப்புண் புற்றுநோயாக மாறும் தன்மை கொண்டது.குடற் முதற்பகுதி ( or) டுயோடினம் அல்சர்குடலின் முதல் பகுதியை டுயோடினம் என்பார்கள். இதில் ஏற்படும் புண்களை டுயோடினல் அல்சர் என்பார்கள்; இதில் வயிற்று வலி உணவு உண்ட பின் சரியாகும்; அதிக பசி ஏற்படும்; இதனால் உடல் எடை அதிகரிக்கும். அதிக ஆபத்து இல்லாத வகை இது.. அமிலத்தன்மை குறைக்கும் மருந்துகள் மருத்துவரின் ஆலோசனை படி எடுத்து கொண்டால் நல்லது.
40 வயதிற்கு மேற்பட்ட ஒரு சிலருக்கு கண்ணாடி இல்லாமல் எதுவும் படிக்க முடியாது.இதனை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடி செய்து, தேன் கலந்து சாப்பிட்டு வர வெள்ளெழுத்து மாறும்,கண்ணில் உண்டாகும் வெண்படலமும் மறைந்து கண் பார்வை சரியாகும்.முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். முருங்கைப் பூ அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
சாதத்தில் தண்ணீர் ஊற்றி மறுநாள் காலையில் பழைய சோற்றை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சி, வலிமை தருவதுடன் வயிற்றுக்கோளாறு அலசர். மூட்டு வலி, தோல் நோய்கள் ஆகியவை பாதிக்காமல் பாதுகாக்கிறது.பழைய சோற்றில் தயிர் ஊற்றி சாப்பிடக்கூடாது. மோரைக் கடைந்து ஊற்றி சாப்பிட வேண்டும்.சாதம் வெதுவெதுப்பாக இருக்கையில் பசும்பால் ஊற்றி சாப்பிட்டால் தண்ணீர்த் தாகம் ஏற்படுவதும், பித்தம் உண்டாவதும் நீங்கும்.பச்சரிசி சோற்றில் பால் சேர்த்துச் சாப்பிட வாதம், பித்தம் நீங்கும்.மோர் சாதம் செரிமானக் கோளாறுகளை நீக்கி, வாதம், பித்ததை தணிக்கிறது. சாம்பார் சோறு வயிற்று பொருமலுக்கு மிகவும் நல்லது.