பன்னீர் ரோஜாவில் உள்ள மருத்துவ குணங்கள்
பன்னீர் ரோஜா இந்திய மருத்துவத்தில் ஒரு சிறப்பு வாய்ந்த மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது.
பன்னீர் ரோஜா மலச்சிக்கலை தீர்க்கிறது. இதன் மொட்டுகளை அரைத்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்.
பன்னீர் ரோஜா அஜீரணத்தைச் சரிசெய்யும் தன்மை கொண்டது. பன்னீர் ரோஜா சாறு அல்லது கசாயம் குடிப்பதன் மூலம் பித்தம் மற்றும் உடலில் சூட்டை குறைக்க முடியும்.
பன்னீர் ரோஜாவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இளமையை இருக்க உதவியாக இருக்கும்.
பன்னீர் ரோஜா சருமத்துக்கு நல்ல பொலிவு மற்றும் மென்மை அளிக்கிறது. இதன் பூக்களை எடுத்து அதைப் பசும்பாலில் கலந்து முகத்தில் பூசினால் சருமம் பளபளப்பாக மாறும்.
பன்னீர் ரோஜாவில் அடங்கியுள்ள வைட்டமின் சி, சருமத்திற்கு அழகையும் பாதுகாப்பையும் அளிக்கக்கூடியது. அரைத்த பன்னீர் ரோஜா இதழ்கள் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவில் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
சருமம் பளபளப்பை இழந்து எண்ணெய் வடிவதால் முகப்பருக்கள் தோன்றுகின்றன. இந்த பிரச்சனை அகல இரு பன்னீர் ரோஜா இதழ்கள், கற்றாழை ஜெல் ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து தடவலாம்.20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் பருக்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் அகலும்,
0
Leave a Reply