வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் அதிமதுரம் பொடி.
.அதிமதுர பொடி ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு இரவில் ஊறவைக்க வேண்டும் காலையில் சோறு வடித்த கஞ்சியில், கலக்கி குடித்து வந்தால் எப்பேர்ப்பட்ட அல்சரும் குணமாகும்.
அதிமதுரத்தை வாயிலிட்டு சுவைக்கும்பொழுது, மிகவும் இதமான இனிப்புச்சுவை தொண்டையினுள் இறங்குவதை, வாழ்நாளில் மறக்கவே முடியாது. அதிமதுரத்தின் சுவையும், குளிர்ச்சியும் நீண்டநேரம் நாவிலும், தொண்டையிலும் நீடித்து நிற்கும். உமிழ்நீர் சுரப்பினை அதிகரித்து, நாவறட்சி, தொண்டை பிரச்சனைகளை குணமாக்குகிறது.
கண்நோய்கள், எலும்புநோய்கள் இருமல், சளி தலைவலி, மஞ்சள்காமாலை, புண்கள் போன்றவற்றை குணப்படுத்தப் பயன்படுகிறது. அதிமதுர வேர் மூக்கில் ரத்தம் வடிதல், காக்கை வலிப்பு, படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. நரம்புதளர்ச்சி ,பித்தம், கப நோய்களுக்கு கசப்பில்லா இனிப்பு மருந்து அதிமதுரம்.
வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் அதிமதுரத்தை பொடி செய்து சாப்பிட்டால் மிகவும் நல்ல பலனை பெறலாம்.
0
Leave a Reply