தமிழகத்தின் முதல் பெண் சர்வதேச வாலிபால் போட்டியில் நடுவர் பவித்ரா.
சர்வதேச வாலிபால், ஆசிய வாலிபால் கூட்டமைப்பு சார்பில், உஸ்பெகிஸ்தானில் சர்வ தேச வாலிபால் நடுவர் தேர்வு நடந்தது. இந்தியா சார்பில் 3 பேர் உட் பட சர்வதேச அளவில் 22 பேர் பங்கேற்றனர். எழுத்து தேர்வு போட்டி விதிகள், தொழில் நுட்பங்கள் குறித்து நடந்தது. போட்டிகளில் நடுவராக செயல்பட வைத்து, செயல்பாட்டிற்கு ஏற்ப மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. கடைசியாக உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் சிறப்பாக செயல் பட்ட தமிழகத்தின் பொள்ளாச்சியை சேர்ந்த பவித்ரா 30, நடுவரானார். தமிழகத்தின் முதல் பெண் சர்வதேச வாலிபால் போட்டியில் நடுவர் என பெருமை பெற்றார்.
0
Leave a Reply