பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உட்கொண்டது.பீட்டா கரோட்டின் கண்பார்வை அதிகரிக்கிறது.அமிலத்தன்மையை சமன்செய்யும்.தசைகளின் சீரழிவு தடுக்கிறது. செரிமானத்திற்கு உதவுகிறது.வைரஸ்களை எதிரிடுகிறது.வீக்கத்தை குறைக்கிறது.மூட்டு வலி குறைக்கிறது.வலுவான எலும்புகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும் வலூவாகவும் வைக்கிறது.
வைட்டமின் C சத்தானது, சளி, காய்ச்சலை குணப்படுத்த உதவுகிறது. குறிப்பாக நுரையீரலை பாதுகாத்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் வைட்டமின் C அவசியம். இதற்கு ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களை உட்கொள்ளுங்கள். வெதுவெதுப்பான நீரில் அரை பாதி எலுமிச்சை சாறு பிழிந்து 2-3 முறை தினமும் குடியுங்கள்.
மக்காசோளத்தில் உள்ள வைட்டமின் சி மற்றும் கரோட்டினாய்ட்ஸ் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலை போக்கும்.அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டது.நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கிறது.எலும்பு வலிமைக்கு உதவுகிறது.
துத்தி இலை மூலநோயை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் உஷ்ணத்தால் அல்லது மலச்சிக்கலால் வரக்கூடிய மூலநோயை துத்தி இலை குணப்படுத்துகிறது. காலை எழுந்ததும் துத்தி இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறைந்து மூலநோய் குணமாகிவிடும்.மேலும் துத்தி இலையின் சாறை காலை வெறும் வயிற்றில் 2 ஸ்பூன் குடித்து வர மலச்சிக்கல் வராது.
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸ் உடன் சீரகம் கலந்து பருகி வந்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். மோருடன் சீரகம், இஞ்சி. சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாய்வுத் தொல்லை நீங்கும்.ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.இரத்தம் அதிகரிக்கவும் இரத்தத்தை சுத்திகரிப்பு செய்யவும் உதவும்.நல்ல தூக்கத்திற்கு உதவும்.இளநரை, கண் எரிச்சல் பிரச்சனைகள் சரியாகும்வாய் துர்நாற்றம், பற்சிதைவு பிரச்சனைகள் நீங்கும்.வயிற்று வலி மற்றும் செரிமான பிரச்சனைகள் சரியாகும்.
அல்சர் உள்ளவர்களும், மஞ்சள் காமாலை உள்ளவர்களும் ஊறுகாய், மிளகாய் இரண்டையும் சேர்த்துக் கொள்ளக்கூடாது.ஆஸ்துமா உள்ளவர்கள், சளி அதிகம் உள்ளவர்கள் தக்காளி, பூசணிக்காய் முள்ளங்கி ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது.பழங்களை சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. அதன் தாதுச்சத்து உணவுடன் கலந்து பலனற்றுப் போய்விடும்.
இரவில் தேன் கலந்து சாப்பிட்டால் இதயம் வலிமை பெறும்.பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சக்தி கிடைக்கும்.மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் ஊறும்.எலுமிச்சம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குறையும்.ஆரஞ்சுப் பழச்சுளையில் தேன் கலந்து சாப்பிட்டால் தூக்கம் வரும்.தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து சாப்பிட குடல் புண். வாய்ப்புண் குணமாகும்.இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.சுண்ணாம்பில் தேன் கலத்து கட்டிகள் உள்ள இடத்தில் தடவ வீக்கம் குறையும்: கட்டிகளும் ஆறிவிடும்.
கேழ்வரகில் சமைத்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.எள்ளில் செய்த உணவை சாப்பிட வேண்டும்.எலும்புகள் உறுதியாக. வலுவாக இருக்க பப்பாளி, பீன்ஸ்... பாதாம் முந்திரி.. நட்ஸ். பிரண்டை ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள எலும்புகள் பலமாக இருக்கும்.
உருளைக் கிழங்கு அதிக வெளிச்சம் படும் இடத்தில் வைக்கப் பட்டால் பச்சை நிற திட்டுக்கள் உண்டாகும்.நாள் பட்ட கிழங்கு முளை விட்டிருக்கும் அதை அப்படியே சாப்பிட்டால் அதிலுள்ள நச்சுத் தன்மை தலைவலி,வயிற்று உபாதையை ஏற்படுத்தும்.முளைத்த பகுதி,பச்சை நிற பகுதி வெட்டி விட்டுப் பயன்படுத்தலாம்.
பாகற்காயை தோலை சீவி விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இதை மிக்சியில் போட்டு தேன், எலுமிச்சை சாறு சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் உப்பு, மிளகுதூள், தண்ணீர் சேர்த்து கலக்கினால் பாகற்காய் ஜூஸ் ரெடி .இது கல்லீரல் பிரச்சனை வராமல் தடுக்கும். மேலும், நீரிழிவு, இருமல், ஆஸ்துமா உள்ளிட்ட கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது.