மீத்தேனைக் குறைக்கும் தாது (Halloysite)
புவி வெப்ப மயமாத லுக்குக் காரணமானவை பசுமை வாயுக்கள். இவற்றில் ஒன்று மீத்தேன். புவி வெப்பம் அதிகரிப்பதில் கரியமில வாயுவை விட 25 மடங்கு ஆபத்தானது இது.பால், இறைச்சிக்காக அதிக அளவில் வளர்க்கப்படும் கால்நடைகளே 40 சதவீத மீத்தேனை வெளியிடுகின்றன. கால்நடைகள் நார்ச்சத்து மிகுந்த புற்களை அதிக மாக உண்பதால் தான் இவ்வாறு மீத்தேனை வெளியிடுகின்றன.
இதைக் குறைப்பதற்கு என்ன செய்யலாம் என்று விலங்கியலாளர்கள் பல் வேறு ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். சிலவகை உணவுகளைக் கொடுத் துப்பார்த்தனர்.ஆனால்,எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.
இந்தநிலையில்தான்ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நியூகேசில் பல்கலையைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் இதற்குத் தீர்வு கண்டுள்ளார். சாதாரண களிமண்ணில் உள்ள தாது ஹாலோசைட் (Halloysite), இதில் அலுமினோசிலிகேட், பிராணவாயு, சிலிகான், அலுமினியம், ஹைட்ரோஜன் ஆகியவை உள்ளன. கால்நடைகளுக்கான தீவனத்தில் இந்தத் தாதுவைச் சேர்த்து உண்ணக் கொடுத்தார்கள்.
24 மணிநேரத்தில் கால்நடைகள் வெளியிடும் மீத்தேன் அளவு 30 சதவீதம் குறைந்துவிட்டது. கால்நடைகளின் குடலில் உள்ள நுண்ணுயிரிகள் தான் மீத்தேனை உருவாக்குகின்றன. இந்தத் தாது அந்த நுண்ணுயிர்கள் மீத்தேனை உருவாக்கவிடாமல் தடுக்கிறது. இந்தத் தாதுவை உண்பதால் கால்நடை களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. மாறாகக் குடல் அமிலத்தன்மை குறைதல் உள்ளிட்ட சில நன்மைகள் ஏற்பட்டன. தாது அவற்றின் தங்காமல் சாணத்துடன் வெளிவருகின்றன. எனவே, இது முற்றிலும் பாதுகாப்பானது. இந்தத் தாதுவை எளிமைப்படுத்தி உண்ணத்தக்க வகையில் மாற்ற ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
0
Leave a Reply