கம்பங்களி சாப்பிட.....
கம்பை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்து வரும்போது, கம்பு மாவை அதில் சேர்த்து கட்டியாகாமல் கிளறி இறக்கி சாப்பிடலாம்.
கால்சியம், புரதம், இரும்பு, கனிமச் சத்துகள் என அனைத்து சத்துகளுமே கம்பில் உள்ளது.
வளரும் குழந்தைகளுக்கும், பருவடைந்த பெண்களுக்கும் அவசியம் தர வேண்டிய உணவு.
சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு, ஆகிய பிரச்சனைகளில் இருந்தும் இது காக்கிறது.
சருமம், கண்பார்வைக்கு அவசியமான வைட்டமின் A, பீட்டா கரோட்டின் கம்பில் அதிகளவில் உள்ளது.
கம்பு, வேண்டாத கொழுப்புகளை உடலில் தங்கவிடாது.
0
Leave a Reply